பாகிஸ்தான் அணியினை பயிற்றுவிக்கவுள்ள ஹெய்டன் – பிலாந்தர் ஜோடி

267

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தொடரில் பாகிஸ்தான் அணியினை பயிற்றுவிப்பதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்டவீரர் மெதிவ் ஹெய்டன் மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெர்னன் பிலாந்தர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

அதன்படி தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளின் இந்த முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் விடயத்தினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ரமீஸ் ராஜா உறுதி செய்திருக்கின்றார்.

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சுப்பயிற்சியாளர் வகார் யூனிஸ் ஆகியோர் T20 உலகக் கிண்ணம் நெருங்கி வந்த நிலையில், தங்களது பதவிகளை இராஜினாமா செய்தது பாகிஸ்தான் அணியின் இரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விடயமாக அமைந்திருந்தது.

IPL தொடலிருந்து இங்கிலாந்தின் 3 வீரர்கள் திடீர் விலகல்

அதேநேரம், குறித்த பதவி இராஜினமாக்களை அடுத்து பாகிஸ்தான் அணியின் தற்காலிக பயிற்சியாளர்களாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான  அப்துல் ரசாக் மற்றும் சக்லைன் முஸ்தாக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதோடு, இந்த தற்காலிக பயிற்சியாளர்கள் T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்களின் போது பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<