உள்ளுர் போட்டிகளில் தொடர்ந்து கலக்கும் மாலிங்கவின் மற்றுமொரு மைல்கல்

1450

இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் 1000 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் 2017/2018 பருவகாலத்துக்கான உள்ளுர் கழகங்களுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரில் இன்றைய தினம் 11 போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

NCC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற NCC அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கொழும்பு அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. போட்டியின் இரண்டாவது ஓவரின் 3ஆவது பந்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரொன் சந்திரகுப்த ஒரு ஓட்டத்துடன் LBW முறையில் ஆட்டமிழக்க, அதே ஓவரின் 4ஆவது பந்தில் அஷான் பிரியன்ஜன் ஓட்டம் எதனையும் பெறாமலும் லசித் மாலிங்கவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

ரொஷேன் சில்வாவின் அபார ஆட்டத்தால் ராகம அணிக்கு இரண்டாவது வெற்றி

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடாத்தும் 2017/18 பருவகாலத்துக்கான பிரதான…

தொடர்ந்து, அதிரடியாக பந்து வீசிய மாலிங்க, 5 ஓட்டங்களைப் பெற்ற மாதவ வர்ணபுரவின் விக்கெட்டினை அடுத்து கைப்பற்றினார்.

இதன்படி கொழும்பு கிரிக்கெட் அணிக்கு ஆரம்பம் முதல் பந்துவீச்சில் அச்சுறுத்தலைக் கொடுத்த லசித் மாலிங்க, அவ்வணியின் முதல் 3 துடுப்பாட்ட வீரர்களை 15 ஓட்டங்களுக்குள் ஓய்வறைக்குத் அனுப்பினார்.

இதில் தனது இரண்டாவது விக்கெட்டாக அஷான் பிரியஞ்சனை ஆட்டமிழக்கச் செய்த மாலிங்க, தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் ஆயிரம் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராகவும் இடம்பிடித்தார்.

அத்துடன், முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் 257 விக்கெட்டுக்கள், ஒரு நாள் போட்டிகளில் 396 விக்கெட்டுக்கள் மற்றும் டி20 போட்டிகளில் 348 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி ஆயிரம் விக்கெட்டுக்கள் மைல்கல்லை அவர் எட்டினார்.

அதனைத் தொடர்ந்து பந்து வீசிய லஹிரு குமார, சதுரங்க டி சில்வா மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுக்களையும் கைப்பற்ற கொழும்பு அணி 46.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

ஒரு புறத்தில் கொழும்பு அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிந்தாலும், அவ்வணிக்காக ஆரம்பம் முதல் நிதானமாக விளையாடி சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றை முன்னெடுத்த கவீன் பண்டார, அரைச்சதம் கடந்து அசத்தினார். ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 77 ஓட்டங்களை அவர் கொழும்பு அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் லசித் மாலிங்க 8 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், லஹிரு குமார, சதுரங்க டி சில்வா மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

அதனையடுத்து 182 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய NCC அணிக்கு முதல் ஓவரிலேயே பானுக ராஜபக்ஷ 4 ஓட்டங்களுடன் லஹிரு கமகேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து நிரோஷன் திக்வெல்ல 9 பந்துகளுக்கு மாத்திரம் முகங்கொடுத்து 8 ஓட்டங்களைப் பெற்று LBW முறையில் நுவன் துஷாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும், அவ்வணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கிய சந்துன் வீரரக்கொடி(50), அஞ்செலோ பெரேரா(51) மற்றும் மஹேல உடவத்த(53) அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்க்க, 26.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து NCC அணி வெற்றியைப் பதிவுசெய்ததுடன், C பிரிவில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 181 (46.1) – கவீன் பண்டார 77, லசித் அபேரத்ன 28, லசித் மாலிங்க 4/17, சதுரங்க டி சில்வா 2/43, லஹிரு குமார 2/48

NCC – 183/3 (26.1) – மஹேல உடவத்த 53*, அஞ்ceலோ பெரேரா 51*, சந்துன் வீரக்கொடி 50, லக்‌ஷான் கமகே 1/22, நுவன் துஷார 1/27, லஹிரு கமகே 1/40

முடிவு NCC 7 விக்கெட்டுக்களால் வெற்றி


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

D குழுவுக்காக நடைபெற்ற இப்போட்டியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தை எதிர்கொண்ட ராகம கிரிக்கெட் கழகம் லஹிரு மிலந்தவின் சதம் மற்றும் ரொஷேன் சில்வாவின் அரைச்சதங்களின் உதவியினால் 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி, இத்தொடரில் தமது 3ஆவது தொடர்ச்சியான வெற்றியை பெற்றுக்கொண்டது.

பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராகம கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இலங்கை வீரர்களுக்கு பார்சிலோனா கழகம் பயன்படுத்திய மென்பொருள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் திறமையை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும்…

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தமிழ் யூனியன் அணிக்காக 4ஆம் மற்றும் 5ஆம் இலக்கங்களில் களமிறங்கிய தரங்க பரணவிதாரன 85 பந்துகளில் 72 ஓட்டங்களையும், கித்ருவன் விதானகே 64 பந்துகளில் 61 ஓட்டங்களையும் அவ்வணிக்காக பெற்றுக் கொடுக்க, அந்த அணி 42 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் அபாரமாக விளையாடிய தரங்க பரணவிதாரன முதல் தரப் போட்டிகளில் தனது தொடர்ச்சியான 7ஆவது அரைச்சதத்தையும் பதிவுசெய்தார்.

தொடர்ந்து 261 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பாடிய ராகம கிரிக்கெட் கழகம் 40 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியைப் பதிவுசெய்தது.

 போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 260/7 (42) – தரங்க பரணவிதாண 72, கித்ருவன் விதானகே 61, சிதார கிம்ஹான் 29, இஷான் ஜயரத்ன 2/21

ராகம கிரிக்கெட் கழகம் – 261/4 (40) – லஹிரு மிலந்த 112, ரொஷேன் சில்வா 68, சமீர டி சொய்சா 30*, லஹிரு திரிமான்ன 29

முடிவு ராகம கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

பனாகொட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை குருநாகல் இளையோர் கழகத்துக்கு வழங்கியது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குருநாகல் இளையோர் கழகம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து துடுப்பாடிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 38.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்ந அணிக்காக தனுக தேபரே 123 ஓட்டங்களையும், கமிந்து கனிஷ்க 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வலுசேர்த்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 250/9 (50) – சரிந்த தஸ்ஸநாயக்க 47, கேஷான் விஜேரத்ன 36*, சரித் மெண்டிஸ் 30, தனுஷக தர்மசிறி 27, பிரமோத் மதுவந்த 2/31, சாலிய சமன் 2/57

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 251/4 (38.3) – தனுக தேபரே 123, கமிந்து கனிஷ்க 56, ருவிந்து குணசேகர 28

முடிவு செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி


கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

B குழுவுக்காக நடைபெற்ற இப்போட்டியில் காலி கிரிக்கெட் கழகத்தை எதிர்கொண்ட கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் போட்டியை 136 ஓட்டங்களால் வென்றது.

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி காலி கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கோல்ட்ஸ் அணி, பிரியமால் பெரேராவினால்(102) ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட சதம், அவிஷ்க பெர்னாண்டோ(74) மற்றும் சங்கீத் குரே(72) அரைச்சதங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழகம், 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

முத்தரப்பு T-20 தொடரில் குசல் மெண்டிஸ் விளையாடுவதில் சந்தேகம்

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20…

பந்துவீச்சில் கொழும்பு கோல்ட்ஸ் அணிக்காக நுவன் குலசேகர 4 விக்கெட்டுக்களையும், மஹேஷ் தீக்ஷன 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதில் நுவன் குலசேகர தனது 350ஆவது முதல்தர விக்கெட் மைல்கல்லையும் எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 300/7 (50) – பிரியமால் பெரேரா 102*, அவிஷ்க பெர்னாண்டோ 74, சங்கீத் குரே 72, கயான் சிறிசோம 3/60, ஹரீன் வீரசிங்க 2/54

காலி கிரிக்கெட் கழகம் – 164 (42.5) – ஹர்ஷ ராஜபக்ஷ 69, அருண தர்மசேன 37, நுவன் குலசேகர 4/07, மஹேஷ் தீக்ஷன 3/37

முடிவு கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 136 ஓட்டங்களால் வெற்றி

ஏனைய போட்டிகளின் முடிவுகள்

 நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கிரிக்கெட் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 196/8 (50) – லசித் குரூஸ்புள்ளே 59, சந்துன் டயஸ் 41, தரிந்து வீரசிங்க 40, மதீஷ பெரேரா 3/27, M. நிமேஷ் 2/24

களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் – 199/6 (42)கீத் பெரேரா 65, சுரேஷ் நிரோஷன் 59, மதீஷ பெரேரா 20, ரொஷேன் பெர்னாண்டோ 3/40

முடிவு களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டு கழகம்

சோனகர் விளையாட்டுக் கழகம் – 275/8 (50) – திலக்ஷ சுமனசிறி 56, அதீஷ திலஞ்சன 51, சாமர சில்வா 47, வினோத் பெரேரா 4/56, அனுத்தர மாதவ 3/68

பாணந்துறை விளையாட்டு கழகம் – 82 (31.3) – கோசல குலசேகர 4/24, HRC டில்ஷான் 3/31

முடிவு சோனகர் விளையாட்டுக் கழகம் 193 ஓட்டங்களால் வெற்றி


ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் – 92 (23.1) – சவின் குணசேகர 20*, புத்திக ஹசரங்க 17, மலித் டி சில்வா 4/20, இம்ரான் கான் 4/26

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 96/1 (17) – அதீஷ நாணயக்கார 51, நிசால் பிரான்சிஸ்கோ 34*

முடிவு ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுக்களால் வெற்றி


SSC எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

SSC – 235 (49.1) – திமுத் கருணாரத்ன 64, சாமர கபுகெதர 60, டிலான் ஜயலத் 28, சானக கோமசாரு 4/33, மதுக லியனபதிரனகே 2/45

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 161/9 (50) – ரமேஷ் நிமந்த 33, சச்சித்ர சேனாநாயக்க 3/17, சரித் அசலங்க 2/07, தம்மிக பிரசாத் 2/25

முடிவு SSC 74 ஓட்டங்களால் வெற்றி

பாகிஸ்தானை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் இலங்கை மகளிர் அணி

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமான சாமரி அத்தபத்து…


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 255/9 (50) –சத பெர்னாண்டோ 52, சச்சித்ர சேரசிங்க 47, திக்‌ஷி டி சில்வா 46, ஷெஹான் ஜயசூரிய 39, நவீன் கவிகார 3/37, சானக ருவன்சிறி 2/38, ரஜீவ வீரசிங்க 2/52

லங்கன் கிரிக்கெட் கழகம் – 201 (45.1) – ஷான் சமரசிங்க 63, ஷின் பெர்னாண்டோ 29, ரஜீவ வீரசிங்க 28, அசித பெர்னாண்டோ 4/39, ஷெஹான் ஜயசூரிய 3/30

முடிவு சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 54 ஓட்டங்களால் வெற்றி


BRC எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம்

BRC – 168 (41) – தேஷான் டயஸ் 38, சசின் தில்ரங்க 27, திலிப் தாரக 4/31, ஜானக பிரீஸ் 2/33

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் – 127 (34.1) – எஸ்.எல் பெர்னாண்டோ 39, துலாஷ் உதயங்க 24, திலிப் தாரக 22, திலகரத்ன சம்பத் 4/12, ஹிமேஷ் ராமநாயக்க 2/19, சுராஜ் ரந்திவ் 2/21

முடிவு BRC கழகம் 41 ஓட்டங்களால் வெற்றி

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 224/10 (49.5) – ஸ்ரீமன்த விஜேரத்ன 54, சச்சித ஜயதிலக 41, நிஷhந்த குமார 35, சமித் துஷhந்த 24, சாரங்க ராஜகுரு 3/41, யொமேஷ; ரணசிங்க 2/27

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 192/10 (47.5) – நதீர நாவல 44, டில்ஹான் குரே 40, நிமன்த மதுஷங்க 32, ஷpரான் ரத்னாயக்க 23, மஹேஷ; பிரியதர்ஷன 4/45, நிமேஷ; விமுக்தி 3/34, புத்திக சன்ஜீவ 2/24

முடிவு – பொலிஸ் விளையாட்டு கழகம் 32 ஓட்டங்களால் வெற்றி