இலங்கை வீரர்களுக்கு பார்சிலோனா கழகம் பயன்படுத்திய மென்பொருள்

2367

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் திறமையை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகும் வகையிலும் உலகின் பிரபல கால்பந்து கழகமாக பார்சிலோனா கழகம் பயன்படுத்துகின்றவிமு ப்ரோ” என்ற தொழில்நுட்ப ஆய்வு நுணுக்கத்தை பின்பற்றுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

[rev_slider LOLC]

இதன்படி, தற்போது நடைபெற்று வருகின்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரிலிருந்து இந்தப் புதிய கருவியை கையில் பொருத்திக் கொண்டு இலங்கை வீரர்கள் போட்டிகளில் விளையாடி வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிடம் தோற்ற இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் சவால்

இதனால் தொடரில் ஒரு வெற்றி இரண்டு தோல்விகளுடன்..

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உடற்தகுதி பயிற்றுவிப்பாளர் நிக் லீயின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை(12) சுதந்திர கிண்ண முத்தரப்பு தொடருக்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்காக கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த புதிய உபகரணம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது, பார்சிலோனா கால்பந்து கழகத்தினால் வீரர்களின் உடற் செயற்பாடுகளை தொடர்ந்து ஆராய்வதற்காகவும், மைதானத்தில் உள்ள வீரர்களின் உடல் அசைவுகளை தொடர்ந்து மேற்பார்வை செய்து தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் பயன்படுத்தப்படுகின்ற இந்த விசேட மென்பொருள் உபகரணத்தை பார்வையிடுவதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு நிக் லீ கருத்து வெளியிடுகையில், போட்டிகள் பற்றிய ஆய்வுகளை நடத்தும் விமு ப்ரோ மென்பொருள், இலங்கை வீரர்களை துடுப்பாட்டம், களத்தடுப்பின் போது தொடர்ந்து அவதானிப்பதற்கும் உதவுகின்றது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் எமது வீரர்கள் இந்த கருவியை பொருத்திக்கொண்டு விளையாடியிருந்தனர். இதில் எமது வீரர்கள் மைதானத்தில் ஓடியது முதல் களத்தடுப்பில் மேற்கொண்ட சைகைகள் அனைத்தும் இதில் பதிவாகியுள்ளன. இதனைப்பயன்படுத்தி ஒவ்வொரு வீரர்களினதும் குறைபாடுகளை அறிந்துகொண்டு உரிய பயிற்சிகளை வழங்க முடியும்” என அவர் தெரிவித்தார்.

சுதந்திர கிண்ணத் தொடரில் போட்டித் தடையைப் பெறும் சந்திமால்

இலங்கை அணித்தலைவரான தினேஷ் சந்திமால்…

இந்நிலையில், இலங்கை வீரர்களின் கிரிக்கெட் திறமைகளை ஆய்வு செய்யவும் அவர்களை உபாதைகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலும் பார்சிலோனா கழகத்தினால் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்திறனுடனான விமு ப்ரோ என்ற மென்பொருளை நாம் இலங்கை வீரர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளோம். இதற்காக கிட்டத்தட்ட 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் செலவிட்டுள்ளோம். எனவே, ஏனைய சர்வதேச அணிகளிடம் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் இலங்கை அணியிடமும் தற்போது உண்டு என குறித்த ஊடக சந்திப்பின்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.  

இதேநேரம், அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை கருத்திற்கொண்டு இலங்கை வீரர்களின் திறமைகளை மேலும் அதிகரிப்பதற்காக நாம் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் ஒரு அங்கமாகவே வீரர்களுக்காக இந்த மென்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதுஎன இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி சில்வா தெரிவித்தார்.

இதன்படி, அண்மைக்காலமாக தொடர் தோல்விகள், உபாதைகள் காரணமாக பின்னடைவை சந்தித்து வந்த இலங்கை அணிக்கு இந்த புதிய மென்பொருள் அணியின் முன்னேற்றத்துக்கும், வெற்றிக்கும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.