சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 25 ஆவது தடவையாக நடைபெறும் பிரிவு A வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளில் ஐந்து போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

ஹட்டன் நஷனல் வங்கி எதிர் டிஜேய் லங்கா

P. சரவணமுத்து மைதானத்தில் நிறைவடைந்திருக்கும் இந்தப் போட்டியில் 30 ஓட்டங்களால் ஹட்டன் நஷனல் வங்கி அணி டீஜேய் லங்கா நிறுவனத்தினை வீழ்த்தியுள்ளது.

முதலில் எதிரணியினால் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த ஹட்டன் நஷனல் வங்கி வீரர்கள் கோசல குலசேகரவின் அரைச் சதத்துடன் (68) 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 203 ஓட்டங்களினை குவித்துக் கொண்டனர். பந்து வீச்சில் திறமையினை வெளிக்காட்டிய  தேசிய அணி வீரர் சஜித்ர சேனநாயக்க மற்றும் சலன டி சில்வா ஆகியோர் டீஜேய் லங்கா நிறுவனத்துக்காக இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

அணிகளின் வெற்றிக்காக அபாரமாக ஆடிய தெனுவன் மற்றும் அகீல் இன்ஹாம்

தொடர்ந்து வெற்றி இலக்கினை எட்ட பதிலுக்கு துடுப்பாடிய டீஜேய் ல்ங்காவினை இடது கை வேகப்பந்து வீச்சாளர் விமுக்தி பெரேரா மிரட்ட 173 ஓட்டங்களுடன் சுருண்ட அவ்வணியினர் போட்டியில் தோல்வியை தழுவினர். பெரேரா மொத்தமாக 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். டீஜேய் லங்கா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தனியொருவராக சிறப்பாக செயற்பட்ட கித்ருவான் விதானகே 70 ஓட்டங்களினை பெற்றிருந்தார்..

போட்டியின் சுருக்கம்

ஹட்டன் நஷனல் வங்கி – 203 (43.4) கோசல குலசேகர 68, சமீர சொய்ஸா 43, சஜித்ர சேனநாயக்க 2/23, சலன டி சில்வா 2/35

டீஜேய் லங்கா – 173 (39.5) கித்ருவான் விதானகே 70, சலன டி சில்வா 49, விமுக்தி பெரேரா 4/34, கோசல குலசேகர 2/12, நவீன் குணவர்தன 2/43


ஹெய்லிஸ் நிறுவனம் எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்

கட்டுநாயக்க FTZ மைதானத்தில் நிறைவுற்ற இப்போட்டியில் 6 விக்கெட்டுக்களால் ஹெய்லிஸ் நிறுவனத்தினை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் அணி இலகுவாக வீழ்த்தியிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோன் கீல்ஸ் அணி ஹெய்லிஸ் நிறுவனத்தை முதலில் துடுப்பாட பணித்தது.

இதன்படி களமிறங்கிய ஹெய்லிஸ் நிறுவனத்தில் சசித்ர சேரசிங்க அரைச் சதம் விளாசினார். அவரோடு சேர்த்து பிரசன்ன ஜயமன்ன ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 40 ஓட்டங்களின் துணையுடன் 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 183 ஓட்டங்களுடன் ஹெய்லிஸ் அணி தமது இன்னிங்சினை முடித்துக் கொண்டது.

ஜோன் கீல்ஸ் அணியின் பந்து வீச்சு சார்பாக இலங்கை அணிக்காக T-20 போட்டிகளில் விளையாடியிருக்கும் விக்கும் சஞ்சய மற்றும் சமிகர எதிரிசிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்

புதிய வீரர்களோடு பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணி

சீரற்ற காலநிலை காரணமாக 46 ஓவர்களில் வெற்றி இலக்காக  நிர்ணயம் செய்யப்பட்ட 178 ஓட்டங்களினை பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய ஜோன் கீல்ஸ் அணி அக்சு பெர்னாந்து அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 68 ஓட்டங்களின் துணையுடன் 31.5 ஓவர்களில் இலக்கினை 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

ஹெய்லிஸ் நிறுவனம் – 183 (48.3) சஜித்ர சேரசிங்க 53, பிரசன்ன ஜயமன்ன 48*, சானக்க ருவன்சிரி 38, விக்கும் சஞ்சய 3/22, சமிகர எதிரிசிங்க 3/28

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் – 178/4 (31.5) அக்சு பெர்னாந்து 68*, லஹிரு மிலன்த 41


மாஸ் யுனிச்செல்லா எதிர் சம்பத் வங்கி

கொல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் 136 ஓட்டங்களால் சம்பத் வங்கியினை மாஸ் யுனிச்செல்லா வீரர்கள் அபாரமாக வெற்றியீட்டிக் கொண்டனர்.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய மாஸ் யுனிச்செல்லா அணி, மஹேல உடவத்த பெற்றுக்கொண்ட சதத்துடனும், அணித் தலைவர் திலகரத்ன தில்ஷான் பெற்றுக்கொண்ட அரைச் சதத்தின் உதவியுடனும் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. சம்பத் வங்கியின் பந்து வீச்சில் கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

சவாலான வெற்றி இலக்கான 268 ஓட்டங்களை தொட பதிலுக்கு ஆடியிருந்த சம்பத் வங்கி வீரர்கள் எதிரணி பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் 32.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தனர்.

சம்பத் வங்கியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தரிந்து கெளசால் 48 ஓட்டங்களினை குவித்திருந்தார். மாஸ் யுனிச்செல்லா அணி சார்பாக ஷெஹான் மதுசங்க 3 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மாஸ் யுனிச்செல்லா – 267/9 (50) மஹேல உடவத்த 101, திலகரத்ன தில்ஷான் 51, கசுன் ராஜித 4/34, தரிந்து கெளசால் 2/50

சம்பத் வங்கி – 131 (32.5) தரிந்து கெளசால் 48, ஷெஹான் மதுசங்க 3/23


கென்ரிச் பினான்ஸ் எதிர் கொமர்ஷல் கிரடிட்

MCA மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் 5 விக்கெட்டுக்களால் கொமர்ஷல் கிரடிட் அணி கென்ரிச் பினான்ஸ் அணியினரை வீழ்த்தியது.

முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த கென்ரிச் பினான்ஸ் அணியில் அரைச் சதம் குவித்த கவிந்து குலசேகர தவிர வேறு எவரும் சிறப்பாக செயற்பட்டிருக்கவில்லை. இதனால், 40.2 ஓவர்களில் அவ்வணி சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 152 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கைக்கு ஒழுங்கற்ற மைதானம் வழங்கப்பட்ட விடயம் குறித்து விசாரணை

கொமர்ஷல் கிரடிட் அணி சார்பான பந்து வீச்சில் லஹிரு மதுசன்க 3 விக்கெட்டுக்களையும்,  அசித்த பெர்னாந்து மற்றும் வனின்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் பதம்பார்த்திருந்தனர்.

தொடர்ந்து, வனின்து ஹஸரங்க பெற்றுக்கொண்ட அதிரடி அரைச்சதத்துடன் கொமர்ஷல் கிரடிட் அணி வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 153 ஓட்டங்களை மிகவும் விரைவான முறையில் 22.1 ஓவர்களில் அடைந்து கொண்டது. அதிரடியாக ஆடிய வனின்து ஹஸரங்க ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

கென்ரிச் பினான்ஸ் – 153 (40.2) கவிந்து குலசேகர 54, அலங்கார அசங்க 24, லஹிரு மதுசங்க 3/13, வனின்து ஹஸரங்க 2/26, அசித்த பெர்னாந்து 2/27

கொமர்ஷல் கிரடிட் – 154/5 (22.1) வனின்து ஹஸரங்க 63*, உபுல் தரங்க 38, ப்ரமோத் மதுசன் 3/30


எல்.பி பினான்ஸ் எதிர் டிமோ நிறுவனம்

மொரட்டுவ மைதானத்தில் நிறைவுற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 10 ஓட்டங்களால் டிமோ அணி எல்.பி பினான்ஸ் அணியை வெற்றி கொண்டது.

நாணய சுழற்சியினை கைப்பற்றி முதலில் துடுப்பாடிய எல்.பி பினான்ஸ் அணியில் அஞ்செலோ பெரேரா 73 ஓட்டங்களினையும், ப்ரியமல் பெரேரா 66 ஓட்டங்களினையும் விளாசி அணிக்கு உறுதியளித்தனர். இவர்களின் துடுப்பாட்ட உதவியுடன் எல்.பி பினான்ஸ் நிறுவனம் 49.5 ஓவர்களில் 280 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட திக்ஷில டி சில்வா 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

இலங்கை அணியின் நம்பிக்கை தரும் 5 சமிக்ஞைகள்

இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரை….

பதிலுக்கு வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடியிருந்த டிமோ அணியில் சம்மு அஷான் போராட்டத்தினை வெளிக்காட்டி 87 ஓட்டங்களினை பெற்று போட்டியின் வெற்றியாளர்களாக மாற முயற்சி செய்திருந்த போதும் எதிரணி பந்து வீச்சாளர்களின் சமார்த்தியமான செயற்பாட்டினால் 48.1 ஓவர்களில் 270 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து டிமோ வீரர்கள் போட்டியில் வெறும் 10 ஓட்டங்களால்  தோல்வியடைந்தனர்.

டிமோ அணியினை கட்டுக்குள் கொண்டு வந்த பந்து வீச்சாளர்களில் சிரான் பெர்னாந்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

எல்.பி பினான்ஸ் – 280 (49.5) அஞ்செலோ பெரேரா 73, ப்ரியமல் பெரேரா 66, திக்ஷில டி சில்வா 4/43

டிமோ நிறுவனம் – 270 (48.1) சம்மு அஷான் 87, லசித் அபேய்ரத்ன 39, சிரான் பெர்னாந்து 4/52