இலங்கை – தென்னாபிரிக்க தொடரின் போட்டி அட்டவணை வெளியானது

South Africa tour of Sri Lanka 2021

861
South Africa tour of Sri Lanka schedule released
 

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான  மூன்றாவது T20I போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்ததுடன், குறித்த போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி வரலாற்று தொடர் வெற்றியை பதிவுசெய்திருந்தது.

>> இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்து T20 தொடரை வென்ற இலங்கை

இந்தநிலையில், இலங்கை அணிக்கான அடுத்த தொடராக அமையவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போட்டி அட்டவணையை  இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஐசிசி சுப்பர் லீக் தொடருக்கான மூன்று ஒருநாள் போட்டிகளுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடரானது ரசிகர்களின்றி உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் நடைபெறவுள்ளது.

மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் அடங்கிய இந்த தொடரானது, எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. முதலில் ஆரம்பமாகும் ஒருநாள் தொடர் செப்டம்பர் 7ம் திகதி நிறைவுக்கு வரவுள்ளதுடன், T20I தொடர் செப்டம்பர் 10ம் திகதி ஆரம்பமாகி, 14ம் திகதி நிறைவுபெறுகின்றது. தொடரின்  அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • 1வது ஒருநாள் போட்டிசெப்டம்பர் 2
  • 2வது ஒருநாள் போட்டிசெப்டம்பர் 4
  • 3வது ஒருநாள் போட்டிசெப்டம்பர் 7
  • 1வது T20I போட்டிசெப்டம்பர் 10
  • 2வது T20I போட்டிசெப்டம்பர் 12
  • 3வது T20I போட்டிசெப்டம்பர் 14

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<