அவுஸ்திரேலிய T20 அணியில் இணையும் ஸ்மித், வோர்னர் ஜோடி

Australia tour of India 2023

66
Australia tour of India 2023

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரினை அடுத்து இந்தியாவில் அவுஸ்திரேலியா அணி விளையாடவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அவுஸ்திரேலிய T20 குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குசல் மெண்டிஸ்!

உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்து நான்கு நாட்களின் பின்னர் அவுஸ்திரேலிய – இந்திய அணிகள் இடையிலான T20 தொடர் ஆரம்பமாகுகின்றது. இந்த T20I தொடரில் பங்கெடுக்கும் அவுஸ்திரேலிய அணியின் வீரர்கள் குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த T20I குழாத்தில் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசல்வூட் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் மிச்சல் மார்ஷ், கெமரூன் கீரின் ஆகிய வீரர்களுக்கும் இந்திய அணிக்கு எதிரான T20 போட்டிகளில் அதனை அடுத்து நடைபெறவிருக்கின்ற டெஸ்ட் போட்டிகள் கருதி ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் உபாதையில் இருந்து தேறி வரும் சுழல்பந்துவீச்சாளரான அஸ்டன் ஏகாரும் தெரிவுகளுக்காக கருத்திற் கொள்ளப்படவில்லை.

அதேவேளை தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆடாது போயிருந்த டேவிட் வோனர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய வீரர்கள் அவுஸ்திரேலிய T20 அணியில் மீண்டிருக்கின்றனர்.

இந்த அவுஸ்திரேலிய T20 குழாத்தின் தலைவராக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் மெதிவ் வேட் செயற்படுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

அவுஸ்திரேலிய T20 குழாம்

மெதிவ் வேட் (தலைவர்), ஜேசன் பெஹ்ரன்ட்ரோப், ஷோன் எப்போட், டிம் டேவிட், நேதன் எல்லிஸ், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்பென்சர் ஜோன்சன், கிளன் மெக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷோர்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டேவிட் வோனர், அடம் ஷம்பா

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<