இலங்கை – பங்களாதேஷ் A அணிகளுக்கிடையிலான தொடர் அட்டவணை வெளியீடு

71

பங்களாதேஷ் A அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (16) வெளியிட்டுள்ளது. 

பங்களாதேஷ் A கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை A கிரிக்கெட் அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற இரு டெஸ்ட் போட்டிகள் மற்றும் உத்தியோகபூர்வமற்ற மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

T20i இல் தமது சொந்த உலக சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான்

சர்வதேச T20 அரங்கில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி…..

அஷான் பிரியன்ஜன் தலைமையிலான இலங்கை A கிரிக்கெட் அணியானது இறுதியாக கடந்த மே மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரு தொடர்களில் விளையாடியிருந்தது. 

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய A அணியுடன் விளையாடிய இலங்கை A அணி 2 – 0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரு போட்டிகள் மழையினால் கைவிடப்பட தொடர் 2 – 2 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்குவந்தது.

குறித்த இந்திய A அணியுடனான தொடரில் இலங்கை தேசிய அணியில் விளையாடிய வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு குமார, அஷான் பிரியன்ஜன், விஷ்வ பெர்ணான்டோ, அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகான், சதீர சமரவிக்ரம, தனுஷ்க குணதிலக்க, ஷெஹான் ஜயசூரிய மற்றும் தசுன் சானக்க ஆகிய வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள தொடரில் பங்கேற்பதற்கான பங்களாதேஷ் A அணி நாளை மறுதினம் (18) இலங்கை வந்தடையவுள்ளது. மேலும் குறித்த இரு தொடர்களையும் நிறைவு செய்கின்ற பங்களாதேஷ் A அணி அடுத்த மாதம் 13 ஆம் திகதி இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகிறது.

தொடர் அட்டவணை

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்

23 – 26 செப்டம்பர் – முதலாவது போட்டி – எம்.சி.ஜி கட்டுநாயக்க

30 செப்டம்பர் – 3 ஒக்டோபர் – இரண்டாவது போட்டி – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்

7 ஒக்டோபர் – முதலாவது ஒருநாள் போட்டி – மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அம்பாந்தோட்டை

9 ஒக்டோபர் – இரண்டாவது ஒருநாள் போட்டி – மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ஹம்பாந்தோட்டை

12 ஒக்டோபர் – மூன்றாவது போட்டி – ஆர். பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானம் – கொழும்பு

47 வருடங்களின் பின் சமநிலையாகிய ஆஷஸ் தொடர்

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில்…..

இலங்கை A அணியின் தற்போதைய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும்இ இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான ரோய் டயஸ் செயற்படுகின்றார். மேலும் A அணியின் முகாமையாளராக சமிந்த மெண்டிஸ் செயற்படுகின்றார்.

இதேவேளை பங்களாதேஷூடனான குறித்த தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை A அணியின் குழாம் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<