ஷார்ஜா வொரியர்ஸ் அணியில் விளையாடவுள்ள மொயீன், லிவிஸ், நபி

International League T20 2022

195

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இண்டெர்நெசனல் லீக் T20 (ILT20) தொடரின், ஷார்ஜா வொரியர்ஸ் அணியில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி ஷார்ஜா வொரியர்ஸ் அணியில் பெயரிடப்பட்டுள்ள 14 வெளிநாட்டு வீரர்களில் இங்கிலாந்தின் மொயீன் அலி, கிரிஸ் வோக்ஸ், டேவிட் மலான், ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி மற்றும் மேற்கிந்திய தீவுகளின் எவின் லிவிஸ் ஆகிய முன்னணி வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

>> டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர்கள்!

இதில் மொயீன் அலி ஏற்கனவே தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள லீக் தொடரில் ஜொஹன்னஸ்பேக் சுபர் கிங்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் ILT20 தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமாத்திரமின்றி இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரும் குறித்த காலப்பகுதியில் நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட இந்த தொடர்களுக்கு மத்தியில் மொயீன் அலி எந்த தொடரில் விளையாடுவார் என்ற கேள்விகள் உருவாகியிருக்கின்றன.

மொயீன் அலி மற்றும் மேற்குறிப்பிட்ட வீரர்களுடன் நூர் அஹ்மட், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், நவீன் உல் ஹக், டொம் கொலர்-கெட்மோர், கிரிஸ் பென்ஜமின், டெனி பிரிக்ஸ், மார்க் டெயால், பிலால் கான் மற்றும் ஜேஜே ஸ்மித் ஆகியோரும் ஷார்ஜா வொரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ILT20 தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா 14 வெளிநாட்டு வீரர்களை அணிகளில் இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் கல்ப் ஜயண்ட்ஸ், எம்.ஐ எமிரேட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிகளுடன் தற்போது ஷார்ஜா வொரியர்ஸ் அணியும் தங்களுடைய 14 வீரர்களை அறித்துள்ளது.

ILT20 தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஷார்ஜா வொரியர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்கள்

மொயீன் அலி, கிரிஸ் வோக்ஸ், டேவிட் மலான், மொஹமட் நபி, எவின் லிவிஸ், நூர் அஹ்மட், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், நவீன் உல் ஹக், டொம் கொலர்-கெட்மோர், கிரிஸ் பென்ஜமின், டெனி பிரிக்ஸ், மார்க் டெயால், பிலால் கான், ஜேஜே ஸ்மித்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<