இந்திய மகளிர் அணிக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

169

இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T-20 கிரிக்கெட் தொடருக்கான 15 வீராங்கனைகள் கொண்ட இலங்கை மகளிர் அணிக் குழாத்தை கிரிக்கெட் சபை இன்று (18) அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாமில், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கு இலங்கை அணியின் தலைவியாக செயற்பட்டு, இறுதிப் போட்டியில் சதம் விளாசிய சமரி அதபத்து இலங்கை T-20 அணியின் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் அணிக்கு எதிராக இலங்கை மகளிர் ஆறுதல் வெற்றி

இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-2 என தோல்வியடைந்திருந்தது. முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்திருந்த இலங்கை மகளிர் அணி, இரண்டாவது போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்டதுடன், மூன்றாவது போட்டியில் சமரி அதபத்துவின் அதிரடி சதத்துடன் வெற்றியீட்டியிருந்தது.

தற்போது பலம் வாய்ந்த இந்திய அணியை நம்பிக்கையுடன் T20 போட்டிகளில் எதிர்கொள்வதற்காக காத்திருக்கும் இலங்கை அணியில் பெரிதான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்ட உதேஷிகா பிரபோதனி மற்றும் கடந்த மகளிர் ஆசிய கிண்ணத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த துடுப்பாட்ட வீராங்கனை அனுஷ்கா சன்ஜீவனி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நிலக்ஷி டி சில்வா ஆகியோர் T-20 குழாமிலும் இடம்பிடித்துள்ளனர்.

எனினும், ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டிருந்த பிரசாதனி வீரகொடி, நிபுனி ஹன்சிகா மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் T-20 குழாத்திலிருந்து துரதிஷ்டவசமாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக ஏசானி லோகசூரிய, ரெபேகா வெண்டொர்ட் மற்றும் உதேசிகா பிரபோதனி ஆகியோர் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  

இலங்கை தோற்றாலும் ஆசிய கிண்ணத்தில் சாதனை படைத்த மாலிங்க

இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T-20 தொடர் நாளை கட்டுநாயக்கவில் ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 25ம் திகதி தொடர் நிறைவுக்கு வருகின்றது. போட்டிகள் கட்டுநாயக்க (MCG – Katunayake), கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம் (CCC) மற்றும் கொழும்பு கோல்ட்ஸ் மைதானம் (Colts Colombo) என்பவற்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர் அணிக்குழாம் 

சமரி அதபத்து (தலைவி), யசோதா மெண்டிஸ், ஹாசினி பெரேரா, சஷிகலா சிறிவர்தன, ஏசானி லோகசூரிய, நிலக்ஷி டி சில்வா, அமா காஞ்சனா, ரெபேகா வெண்டொர்ட், கவீஷா டில்ஹாரி, சிறிபாலி வீரகொடி, சுகந்திகா குமாரி, அனுஷ்க சஞ்சீவினி, உதேசிகா பிரபோதனி, இமால்கா மெண்டிஸ், டிலானி மனோதரா

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க