LPL 2022; கொள்வனவு செய்யப்பட்ட முழு வீரர்கள் விபரம்

Lanka Premier League 2022

1748

இலங்கையில் 3 ஆவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வீரர்கள் வரைவு இன்றைய தினம் (05) நடைபெற்றுமுடிந்தது.

நடைபெற்றுமுடிந்த இந்த வீரர்கள் வரைவில், சர்தேச கிரிக்கெட்டில் T20 போட்டிகளில் பிரகாசித்துவரும் பல முன்னணி வீரர்கள் அணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

LPL 2022; தக்கவைக்கப்பட்ட மற்றும் நேரடி ஒப்பந்த வீரர்கள்

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டி’ஆர்சி ஷோர்ட் (தம்புள்ள ஜயண்ட்ஸ்), தென்னாபிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியர்ஸ் (கொழும்பு ஸ்டார்ஸ்), மேற்கிந்திய தீவுகளின் எவின் லுவிஸ் (ஜப்னா கிங்ஸ்) மற்றும் கார்லோஸ் பிராத்வைட் (கண்டி பெல்கன்ஸ்) ஆகியோருடன் பாகிஸ்தான் வீரர் இமாட் வசீம் (கோல் கிளேடியேட்டர்ஸ்) போன்ற முன்னணி T20 வீரர்கள் இண்டெர்நெசனல் ரூபி பிரிவிலிருந்து இணைக்கப்பட்டனர்.

இலங்கை ரூபி பிரிவிலிருந்து தசுன் ஷானக (தம்புள்ள ஜயண்ட்ஸ்), அஞ்செலோ மெதிவ்ஸ் (கொழும்பு ஸ்டார்ஸ்), திசர பெரேரா (ஜப்னா கிங்ஸ்), வனிந்து ஹஸரங்க (கண்டி பெல்கன்ஸ்) மற்றும் தனுஷ்க குணதிலக்க (கோல் கிளேடியேட்டர்ஸ்) ஆகியோர் அணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர்த்து சர்வதேச T20 கிரிக்கெட்டில் பிரகாசித்துவரும் சந்தீப் லமச்சனே, டொமினிக் டார்க்ஸ், சொஹைப் மலிக், அன்ரே பிளச்சர் மற்றும் ஜெனமன் மலான், நியூசிலாந்தின் டிம் செய்பர்ட், IPL தொடரில் கவனத்தை ஈர்த்திருந்த ஏபி டி வில்லியர்ஸ் பாணியில் துடுப்பெடுத்தாடும் டெவால்ட் பிரேவிஸ் மற்றும் பென் கட்டிங் ஆகிய வீரர்கள் இன்றைய வரைவின் மூலம் அணிகளால் வாங்கப்பட்டிருந்தனர்.

சர்வதேச T20 கிரிக்கெட்டில் பிரபலமான வீரர்கள் தொடரில் இணைக்கப்படாவிட்டாலும், T20 கிரிக்கெட்டில் தங்களுக்கென அடையாளத்தை உருவாக்கிவரும் முன்னணி வீரர்கள் இம்முறை தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமான வீரர்கள் பலர் அணிகளில் இணைக்கப்படாத நிலையில், இலங்கையின் முன்னணி வீரர்கள் பலரும் நடைபெற்றுமுடிந்த வீரர்கள் வரைவில் வாய்ப்பை இழந்துள்ளனர்.

குறிப்பாக ஐசிசி T20i துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை சார்பில் முன்னிலையில் உள்ள பெதும் நிஸ்ஸங்கவை எந்த அணிகளும் வாங்குவதற்கு முன்வரவில்லை.  இவருடன் குசல்  பெரேரா (உபாதை), அவிஷ்க பெர்னாண்டோ (உபாதை), ஓஷத பெர்னாண்டோ, லஹிரு மதுஷங்க, அகில தனன்ஜய, லஹிரு குமார, கசுன் ராஜித மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோரையும் எந்த அணிகளும் வாங்குவதற்கு முன்வரவில்லை.

இதேவேளை, இளம் வீரர்களை பொருத்தவரை தமிழ்பேசும் வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த், சகலதுறை வீரர் தெய்வேந்திரம் டினோஷன் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் தீஷன் விதுசன் ஆகியோர் ஜப்னா கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் மதீஷ பதிரண, நவோத் பரனவிதான, கெவின் கொத்திகொட, டில்ஷான் மதுஷங்க, மொவின் சுபசிங்க, அவிஷ்க பெரேரா, லக்ஷித மானசிங்க, நிபுன் தனன்ஜய, திலும் சுதீர, கலன பெரேரா மற்றும் லக்ஷான் கமகே போன்ற பல இளம் வீரர்களுக்கு இம்முறை LPL தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மூன்றாவது தடவையாக ஆரம்பிக்கவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் இம்மாதம் 31ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தொடரின் ஆரம்பக்கட்ட போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், பிற்பகுதி போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரர்களுக்கான ஒப்பந்தத்தொகையின் முழு விபரம்

இந்த வீரர்கள் வரைவின்படி இண்டெர்நெசனல் ரூபி பிரிவில் உள்ளடங்கும் வீரர்கள் மற்றும் இலங்கை ரூபி பிரிவில் உள்ளடங்கும் வீரர்களுக்கு 60 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என்பதுடன், இண்டெர்நெசனல் ஷெப்பீர் மற்றும் இலங்கை ஷெப்பீர் பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்த தொகையாக வழங்கப்படும்.

அதேநேரம், இண்டர்நெசனல் டயமண்ட் A, B பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு முறையே 40 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுவதோடு, இலங்கை டயமண்ட் A, B பிரிவுகளில் உள்ள வீரர்களுக்கும் முறையே 40 மற்றும் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை இண்டெர்நெசனல் பிளட்டினம் மற்றும் இலங்கை பிளட்டினம் பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், இலங்கை கோல்ட் பிரிவில் உள்ள வீரர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன. அதுமாத்திரமின்றி இலங்கை சில்வர் 1, 2, 3 மற்றும் 4 பிரிவுகளில் உள்ள வீரர்களுக்கு 3000 அமெரிக்க டொலர்கள் வீதம் ஒப்பந்தத்தொகையாக வழங்கப்படும்.

அணிக்குழாம்களில் இணைக்கப்பட்ட வீரர்களின் முழு விபரம்

தம்புள்ள ஜயண்ட்ஸ்

வீரர்கள் வரைவுக்கு முன்னர் இணைக்கப்பட்ட வீரர்கள்

தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ, ரமேஷ் மெண்டிஸ், பென் கட்டிங், நுவான் பிரதீப், தரிந்து ரத்நாயக்க, டி ஆர்ஷி ஷோர்ட், சதுரங்க டி சில்வா

வீரர்கள் வரைவின் மூலம் இணைக்கப்பட்ட வீரர்கள்

சந்தீப் லமச்சானே, டிம் செய்பர்ட், ஹய்டர் அலி, ஷெல்டன் கொட்ரல், பிரமோத் மதுசான், லசித் குரூஸ்புள்ளே, கலன பெரேரா, டிலும் சுதீர, சச்சித்த ஜயலத், துஷான் ஹேமந்த, சஷா டி எல்விஸ், ருவிந்து பெர்னாண்டோ

கொழும்பு ஸ்டார்ஸ்

வீரர்கள் வரைவுக்கு முன்னர் இணைக்கப்பட்ட வீரர்கள்

அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், சரித் அசலங்க, ஜெப்ரி வெண்டர்சே, சீகுகே பிரசன்ன, நிரோஷன் டிக்வெல்ல, டுவைன் பிரிட்டோரியர்ஸ், ஆசிப் அலி, நவீன் உல் ஹக், கரீம் ஜெனட்

வீரர்கள் வரைவின் மூலம் இணைக்கப்பட்ட வீரர்கள்

டொமினிக் டார்க்ஸ், பஷல்ஹக் பரூக்கி, தனன்ஜய லக்ஷான், இசான் ஜயரத்ன, முதித லக்ஷான், லக்ஷித மானசிங்க, கெவின் கொத்திகொட, சதுரங்க குமார, நவோத் பரனவிதாரன, சமோத் பட்டாகே

ஜப்னா கிங்ஸ்

வீரர்கள் வரைவுக்கு முன்னர் இணைக்கப்பட்ட வீரர்கள்

திசர பெரேரா, சொஹைப் மலிக், தனன்ஜய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, அஷான் ரந்திக, பிரவீன் ஜயவிக்ரம, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், ஹர்டஸ் வில்ஜியோன், எவின் லிவிஸ்

வீரர்கள் வரைவின் மூலம் இணைக்கப்பட்ட வீரர்கள்

ஷஹ்னவாஸ் டஹானி, பினுர பெர்னாண்டோ, டிரிஷ்டன் ஸ்டப்ஸ், சுமிந்த லக்ஷான், சதீர சமரவிக்ரம, டில்ஷான் மதுசங்க, நிபுன் தனன்ஜய, விஜயகாந்த் வியாஸ்காந்த், தீஷன் விதுசன், தெய்வேந்திரம் டினோசன்

கண்டி பெல்கோன்ஸ்

வீரர்கள் வரைவுக்கு முன்னர் இணைக்கப்பட்ட வீரர்கள்

வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, கமிந்து மெண்டிஸ், கார்லோஸ் பிராத்வைட்

வீரர்கள் வரைவின் மூலம் இணைக்கப்பட்ட வீரர்கள்

பெபியன் எலன், அன்ரே பிளச்சர், இசுரு உதான, டேவால்ட் பிரேவிஸ், மதீஷ பதிரண, அஷேன் பண்டார, உஸ்மான் ஷின்வாரி, அஷான் பிரியன்ஜன், மினோத் பானுக, அவிஷ்க பெரேரா, அஷைன் டேனியல், மலிந்த புஷ்பகுமார, ஜனித் லியனகே, லசித் அபேரத்ன, கெவின் பண்டார

கோல் கிளேடியேட்டர்ஸ்

வீரர்கள் வரைவுக்கு முன்னர் இணைக்கப்பட்ட வீரர்கள்

தனுஷ்க குணதிலக்க, சர்பராஸ் அஹ்மட், குசல் மெண்டிஸ், புலின தரங்க, பஹீம் அஷ்ரப், துஷ்மந்த சமீர, லக்ஷான் சந்தகன், நுவான் துஷார, இமாட் வசீம்

வீரர்கள் வரைவின் மூலம் இணைக்கப்பட்ட வீரர்கள்

ஜெனமன் மலான், ஷெப்புன் ரதபோர்ட், அசாம் கான், நுவனிந்து பெர்னாண்டோ, நிமேஷ் விமுக்தி, மொவின் சுபாசிங்க, நிபுன் மாலிங்க, சச்சிந்து கொலம்பகே, லக்ஷான் கமகே, தரிந்து கௌஷால், சம்மு அஷான்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<