பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மிஸ்பாஹ்

0
ICC

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஆகிய இரு பதவிகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மிஸ்பாஹ் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) உறுதிப்படுத்தியுள்ளது. 

நியூசிலாந்திடம் டி20 தொடரை இழந்தது இலங்கை

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20….

அண்மையில் நிறைவுக்கு வந்த 12ஆவது .சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தன. 2016ஆம் ஆண்டு மூன்று வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட தென்னாபிரிக்காவை சேர்ந்த மிக்கி ஆர்த்தர் தலைமையிலான பயிற்றுவிப்பு குழாமின் காலம் கடந்த உலகக் கிண்ண தொடருடன் நிறைவுக்கு வந்தது

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்தது. தற்போது காணப்படும் பயிற்றுவிப்பு குழாமின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது எனவும், புதிய பயிற்றுவிப்பு குழாமுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும் அறிவித்திருந்தது

இதன் பின்னர் தலைமை பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட ஏனைய பயிற்றுவிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மூன்று வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிஸ்பாஹ் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் மிஸ்பாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்

கடந்த 2001ஆம் ஆண்டு முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் சர்வதேச அறிமுகம் பெற்ற மிஸ்பாஹ் உல் ஹக், விசேடமாக டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு பக்கபலமாக இருந்துள்ளார். 2002 இல் ஒருநாள் அறிமுகம் மற்றும் 2007 இல் டி20 அறிமுகம் என மூவகையாக கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக தனது திறமைகளை வெளியிப்படுத்தியுள்ளார்.

2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமைத்துவம் மிஸ்பாஹ் உல் ஹக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று ஒப்படைக்கப்பட்ட தலைமைத்துவத்தின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அணித்தலைவராக எந்தவொரு அணித்தலைவராலும் செய்ய முடியாத பல வெற்றிகளை பதிவு செய்து மறக்க முடியாத டெஸ்ட் அணித்தலைவராக தன்னை மாற்றினார் மிஸ்பாஹ். டெஸ்ட் போட்டி மாத்திரமல்லாது மூவகையான போட்டிகளுக்கும் அணித்தலைவராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்

பின்னர், 2015ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்த மிஸ்பாஹ் உல் ஹக் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தார். இவ்வாறு மேலும் இரு வருடங்கள் விளையாடிய அவர் 2017 ஏப்ரல் 4ஆம் திகதி அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறித்தார்.  

பாக். அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மிஸ்பா உல்….

தற்போது 45 வயதாகும் மிஸ்பாஹ் உல் ஹக் 2001ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரையான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 75 டெஸ்ட் போட்டிகளில், 5,222 ஓட்டங்களையும், 2015ஆம் ஆண்டுவரையான ஒருநாள் சர்வதேச வாழ்க்கையில் 162 போட்டிகளில் 5,122 ஓட்டங்களையும், 2012ஆம் ஆண்டுவரையான டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 39 போட்டிகளில் 788 ஓட்டங்களையும் குவித்துள்ளார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக பதவி வகித்துவந்த முன்னாள் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் கடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் தனது பதவியில் நீடிக்கப்போவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியுடன் சேர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் மிஸ்பாஹ் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வகார் யூனுஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் 4 தடவைகள் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்மித்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய ….

கடந்த 2006-07ஆம் ஆண்டுகளில் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும், 2009-10ஆம் ஆண்டுகளில் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராகவும், 2010-11ஆம் ஆண்டுகளில் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும், 2014 தொடக்கம் 2016 வரையில் மீண்டும் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் வகார் யூனுஸ் செயற்பட்டுள்ளார்

பாகிஸ்தான் அணிக்காக ஒரு வேகப் பந்துவீச்சாளராக 1989 தொடக்கம் 2003 வரையான காலப்பகுதிகளில் விளையாடியுள்ள வகார் யூனுஸ், 87 டெஸ்ட் போட்டிகளில் 373 விக்கெட்டுகளையும், 262 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 416 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

இம்மாத இறுதியில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தற்போது நியமனம் பெற்றுள்ள புதிய பயிற்றுவிப்பு குழாமின் முதல் தொடர் குறித்த தொடருடன்  ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<