பார்சிலோனா, ரியல் மெட்ரிட் இலகு வெற்றி

89

ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் ஒசாசுனா

ஒசாசுனா அணிக்கு எதிரான போட்டியை 4-1 என்ற கோல் கணக்கில் இலகுவாக வென்ற ரியல் மெட்ரிட் அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் 3 புள்ளி இடைவெளியுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. 

யுனை கார்சியா தலையால் முட்டிப் பெற்ற கோல் மூலம் ஒசாசுனா அணி 14 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றபோதும் ஐந்து நிமிட இடைவெளியில் இஸ்கோ மற்றும் செர்கியோ ராபோஸ் பெற்ற கோல்கள் மூலம் ரியல் மெட்ரிட் முதல் பாதியில் முன்னிலை பெற்றது.  

ப்ரீமியர் லீக் பட்டத்தை நெருங்கும் லிவர்பூல்: அட்லடிகோவை வீழ்த்தியது மெட்ரிட்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில …

ஐந்து போட்டிகளுக்குப் பின் களமிறங்கிய கரெத் பேல்லுக்கு பதில் வீரராக வந்த லூகாஸ் வாஸ்கியுஸ் 84 ஆவது நிமிடத்திலும் மேலதிக நேரத்தில் லூகா ஜோவிக் பெற்ற கோல் மூலமும் ரியல் மெட்ரிட் இலகு வெற்றி ஒன்றை சுவைத்தது.   

ரியல் மெட்ரிட் அணி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ரியல் சொசிடாட் அணிக்கு எதிரான கோப்பா டெல் ரே காலிறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையிலேயே சினடின் சிடேன் வலுவான அணி ஒன்றை இந்தப் போட்டிக்கு களமிறக்கியமை குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக 30 வயதான பேல் கடந்த ஜனவரியில் உபாதைக்கு உள்ளாகி சுகம்பெற்ற நிலையிலும் கடந்த மூன்று போட்டிகளிலும் களமிறக்கப்படாத நிலையிலேயே இந்தப் போட்டியில் விளையாடினார்.  

பார்சிலோனா எதிர் ரியல் பெட்டிஸ்

லியோனல் மெஸ்ஸியின் மூன்று கோல் உதவிகளுடன் ரியல் பெட்டிஸ் அணியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்த பாரிசிலோ அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட்டுக்கு போட்டியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. 

பெனிட்டோ வில்லமாரின் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளிலும் சிவப்பு அட்டை பெறப்பட்டதால் கடைசி நேரத்தில் இரு அணிகளும் 10 வீரர்களுடனேயே ஆடின. 

புனித ஹென்றியரசரை வீழ்த்திய புனித ஜோசப் அரையிறுதியில்

Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் நடப்புச் ……………..

செர்கியோ கனல்ஸ் ஆறாவது நிமிடத்தில் பெற்ற பெனால்டி உதை மூலம் பெட்டிஸ் முன்னிலை பெற்றபோதும் மெஸ்ஸி நீண்ட தூரத்தில் இருந்து வழங்கிய பந்தை சிறப்பாக கட்டுப்படுத்தி பிரன்கி டி ஜொங் 9ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.  

எனினும் 23 ஆவது நிமிடத்தில் நபில் பெக்கிஸ் பெற்ற சிறப்பான கோல் மூலம் பெட்டிஸ் மீண்டும் போட்டியில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் ப்ரீ கிக் மூலம் மெஸ்ஸி வழங்கிய பந்து சரியாக செர்கியோ பஸ்குட்ஸ் இடம் செல்ல அவர் அதனை வலைக்குள் புகுத்தியதன் மூலம் பார்சிலோனா மீண்டும் பதில் கோல் திருப்பியது.

இதன்மூலம் முதல் பாதியில் 2-2 என்று சமநிலை பெற்ற போட்டியின் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் மெஸ்ஸியின் இரண்டு கோல் முயற்சிகளை எதிராணி கோல்காப்பாளர் தடுத்தார்.

இந்நிலையில் 73 ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக்கை உதைத்த மெஸ்ஸி பந்தை லெங்லட்டிடம் வழங்க அவர் பார்சிலோனா அணியின் வெற்றி கோலை புகுத்தினார்.  

இந்நிலையில் பெட்டிஸ் அணிக்காக கோல் பெற்ற நெபில் பெக்கிர் 76 ஆவது நிமிடத்திலும் பார்சிலோனா சார்பில் கோல் பெற்ற லெங்லட் 79 ஆவது நிமிடத்திலும் இரட்டை மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டனர். 

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் லியோன்

லியோன் அணிக்கு எதிரான போட்டியை 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்ற பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழாவது லீக் 1 பட்டத்தை நெருங்கியுள்ளது. 

Vantage FA கிண்ணம் பொலிஸ் அணி வசம்

இறுதிப் போட்டியில் சோண்டர்ஸ் விளையாட்டுக் …………..

இதுவரை 24 போட்டிகளில் ஆடியிருக்கும் PSG அணி 61 புள்ளிகளுடன் முதலித்தில் ஆதிக்கம் செலுத்துவதோடு இரண்டாவ இடத்தில் இருக்கும் மெர்செய்லே அணி 12 புள்ளிகள் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதில் இரண்டாவது பாதியில் பதில் வீரராக களமிறங்கிய எடிசன் கவானி கோல் பெற்று தமது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பியதோடு நெய்மார் உபாதையால் இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை. 

உருகுவே முன்கள வீரரான கவானி காயத்தில் இருந்து மீண்டு வந்து ஆறு மாதங்களுக்கு பின்னர் தனது முதல் கோலை பெற்றார். தவிர PSG அணி சார்பில் அன்கெல் டி மெரிஸ், கைலி ம்பப்பேவுடன் பெர்னாண்டோ மார்கல் சுராசியமான ஓன் கோல் ஒன்றையும் பெற்றார். 

47 ஆவது நிமிடத்தில் வைத்து மார்கா பந்தை உதைத்தபோது லியோன் கோல் கம்பத்திற்கு அருகில் எந்த PSG வீரரும் இருக்கவில்லை. ஆனால் லியோன் பின்கள வீரர் பெர்னாண்டோ மார்கல்  பந்தை தனது சொந்த வலையின் மேற்பக்கமாக புகுத்தினார்.    

இரண்டாவது பாதியில் மார்டின் டெர்ரே மற்றும் மூசா டம்பல்லே பெற்ற இரட்டை கோல் மூலம் லியோன் அணி கோல் வித்தியாசத்தை 3-2 என குறைத்தபோதும் கவானி பெற்ற கோலினால் PSG அணியின் வெற்றி உறுதியானது.   

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<