திரிமான்னவின் துடுப்பாட்டத்தை வீணாக்கிய சதீரவின் அபார துடுப்பாட்டம்

866

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரின் மேலும் நான்கு போட்டிகள் இன்று (19) நடைபெற்றன. இதில் சதீர சமரவிக்ரம மற்றும் லஹிரு திரிமான்ன தொடர்ச்சியாக துடுப்பாட்டத்தில் சோபித்து வருவதோடு, மாஸ் சிலுயேட்டா அணிக்காக சங்கீத் குரேவும் கான்ரிச் பினான்ஸ் அணிக்கா ஒசந்த பெர்னாண்டோவும்  சதம் பெற்றனர்.

ஹேலீஸ் எதிர் எல்.பி. பினான்ஸ்

லஹிரு திரிமான்னவின் போராட்டத்தை வீணாக்கி, சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலங்கவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் ஹேலீஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தால் எல்.பி. பினான்ஸ் அணி இலகுவாக வீழ்த்தியது.

மன்னிப்புக் கேட்டார் மெதிவ்ஸ்

எல்.பி. பினான்ஸ் அணி இந்த தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் சதீர சமரவிக்ரமவின் அபார துடுப்பாட்டத்தால் தொடர்ந்து வெற்றிகளை பெற்றுள்ளது. சமரவிக்ரம முதல் இரு போட்டிகளிலும் அடுத்தடுத்து சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பீ சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஹேலீஸ் அணி சார்பில் திரிமான்ன ஒருமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது மறுமுனை விக்கெட்டுகள் சொற்ப ஓட்டங்களுக்கு பறிக்கப்பட்டன.

இதனால் ஹேலீஸ் அணி 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதில் லஹிரு திரிமான்ன 84 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய எல்.பி. பினான்ஸ் அணிக்கு சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலங்க இரண்டாது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அந்த அணியை வெற்றிவரை அழைத்துச் சென்றனர். இதன் மூலம் எல்.பி. பினான்ஸ் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 173 ஓட்டங்களை எட்டியது.

இதன்போது அசலங்க ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும், சமரவிக்ரம ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்

ஹேலீஸ் – 172 (44.2) – லஹிரு திரிமான்ன 84, பினுர பெர்னாண்டோ 28, நிமேஷ் குணசிங்க 25, சரித் சுதாரக்க 2/19, ஷிரான் பெர்னாண்டோ 2/31, ரஜீவ் வீரசிங்க 2/35

எல்.பி. பினான்ஸ் – 173/1 (30.5) – சரித் அசலங்க 81*, சதீர சமரவிக்ரம 80*

முடிவு – எல்.பி. பினான்ஸ் 9 விக்கெட்டுகளால் வெற்றி


மாஸ் சிலுயேட்டா எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்

சங்கீத் குரே பெற்ற அபார சதத்தின் மூலம் ஜோன் கீல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மாஸ் சிலுயேட்டா 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்திய மகளிர் அணிக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

மக்கொன, சரே விலேஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மாஸ் சிலுயேட்டா 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களை பெற்றது. இதன்போது 23 வயதுடைய இடது கைது துடுப்பாட்ட வீரர் சங்கீத் குரே 114 ஓட்டங்களை பெற்றார். ஜோன் கீல்ஸ் சார்பாக 19 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர் ஜெஹான் டானியல் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜோன் கீல்ஸ் அணிக்காக இலங்கையின் விசேட டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 76 ஓட்டங்களை பெற்றபோதும் அந்த அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 37.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

மாஸ் சிலுயேட்டா – 260/9 (50) – சங்கீத் குரே 114, சலிந்த உஷான் 53, நிமந்த சுபசிங்க 23, ஜெஹான் டானியல் 5/49

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 228 (37.3) – திமுத் கருணாரத்ன 76, லஹிரு மிலந்த 44, ரொஷேன் சில்வா 34, ஜெஹான் டானியல் 23, நிமந்த சுபசிங்க 3/04, நுவன் பிரதீப் 3/48, புத்திக்க சஞ்ஜீவ 3/52

முடிவு – மாஸ் சிலுயேட்டா 32 ஓட்டங்களால் வெற்றி


சம்பத் வங்கி எதிர் டிமோ

மொரட்டுவை டி சொய்சா அரங்கில் நடைபெற்ற போட்டியில் சம்பத் வங்கியை குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய டிமோ அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சம்பத் வங்கிக்கு டிமோ பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர் மதீஷ பெரேரா 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதனால் சம்பத் வங்கி 185 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டிமோ அணி சற்று தடுமாற்றம் கண்டபோதும் 43.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஒருமுனையில் ரமேஷ் மெண்டிஸ் அணியின் வெற்றிக்காக களத்தில் இருந்து ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியில் சுருக்கம்

சம்பத் வங்கி – 185 (43.4) – சரித்த புத்திக்க 55, ரொமேஷ் புத்திக்க 32, தரிந்து கௌஷால் 26, மதீஷ பெரேரா 4/31, கவிஷ்க அஞ்சுல 2/31, நிசல தாரக்க 2/41   

டிமோ – 188/7 (43.1) – ரமேஷ் மெண்டிஸ் 54*, பிரமுத் ஹெட்டிவத்த 36*, திக்ஷில டி சில்வா 28, ரங்கன ஹேரத் 2/30, தரிந்து கௌஷால் 2/31, ஹசந்த பெர்னாண்டோ 2/40

முடிவு – டிமோ 3 விக்கெட்டுகளால் வெற்றி


கொமர்சியல் கிரெடிட் எதிர் கான்ரிச் பினான்ஸ்

ஒசந்த பெர்னாண்டே தனித்துப் பெற்ற சதத்தின் உதவியோடு கான்ரிச் பினான்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் கொமர்சியல் கிரெடிட் அணியை போராடி வென்றது.

இலங்கை தோற்றாலும் ஆசிய கிண்ணத்தில் சாதனை படைத்த மாலிங்க

கொழும்பு MCA அரங்கில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கொமர்சியல் கிரெடிட் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 256 ஓட்டங்களை பெற்றது. லஹிரு மதுஷங்க (51) மற்றும் சதுரங்க டி சில்வா (50) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கான்ரிச் பினான்ஸ் ஒருமுனையில் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் மறுமுனையில் ஒசந்த பெர்னாண்டோ சிறப்பாக துடுப்பெடுத்தாடி கைகொடுத்தார். அபாரமாக துடுப்பெடுத்தாடிய அவர் 133 ஓட்டங்களை குவித்தார்.

இதன் மூலம் கான்ரிச் பினான்ஸ் அணி 49.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

கொமர்சியல் கிரெடிட் – 256 (46.4) – லஹிரு மதுஷங்க 51, சதுரங்க டி சில்வா 50, வினிந்து ஹசரங்க 43, மலிந்த புஷ்பகுமார 35, சாமர கபுகெதர 27, டிலேஷ் குணரத்ன 3/39, பிரமோத் மதுஷான் 2/37, ரொஷான் லக்சிறி 2/42, அலங்கார அசங்க 2/56

கான்ரிச் பினான்ஸ் – 260/8 (49.3) – ஒசந்த பெர்னாண்டோ 133, முதுமுதலிகே புஷ்பகுமார 29, சஹன் விஜேரத்ன 23, கவிந்து குலசேகர 23, ரொஷான் லக்சிறி 21*, மலிந்த புஷ்பகுமார 2/62

முடிவு – கான்ரிச் பினான்ஸ் 2 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<