Home Tamil படுதோல்வியுடன் ஒருநாள் தொடரினை பறிகொடுத்த இலங்கை

படுதோல்வியுடன் ஒருநாள் தொடரினை பறிகொடுத்த இலங்கை

171
BCB

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது  போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி டக்வெத் லூயிஸ் முறையில் 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 என கைப்பற்றியிருக்கின்றது. 

அதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்த தொடர் வெற்றியுடன் இலங்கை அணிக்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடர் வெற்றி ஒன்றினையும் பதிவு செய்து வரலாறு படைத்திருக்கின்றது. 

டாக்காவில் இன்று (25) ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் தமிம் இக்பால் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

2021 ஆசிய கிண்ண தொடர் 2023 வரை ஒத்திவைப்பு

ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கினுள் அடங்குகின்ற இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 முன்னிலை பெற்றிருந்த காரணத்தினால், இலங்கை அணி தொடரினை தக்கவைக்க இன்றைய மோதலில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியது.   

இப்போட்டிக்கான இலங்கை அணி மாற்றங்கள் எதுவுமின்றி முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணியினுடன் விளையாட, பங்களாதேஷ் அணி வேகப் பந்துவீச்சாளர் தஸ்கின் அஹமட்டிற்கு பதிலாக அறிமுக வீரர் சொரிபுல் இஸ்லாமினையும், மொஹமட் மிதுனிற்கு பதிலாக மொசாதிக் ஹொசைனினையும் பிரதியீடு செய்திருந்தது. 

இலங்கை அணி – குசல் பெரேரா (தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க, அஷேன் பண்டார, வனிந்து ஹஸரங்க, இசுரு உதான, லக்ஷான் சந்தகன், துஷ்மன்த சமீர

பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால் (தலைவர்), லிடன் தாஸ், சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மொசாதிக் ஹொசைன், மஹமதுல்லா, அபிப் ஹொசைன், மெஹிதி ஹஸன், மொஹமட் சயிபுத்தீன், சொரிபுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான்

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு துஷ்மந்த சமீர அழுத்தம் உருவாக்கியிருந்தார். இதனால், பங்களாதேஷ் அணி அவர்களின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் தமிம் இக்பால் மற்றும் சகீப் அல் ஹசன் ஆகியோரினை பறிகொடுத்த போதும் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹமதுல்லா ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் காரணமாக அவ்வணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 246 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

“துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் ஆடவேண்டும்” – குசல் பெரேரா

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கடந்த போட்டியில் அரைச்சதம் கடந்த முஷ்பிகுர் ரஹீம் அவரின் 8ஆவது ஒருநாள் சதத்தோடு 127 பந்துகளில் 10 பௌண்டரிகள் அடங்கலாக 125 ஓட்டங்களைப் பெற, மஹமதுல்லா 41 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துஷ்மந்த சமீர மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, இசுரு உதான 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 247 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாற்றம் காட்டிய நிலையில் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடும் உருவாகியிருந்தது. இதனால், இலங்கை அணிக்கு போட்டியின் வெற்றி இலக்கு 40 ஓவர்களுக்கு 245 ஓட்டங்களாக மாற்றப்பட்டது. 

எனினும், மோசமான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 141 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது. 

Video – “இலங்கையின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் வனிந்து” – Kusal Perera!

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இரு வீரர்கள் மாத்திரமே 20 ஓட்டங்களை எட்டிய நிலையில், தனுஷ்க குணத்திலக்க பெற்ற 24 ஓட்டங்களே இலங்கை அணியின் தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களாக மாறியது. 

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில், மெஹிதி ஹஸன் மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும், சகீப் அல் ஹசன் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹீம் தெரிவாகியிருந்தார்.  

இப்போட்டியின் தோல்வியோடு இலங்கை அணி தொடரினை இழந்திருக்கின்ற நிலையில், இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (27) நடைபெறுகின்றது. 

போட்டியின் சுருக்கம்

முடிவு – பங்களாதேஷ் அணி டக்வெத் லூயிஸ் முறையில் 103 ஓட்டங்களால் வெற்றி

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



 மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க…