பெண்கள் T 20 கிரிக்கெட்டில் நேபாள வீராங்கனை உலக சாதனை

141
Nepal Cricket

மாலைதீவுகள் அணிக்கெதிரான டி20 போட்டியில் நேபாள நாட்டு வீராங்கனை அஞ்சலி சந்த், 13 பந்துகளில் 6 விக்கெட்டுக்களை எடுத்து புதிய உலக சாதனை படைத்தார். 

இது உலக கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் டி20 வரலாற்றில் புதிய பந்துவீச்சு சாதனையாகும். கடந்த மாதம் பங்களாதேஷ் அணிக்கெதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் தீபக் சாஹர் நிகழ்த்திய பந்துவீச்சு சாதனையையும் அஞ்சலி முறியடித்துள்ளார்

பாகிஸ்தானை வைட்வொஷ் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய…..

13-வது தெற்காசிய விளையாட்டு விழா நேபாளத்தில் உள்ள கத்மண்டு, பொக்கராவில் நடைபெற்று வருகிறது. இதில் பொக்ராவில் நேற்று (02) நடைபெற்ற பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் மாலைத்தீவு நேபாளம் அணிகள் மோதின

நாணய சுழற்சியில் வென்ற மாலைத்தீவு அணியின் தலைவி சூனா மரியம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி களமிறங்கிய மாலைதீவுகள் அணி, நேபாள வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 10.1 ஓவர்களில் 16 ஓட்டங்களில் சுருண்டது

அதிகபட்சமாக ஹம்சா நியாஸ் 9 ஓட்டங்களையும், ஹப்சா அப்துல்லா 4 ஓட்டங்களையும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஓட்டமின்றி ஆட்டம் இழந்தனர்

இந்தப் போட்டியில் நேபாள அணிக்காக அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய 24 வயதான அஞ்சலி சந்த் 2.1 ஓவர்கள் பந்து வீசி ஓட்டங்கள் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.   

இந்த ஆறு விக்கெட்டில் கடைசி மூன்று விக்கெட்டுகளை ஹெட்ரிக் விக்கெட்களாக வீழ்த்தி இருந்தார் அஞ்சலி சந்த். அத்துடன் ஒரு ஓட்டத்தையும் கூட கொடுக்காமல் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அஞ்சலி சந்த் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார்

மேலும் இரு பங்களாதேஷ் வீரர்களுக்கு ஒரு வருட தடை

பங்களாதேஷ் அணியின் வீரர் சஹாடட்…..

டி20 சர்வதேச போட்டியில் சிறப்பான பந்துவீச்சு இதுவாகும். இதற்கு முன்பு இந்த வருடம் ஜனவரி மாதம் பங்கொக்கில் நடைபெற்ற சீனாவுக்கு எதிரான பெண்கள் டி20 போட்டியில் மாலைதீவு அணியின் சுழல் பந்துவீராங்கனை மாஸ் எலிசா 4 ஓவர்கள் பந்துவீசி 3 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது

அத்துடன், ஆண்கள் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடந்த மாதம் நடைபெற்ற பங்காளதேஷுக்கு எதிரான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3.2 ஓவர்கள் பந்துவீசி 7 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்ததே சாதனையாக உள்ளது.

இதுஇவ்வாறிருக்க, பின்னர் 17 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் விளையாடிய நேபாள பெண்கள் அணி 0.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இந்தப் போட்டியில் அஞ்சலி சந்த் ஆட்டநாயகி விருது பெற்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<