தனஞ்சய, ஷெஹான், கமிந்துவின் அபார ஆட்டத்துடன் ஆரம்பமாகிய MCA ப்ரீமியர் லீக்

124

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் 27 ஆவது தடவையாக ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ள சிங்கர் – MCA ப்ரீமியர் (நொக் அவுட்) ஒருநாள் தொடர் இன்று (13) ஆரம்பமாகியது. 

இம்முறை போட்டிகளில் லக்ஷான் ரொட்ரிகோ தலைமையிலான LB பினான்ஸ் (நடப்புச் சம்பியன்), நிசல தாரக்க தலைமையிலான டிமோ, குசல் ஜனித் பெரேரா தலைமையிலான மாஸ் யுனிச்செல்லா, பானுக ராஜபக்ஷ தலைமையிலான ஜோன் கீல்ஸ், ஜீவன் மெண்டிஸ் தலைமையிலான சம்பத் வங்கி, லஹிரு திரிமான்ன தலைமையிலான ஹேலீஸ் மற்றும் நிபுன் தனஞ்சய தலைமையிலான இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணியும் களமிறங்கவுள்ளன. 

ஒருநாள் தொடரை கைப்பற்றிய பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி

சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட்…………..

இந்த நிலையில், போட்டித் தொடரின் ஆரம்ப நாளான இன்று (13) மூன்று போட்டிகள் நடைபெற்றன.

இதில் தனஞ்சய டி சில்வா மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகிய இருவரும் LB பினான்ஸ் அணிக்காகவும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிபுன் தனஞ்சய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காகவும், கமிந்து மெண்டிஸ் மாஸ் ஹோல்டிங்ஸ் அணிக்காகவும், ரமேஷ் மெண்டிஸ், நிபுன் கருணாநாயக்க டிமோ அணிக்காகவும் அரைச் சதங்களை குவித்து அசத்தியிருந்தனர். 

LB பினான்ஸ் எதிர் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி

இலங்கை தேசிய அணி வீரர்களான தனஞ்சய டி சில்வா மற்றும் ஷெஹான் ஜயசூரியவின் சகலதுறை ஆட்டத்தால் LB பினான்ஸ் அணி 75 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு MCA மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய LB பினான்ஸ் அணி, தனஞ்சய டி சில்வா (79) மற்றும் ஷெஹான் ஜயசூரியாவின் (65)  அரைச் சதங்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Photos: LB Finance vs Sri Lanka U19 – 27th Singer-MCA Premier League

பந்துவீச்சில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக யசிரு ரொட்ரிகோ, ரொஹான் சன்ஞய மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

இந்நிலையில், போட்டியின் 2 ஆவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கிட இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு 28.3 ஓவர்களுக்கு 253 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. 

எனினும் அந்த அணி குறித்த ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. 

பாகிஸ்தானை வென்ற இலங்கை அணிக்கு 145,000 டொலர்கள் பணப்பரிசு

பாகிஸ்தான் அணியுடனான T20i…………

பந்துவீச்சில் LB பினான்ஸ் அணிக்காக இசுரு உதான, கவிஷ்க லக்ஷான், ஷெஹான் ஜயசூரிய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

LB பினான்ஸ் – 285/8 (50) – தனஞ்சய டி சில்வா 79, ஷெஹான் ஜயசூரிய 65, சதீர சமரவிக்ரம 47, லஹிரு உதார 31, அஞ்செலோ பெரேரா 30, யசிரு ரொட்ரிகோ 2/50, ரொஹான் சன்ஞய 2/51, டில்ஷான் மதுஷங்க 2/53

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி – 180/8 (28.3) – நிபுன் தனஞ்சய 75, அவிஷ்க பெரேரா 21, இசுரு உதான 2/17, கவிஷ்க லக்ஷான் 2/30, ஷெஹான் ஜயசூரிய 2/36, தனஞ்சய டி சில்வா 2/42

முடிவு – LB பினான்ஸ் அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 73 ஓட்டங்களால்  வெற்றி


மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா எதிர் டிமோ

இலங்கை A மற்றும் வளர்ந்து வரும் அணிகளில் இடம்பெற்று அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட அரைச் சதத்தின் மூலம் டிமோ அணிக்கு எதிராக 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மாஸ் யுனிச்செல்லா அணி வெற்றி பெற்றது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பம் தொட்டு சிறப்பாக துடுப்பெடுத்தாடிய யுனிசெல்லா அணிக்கு கமிந்து மெண்டிஸ் கடைசி வரை களத்தில் இருந்து ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றார். குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகிய வீரர்கள் தலா 43 ஓட்டங்களைப் பெற்றனர்.

இதன் மூலம் மாஸ் யுனிச்செல்லா அணி 48.4 ஓவர்களில் அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து 259 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய டிமோ அணிக்காக ரமேஷ் மெண்டிஸ் மற்றும் நிபுன் கருணாநாயக்க ஆகியோர் அரைச் சதமடித்து வெற்றிக்காக போராடியபோதும் அந்த அணியால் 50 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. 

இறுதியில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க மாஸ் யுனிச்செல்லா அணி 9 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஹேனகம மத்திய கல்லூரியிடம் தோல்வியடைந்த சென். ஜோன்ஸ் கல்லூரி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு………

டிமோ அணிக்காக பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய ரமேஷ் மெண்டிஸ் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

போட்டியின் சுருக்கம்

மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செல்லா – 259 (48.4) – கமிந்து மெண்டிஸ் 78*, குசல் ஜனித் பெரேரா 43, சாமர சில்வா 43, பிரியமால் பெரேரா 23, மஹேல உடவத்த 22, நிசல தாரக்க 3/52, ரமேஷ் மெண்டிஸ் 2/31, திக்ஷில டி சில்வா 2/52

டிமோ – 250/8 (50) – ரமேஷ் மெண்டிஸ் 66, நிபுன் கருணாநாயக்க 54, தினேஷ் சந்திமால் 36, சம்மு அஷான் 23, நிசல தாரக்க 23, லஹிரு மதுஷங்க 3/59, டில்ருவன் பெரேரா 2/44

முடிவு – மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா 9 ஓட்டங்களால் வெற்றி 


ஜோன் கீல்ஸ் A எதிர் சம்பத் வங்கி 

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஜோன் கீல்ஸ் A அணி தனது சகலதுறை ஆட்டத்தின் மூலம் சம்பத் வங்கி அணியை 87 ஓட்டங்களால் டக்வத் லூயிஸ் முறையில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சம்பத் வங்கி அணியின் எந்த துடுப்பாட்ட வீரரும் பெரிய ஓட்டங்களை நோக்கி செல்லாத நிலையில் அந்த அணி 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

இஷான் ஜயரட்ன 40 ஓட்டங்களையும், மினோத் பானுக 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, சம்பத் வங்கியின் பந்துவீச்சில் ஜீவன் மெண்டிஸ் 4 விக்கெட்டுக்களையும், தசுன் ஷானக்க 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இந்நிலையில், போட்டியின் 2 ஆவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கிட சம்பத் வங்கி அணிக்கு 32 ஓவர்களுக்கு 186 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. 

எனினும். ஜோன் கீல்ஸ் அணியின் அபார பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த சம்பத் வங்கி அணிக்கு 32 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தியா வசம்

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும்………..

ஜோன் கீல்ஸ் A அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஸ், இஷான் ஜயரட்ன மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர். 

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் A – 195 (48.2) – இஷான் ஜயரட்ன 40, மினோத் பானுக 37, ஜெஹான் டெனியல் 35, திமுத் கருணாரத்ன 21, ஜீவன் மெண்டிஸ் 4/43, தசுன் ஷானக்க 3/28, மலிந்த புஷ்பகுமார 2/33

சம்பத் வங்கி – 99/9 (32) – மொஹமட் சிராஸ் 2/22, இஷான் ஜயரட்ன 2/19, நுவன் பீரதீப் 2/21

முடிவு – ஜோன் கீல்ஸ் A அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 87 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<