இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் உத்தேச குழாம் அறிவிப்பு

46
 

இம்மாத இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை அணியுடன் மோதும் பாகிஸ்தான் அணியின் 20 பேர் கொண்ட உத்தேச குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் மிஸ்பாஹ் உல் ஹக்கினால் பெயரிடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் …….

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் போட்டித்தொடர் நடைபெறவிருந்தது. எனினும், இரு கிரிக்கெட் சபைகளின் இணக்கப்பாட்டுக்கு மத்தியில் டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதத்துக்கு பின்தள்ளப்பட்டு, முன்னதாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களை நடாத்த முடிவெடுக்கப்பட்டது. 

அதன் பிரகாரம் இரு அணிகளுக்குமிடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பவற்றை பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாஹூரில் நடாத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

பல பயங்கரவாத சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் 10 அனுபவ வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ள நிலையில், குறித்த தொடருக்காக லஹிரு திரிமான்ன தலைமையிலான இளம் ஒருநாள் குழாமும், தசுன் ஷானக்க தலைமையிலான இளம் டி20 குழாமும் கடந்த புதன்கிழமை (11) இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டிருந்தது. 

தொடர்ந்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவராக சர்பராஸ்

பாகிஸ்தான் அணி, நடைபெற்று முடிந்த கிரிக்கெட் …….

இந்நிலையில், குறித்த இரு தொடர்களுக்குமான பாகிஸ்தான் அணியின் 15 பேர் கொண்ட இறுதி குழாம் எதிர்வரும் சனிக்கிழமை (21) அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட உத்தேச குழாமானது பயிற்சி முகாமில் ஈடுபடவுள்ளது

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மற்றும் உபதலைவர் தொடர்பான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (13) வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி அணித்தலைவராக தொடர்ந்தும் சர்ப்ராஸ் அஹமட், உபதலைவராக பாபர் அஸாம் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்

அண்மையில் நிறைவுக்குவந்த .சி.சி உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியிலிருந்து தவறவிடப்பட்டிருந்த பல அனுபவ வீரர்களுக்கு இலங்கை அணியுடனான தொடரில் விளையாடும் வகையில் உத்தேச குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அஹமட் ஷெஹ்ஸாட், உமர் அக்மல், பஹீம் அஸ்ரப், மொஹமட் றிஸ்வான், ஆபித் அலி, இப்திகார் அஹமட் மற்றும் உஸ்மான் ஷென்வாரி ஆகிய 7 வீரர்கள் இவ்வாறு குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை – பங்களாதேஷ் A அணிகளுக்கிடையிலான தொடர் அட்டவணை வெளியீடு

பங்களாதேஷ் A அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு ……..

குறித்த உத்தேச குழாமில், கடந்த உலகக் கிண்ண தொடரில் விளையாடிய அனுபவ சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் தவறவிடப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் இவர் விளையாடுவதனால் இவ்வாறு குழாமில் இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் உத்தேச குழாம் 

சர்ப்ராஸ் அஹமட், பாபர் அஸாம், ஆபித் அலி, அஹமட் ஷெஹ்ஸாட், ஆசிப் அலி, பஹீம் அஸ்ரப், பக்ஹர் ஷமான், ஹரிஸ் சுஹைல், ஹசன் அலி, இப்திகார் அஹமட், இமாட் வஸீம், இமாம் உல் ஹக், மொஹமட் ஆமிர், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட் றிஸ்வான், சதாப் கான், உமர் அக்மல், உஸ்மான் ஷென்வாரி, வஹாப் ரியாஸ்

வெளியிடப்பட்டுள்ள உத்தேச அணியானது லஹூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் நாளை (18) தங்களுக்கான பயிற்சி முகாமில் ஈடுபடவுள்ள நிiலையில், இதிலிருந்து இறுதி குழாம் சனிக்கிழமை (21) அறிவிக்கப்பட்டு ஒருநாள் குழாமானது எதிர்வரும் செவ்வாய்கிழமை (24) கராச்சி பயணிக்கவுள்ளது

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி கராச்சியில் நடைபெறவுள்ளது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<