Home Tamil பந்துவீச்சு பலத்துடன் தொடரை சமப்படுத்திய இலங்கை மகளிர் அணி

பந்துவீச்சு பலத்துடன் தொடரை சமப்படுத்திய இலங்கை மகளிர் அணி

Bangladesh women's tour of Sri Lanka 2023

129

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது T20i போட்டியில் பலமான பந்துவீச்சு வெளிப்படுத்தலுடன் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

முதல் T20i போட்டியில் தோல்வியடைந்து தொடரை சமப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தேர்வுசெய்தது.

மதீஷவின் அபார பந்துவீச்சோடு சென்னை சுபர் கிங்ஸ் வெற்றி

பங்களாதேஷ் அணி ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக ஓட்டங்களை பெற முயற்சித்தது. அதற்கு ஏற்றவாறு ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஷமீமா சுல்தானா மற்றும் ரூபி ஹைடர் இருவரும் 28 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்தின் பின்னர் ரூபி ஹைடர் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பங்களாதேஷின் இரண்டாவது விக்கெட் 53 ஓட்டங்களுக்கு (ஷமீமா சுல்தானா 28 ஓட்டங்கள்) வீழ்த்தப்பட்டது.

இந்த இரண்டு விக்கெட்டுகளை தொடர்ந்து ஷோபனா மொஸ்டாரி மாத்திரம் 18 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஏனைய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த பங்களாதேஷ் அணி 100 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் அனைத்து வீராங்கனைகளும் பிரகாசித்திருந்தனர். உதேசிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர மற்றும் கவீஷா டில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்க்க, ஓசதி ரணசிங்க மற்றும் காவ்யா கவிந்தி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பங்களாதேஷ் நிர்ணயித்த இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு எப்போதும் போன்று சமரி அதபத்து வேகமான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுத்தந்தார். இவர் 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து விஷ்மி குணரத்ன (12 ஓட்டங்கள்) மற்றும் நிலக்ஷி டி சில்வா (4 ஓட்டங்ள்) ஆகியோர் ஆட்டமிழந்த போதும் ஹர்ஷிதா சமரவிக்ரம நிதானமாக ஆடி 29 ஓட்டங்களையும், கவீஷா டில்ஹார் 18 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற இலங்கை அணி 18.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. பந்துவீச்சில் பாதிமா கஹடுன் 2 விக்கெட்டுகளையும், ரபீயா கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

எனவே மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது. தொடரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டியில் நாளை வெள்ளிக்கிழமை (12) இரண்டு அணிகளும் மோதவுள்ளன.

போட்டியின் ஸ்கோர்   

Result


Sri Lanka Women
101/3 (18.3)

Bangladesh Women
100/10 (18.3)

Batsmen R B 4s 6s SR
Shamima Sultana b Inoka Ranaweera 18 23 3 0 78.26
Rubya Haider b Udeshika Prabodhani 16 17 3 0 94.12
Sobhana Mostary b Kawya Kavindi 18 21 2 0 85.71
Nigar Sultana b Udeshika Prabodhani 7 17 0 0 41.18
Murshida Khatun c Inoka Ranaweera b Kavisha Dilhari 14 10 0 1 140.00
Ritu Moni c Nilakshi de Silva b Oshadi Ranasinghe 5 4 1 0 125.00
Sultana Khatun b Sugandika Kumari 4 6 0 0 66.67
Nahida Akter st Anushka Sanjeewani b Kavisha Dilhari 0 0 0 0 0.00
Fahima Khatun not out 6 8 0 0 75.00
Rabeya Khan lbw b Sugandika Kumari 0 2 0 0 0.00
Fariha Trisna c Inoka Ranaweera b Oshadi Ranasinghe 1 3 0 0 33.33


Extras 11 (b 0 , lb 3 , nb 0, w 8, pen 0)
Total 100/10 (18.3 Overs, RR: 5.41)
Bowling O M R W Econ
Udeshika Prabodhani 3 0 21 2 7.00
Oshadi Ranasinghe 3 0 26 1 8.67
Sugandika Kumari 4 0 14 2 3.50
Kawya Kavindi 2 0 14 1 7.00
Inoka Ranaweera 3.3 0 9 2 2.73
Kavisha Dilhari 3 0 13 2 4.33


Batsmen R B 4s 6s SR
Chamari Athapaththu st Shamima Sultana b Rabeya Khan 33 27 6 1 122.22
Vishmi Gunaratne lbw b Fahima Khatun 12 17 1 0 70.59
Harshitha Samarawickrama not out 29 42 1 0 69.05
Nilakshi de Silva lbw b Fahima Khatun 4 7 0 0 57.14
Kavisha Dilhari not out 20 18 2 0 111.11


Extras 3 (b 1 , lb 0 , nb 0, w 2, pen 0)
Total 101/3 (18.3 Overs, RR: 5.46)
Bowling O M R W Econ
Fariha Trisna 2.3 0 23 0 10.00
Sultana Khatun 4 0 24 0 6.00
Rabeya Khan 4 0 11 1 2.75
Nahida Akter 4 0 26 0 6.50
Fahima Khatun 4 0 16 2 4.00



>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<