BPL தொடரில் இருந்து விலகிய சொஹைப் மலிக்

83
Malik leaves Fortune

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான சொஹைப் மலிக் தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரில் இருந்து அதிரடியாக வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

>> மகளிர் பிரீமியர் லீக்கில் ஒப்பந்தமாகியுள்ள சமரி அத்தபத்து

BPL T20 தொடரில் போர்ச்சூன் பாரிசல் (Fortune Barishal) அணிக்காக சொஹைப் மலிக் ஒப்பந்தமாகியிருந்தார். அவர் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வரை அவ்வணிக்காக விளையாட ஒப்பந்தமாகிய போதும் (அணியின் 9ஆவது லீக் போட்டி வரைபோர்ச்சூன் பாரிசல் அணி விளையாடிய மூன்றாவது போட்டியின் பின்னர் சொஹைப் மலிக் BPL T20 தொடரில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ESPNcricinfo நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்றுக்கு அமைய சொஹைப் மலிக் அவர் துடுப்பாடும் இலக்கம் குறித்து  போர்ச்சூன் பாரிசால் அணி நிர்வாகத்தோடு ஏற்பட்ட அதிருப்திக்கு அமையவே BPL T20 தொடரில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது. 

>> பாகிஸ்தான் சுபர் லீக்கில் இருந்து விலகும் ரஷீட் கான்

விடயங்கள் இவ்வாறிருக்க குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக போர்ச்சூன் பாரிசல் அணி கடந்த ஜனவரி 22ஆம் திகதி விளையாடிய போட்டியில் தொடர்ச்சியாக மூன்று “No Ball” வீசியதற்காகவும் சொஹைப் மலிக் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, அது தொடர்பில் சூதாட்ட சர்ச்சைகள் எழுந்திருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது. 

அதோடு சொஹைப் மலிக் ஆடவர் தொழில்முறை T20 போட்டியொன்றில் மூன்று தடவைகளுக்கு மேல் “No Ball” வீசிய முதல் சுழல்பந்துவீச்சாளராகவும் (ESPNcricinfo தரவுகளின் அடிப்படையில்) சொஹைப் மலிக் மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<