2019 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி பற்றிய தவறு குறித்து முன்னாள் நடுவர்

49

தென்னாபிரிக்காவினைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் போட்டி நடுவரான மரைஸ் எரஸ்மஸ் 2019ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடைபெற்ற இரண்டு தவறுகள் குறித்து மனம் திறந்திருக்கின்றார்.  

இரத்தினரபுரியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு

2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியிருந்தன. இந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியானது சமநிலையில் நிறைவுக்கு வர பௌண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து சம்பியன் பட்டம் வென்றிருந்தது 

விடயங்கள் இவ்வாறிருக்க இந்த இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி ஓவரில் போட்டி நடுவர்கள் மேற்கொண்ட குறிப்பிட்ட தவறு ஒன்றின் காரணமாக இங்கிலாந்து அணிக்கு மேலதிகமாக ஒரு ஓட்டம் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கின்றார் 

உலகக் கிண்ண இறுதிப் போட்டியினை தொடர்ந்து (அடுத்த நாளில்) நான் எனது ஹோட்டல் அறையின் கதவை திறந்து கொண்டு காலை உணவுக்காக வெளியே வந்தேன், அதேநேரம் (போட்டியில் என்னுடன் சக நடுவராக காணப்பட்ட) குமார் தர்மசேனவும் வெளியே வந்தார். அவர், ”நாம் இருவரும் மிகப் பெரிய தவறு ஒன்றை மேற்கொண்டோம், நீங்கள் அதனை கவனித்தீரா? என்றார்.” 

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்ட மார்டின் கப்டில் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸில் பட்டதன் பின்னர் பௌண்டரி எல்லைக்கு சென்றது. இந்த சந்தர்ப்பத்தில் போட்டி நடுவர்கள் இங்கிலாந்து வீரர்கள் ஓடிப் பெற்ற இரண்டு ஓட்டங்களுடன், பௌண்டரிக்குச் சென்ற பந்தின் மூலம் ஆறு ஓட்டங்கள் கிடைக்கப் பெற்றதாக அறிவித்தனர் 

மீண்டும் தலைவராகும் பாபர் அஷாம்!

எனினும் பின்னர் போட்டியின் Replay இணை சோதித்த போது இங்கிலாந்து வீரர்கள் ஓடியதன் மூலம் ஒரு ஓட்டம் மாத்திரம் பெறப்பட்டது அவதானிக்கப்பட்டிருந்தது. எனவே மேலதிக பௌண்டரிக்கும் சேர்த்து நடுவர்கள் மொத்தமாக ஐந்து ஓட்டங்களை மாத்திரமே வழங்கியிருக்க வேண்டும். மரைஸ் எரஸ்மஸ் இந்த விடயத்திலேயே தாம் முதல் தவறினை செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். உலகக் கிண்ண இறுதிப் போட்டி சமநிலை அடைந்ததன் காரணமாக தவறுதலாக வழங்கப்பட்டிருந்த குறித்த ஒரு ஓட்டம் மிக முக்கியமானதாக  அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது 

அதேவேளை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தான் மேற்கொண்ட மற்றுமொரு தவறுக்கும் வருந்துவதாக மரைஸ் எரஸ்மஸ் குறிப்பிட்டிருந்தார். மரைஸ் எரைஸ்மஸ் குறிப்பிட்ட உலகக் கிண்ண உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் துடுப்பாட்டவீரரான ரொஸ் டெய்லரிற்கு LBW ஆட்டமிழப்பு வழங்கியிருந்தார். எனினும் குறிப்பிட்ட ஆட்டமிழப்பினை நியூசிலாந்து அணியானது தமக்கு நடுவர் முடிவை மீள் பரிசோதிக்கும் வாய்ப்பு (Review) இல்லாததன் காரணமாக மீள பரிசோதனை செய்ய முடியாத நிலை உருவாகியிருந்தது 

பின்னர் இந்த ஆட்டமிழப்பு குறித்த Reply இணை சோதனை செய்த போது ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே மரைஸ் எரஸ்மஸ் தான் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வழங்கிய இந்த தவறான ஆட்டமிழப்பிற்கும் வருந்துவதாக குறிப்பிட்டிருந்தார். 

இந்த விடயங்கள் புறமிக்க போட்டி நடுவராக செயற்பட மிகவும் சிறந்த அணிகளில் ஒன்றாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி காணப்படுவதாகவும் மரைஸ் எரஸ்மஸ் சுட்டிக்காட்டியிருந்தார் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<