2021இல் இலங்கை வலைப்பந்தாட்டத்துக்கு அதிக போட்டிகள்

148
Sri Lanka Netball Team

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டுள்ளன. உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  

இந்த நிலையில், இவ்வருடத்தில் நடைபெறவுள்ள பெரும்பாலான போட்டிகள் நடைபெறாவிட்டால், அடுத்த வருடம் முதல் இலங்கையின் வலைப்பந்தாட்ட விளையாட்டுக்கு அதிக உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட வருடமாக அமையவுள்ளது

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் திலகா ஜினதாச இராஜினாமா

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர்

இதில் குறிப்பாக, 6ஆவது ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புகலை விளையாட்டு விழா எதிர்வரும் 2021ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இதில் 24 போட்டி நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

இதில் முதல்தடவையாக வலைப்பந்தாட்டம் மற்றும் கால்பந்தாட்டம் ஆகிய இரண்டு போட்டிகளும் ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புகலை விளையாட்டு விழாவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன

இதன்படி, ஆசியாவின் முன்னணி வலைப்பந்தாட்ட நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளுடன், ஆசிய பசுபிக் வலையத்தைச் சேர்ந்த பிரபல பிஜி தீவுகள் மற்றும் சமோவா உள்ளிட்ட நாடுகளும் இதில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இறுதியாக கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் பிஜி தீவுகள் மற்றும் சமோவா ஆகிய நாடுகள் முறையே 13ஆவது மற்றும் 14ஆவது இடங்களையும், இலங்கை 15ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன

உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்

உலக வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த ஜுன் மாதம் 30ஆம் திகதி வரையான

இந்த நிலையில், 2020இல் நடைபெறவிருந்த ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர், 2021இல் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டிகள் மற்றும் அண்மையில் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்த திலகா ஜினதாச உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி லக்ஷ்மி விக்டோரியா எமது இணையத்தளத்துக்கு விசேட செவ்வியொன்றை வழங்கியிருந்தார். இதன்போது அவர்,

“முதலில் வலைப்பந்தாட்ட விளையாட்டை ஆசிய உள்ளக போட்டிகளில் இடம்பெறச் செய்வதற்கு ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

இதன்மூலம் இலங்கைக்கு உலக மற்றும் ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர்களுக்கு மேலதிகமாக ஆசிய உள்ளக விளையாட்டு விழா வலைப்பந்தாட்டத் தொடரிலும் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வருடம் தென் கொரியாவில் நடைபெறவிருந்த ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் இரத்து செய்யப்படும்

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கு தயாராகும் இலங்கை

இலங்கை வலைப்பந்தாட்ட அணி, கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்

குறிப்பாக, 2023இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடருக்கான ஆசிய அணிகளிள் தேர்வுப் போட்டிகள் 2022இல் நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரின் மூலமாக இடம்பெறும். எனவே, இவ்வருடம் நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது” என தெரிவித்தார்.

இதனிடையே, 2021இல் ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் மற்றும் உலக இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் என்பன நடைபெறவுள்ளதால் இலங்கைக்கு மிகவும் வேலைப்பளு மிக்க வருடமாக அமையவுள்ளது.  

இந்தப் போட்டித் தொடர்களுக்கான ஆயத்தம் குறித்து இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி லக்ஷ்மி விக்டோரியா கருத்து வெளியிடுகையில்

“ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் 2021 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடர் பெரும்பாலும் தென்கொரியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்றார். 

2030 ஆசிய விளையாட்டு விழாவை நடத்த இரண்டு அரபு நாடுகள் போட்டி

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு விழாவை நடத்த சவுதி அரேபியா

அதேபோல, உலக இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் 2021 ஜுன் மாதம் பிஜி தீவுகளில் நடைபெறவுள்ளன எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, அண்மையில் இலங்கை வலைப்பந்தாட்ட பயிற்றுநர் பதவியை இராஜினாமா செய்த திலகா ஜினதாச குறித்து பேசிய அவர்,  

“தேசிய வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக அவர் ஆற்றிய சேவையை நாங்கள் பாராட்டுகிறோம். 2009இற்குப் பிறகு இலங்கைக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுப்பதற்கு முக்கிய காரணமாக அவர் இருந்தார்

அதேபோல, இலங்கையின் வலைப்பந்தாட்ட நாமத்தை சர்வதேச அரங்கில் ஜொலிக்கச் செய்தவர். ஆனால் தற்போது அவர் இராஜினாமா செயதுள்ளார் என்பது தொடர்பில் பேசுவதற்கு நான் விரும்பவில்லை” என அவர் தெரிவித்தார்.  

மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க