தில்ஷானின் சதத்தால் மாஸ் உனிச்சலா அணிக்கு வெற்றி

378
TM Dilshan

24ஆவது சிங்கர் மேர்க்கன்டைல் 50 ஒவர்கள் கொண்ட சுற்றுப்போட்டித் தொடரின் 3வது போட்டியாக மாஸ் உனிச்சலா அணிக்கும் HNB அணிக்குமிடையிலும், 4ஆவது போட்டி கொமெர்சல் கிரெடிட் மற்றும் ஜோன் கீல்ஸ் அணிகளுக்டைகிடையில் இடம்பெற்றது. இப்போட்டிகள் பி.சரா ஓவல் மற்றும் டீ சொய்சா மைதானத்தில் இடம்பெற்றது.

மாஸ்  உனிச்சலா  vs HNB  அணி

சர்வேதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று மெர்க்கண்டைல் போட்டிகளில் விளையாடிய தில்ஷான் சந்தித்த முதலாவது போட்டியில் சதத்தைப் பெற்று தனது அணியினரை HNB அணியினருக்கு எதிராக வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மாஸ் உனிச்சலா அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 388 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் தில்சான் 144 ஓட்டங்களும்,  தனுஷ்க 81 ஓட்டங்களும், குஷால் பெரேரா 64 ஓட்டங்களும் பெற்றனர். சதுர, விமுக்தி, சஜீவா ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

388 என்ற இலக்கினை நோக்கி ஆடிய HNB அணியினர் 222 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தனர். இதில் மின்ஹாஜ் ஜலீல் 55 ஓட்டங்களைப் பெற்றார். டிலுருவான் பெரேரா, அஸித பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

மாஸ்  உனிச்சலா – 388/9 (50) – தில்சான் 144, குஷால் பெரேரா 64, தனுஷ்க 81, விமுக்தி பெரேரா 2/59, சஜீவா வீரகோன் 2/57

HNB அணி – 222/9 (50) – மின்ஹாஜ் ஜலீல் 55, ஹெஷன் குணதிலக 42, ஹசித மதுஷான் 35, டிலுருவான் பெரேரா 2/31, அஸித பெர்னாண்டோ 2/35, சதுர 2/38


கொமெர்சல்  கிரெடிட் vs ஜோன் கீல்ஸ்

சதுரங்க சில்வாவின் சகல துறை ஆட்டத்தால் கொமெர்சல் கிரெடிட் அணியினர் 4 விக்கட்டுகளால் வெற்றி

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணியினர் 44.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். ரோஷன் சில்வா 58 ஓட்டங்களையும், திமுது கருணாரத்ன 30 ஓட்டங்களையும் பெற்றனர். கொமெர்சல் கிரெடிட் அணி சார்பாகப் பந்துவீச்சில் சதுரங்க சில்வா 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

167 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொமெர்சல் கிரெடிட் அணியினர் 27.4 ஓவர்களில் போட்டியயை முடிவுக்கு கொண்டுவந்தனர். இதில் அசான் பிர்யஞ்சன் 72 ஓட்டங்களையும், சதுரங்க 38 ஓட்டங்களையும் பெற்றனர், ஜோன் கீல்ஸ் அணி சார்பாகப் பந்துவீச்சில் மதுக்க 30 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் – 166 (44.4) – ரோஷன் சில்வா 58, திமுது கருணாரத்ன 30, சதுரங்க சில்வா 4/28, வணிந்து ஹசரங்க 2/51

கொமெர்சல்  கிரெடிட் – 167/6 (27.4) – அசான் பிரியஞ்ஜன் 72, சதுரங்க சில்வா 38, மதுக்க லியனபத்திரனே 2/30