புனித செபஸ்டியன்ஸ் மற்றும் நாலந்த அணிகள் முன்னிலையில்

145
U15 School Cricket

பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோருக்கான சிங்கர்கிரிக்கட் சுற்றுத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாயின. முதலாவது அரையிறுதியில் நாலந்த கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி ஆகிய அணிகள் மோதிக் கொண்டதுடன் இரண்டாவது அரையிறுதியில் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரியும் புனித செபஸ்டியன்ஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன.

நாணய சுழற்சியில் வென்ற புனித தோமஸ் கல்லூரி முதலில் நாலந்த கல்லூரியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய நாலந்த கல்லூரி அணி 42.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். நாலந்த கல்லூரி சார்பாக லக்சான் காஷ்யப 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் மோக்ச சங்கல்ப 31 ஓட்டங்களைக் குவித்தார். புனித தோமஸ் கல்லூரி சார்பில் பந்து வீச்சில் அசத்திய தினித் வன்னியாராச்சி 39 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய புனித தோமஸ் கல்லூரி ஆரம்பம் முதலே தடுமாறியது. கிஷான் முனசிங்க (34) மற்றும் தில்மின் ரத்நாயக்க (ஆட்டமிழப்பின்றி 23) அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய போதிலும் ஆட்ட நிறைவின் போது, புனித தோமஸ் கல்லூரி 8 விக்கட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. தமிந்து கமலசூரிய 30 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கடுட்களைப் பெற்றுக் கொண்டார்.

 போட்டியின் சுருக்கம் 

நாலந்த கல்லூரி

முதல் இன்னிங்ஸ் – 164/10 (42.2)

லக்சான் காஷ்யப 41, மோக்ச சங்கல்ப 31 – தினித் வன்னியாராச்சி 5/39

புனித தோமஸ் கல்லூரி

முதல் இன்னிங்ஸ் – 124/8 (46)

கிஷான் முனசிங்க 34, தில்மின் ரத்நாயக்க 23* தமிந்து கமலசூரிய 4/30

பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரியை எதிர்த்து களமிறங்கிய புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித் தலைவர் ஷனில் பெர்னாண்டோ 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் அசத்தலாக ஆடிய ஜணுஷ்கா பெரேரா 109 ஓட்டங்களைக் குவித்தார்.

ஆட்ட நிறைவின் போது புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி 9 விக்கட்டுகளை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி சார்பில் பந்து வீச்சில் ஓசந்த சந்தருவான் 58 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

 போட்டியின் சுருக்கம் 

புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி

முதல் இன்னிங்ஸ் – 310/9 (90)

ஜணுஷ்கா பெரேரா 109, ஷனில் பெர்னாண்டோ 82, சுகித்த பிரசன்ன 40 – ஓசந்த சந்தருவான் 5/58, கவின் சதுஷ்க 2/32

நாளை போட்டிகளின் இரண்டாவது நாளாகும்.