க்ரிஷானின் கன்னி சதத்தால் SSC கழகத்துக்கு வெற்றி

Major Clubs Limited Over Tournament 2022

123

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று (21) மொத்தமாக 12 குழுநிலைப் போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

நேற்றைய போட்டிகளில் Ace Capital கழகம், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், முவர்ஸ் விளையாட்டுக் கழகம், SSC மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆகியவை தமது தொடர் வெற்றிகளை பதிவு செய்தன.

நேற்றைய நாளுக்கான துடுப்பாட்டத்தினை நோக்கும் போது SSC கழகத்துக்காக விளையாடி வருகின்ற 23 வயது இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான க்ரிஷான் சன்ஜுல சதம் (128) விளாசியிருந்தார். List A போட்டிகளில் அவரது கன்னி சதம் இதுவாகும்.

அதேநேரம், க்ரிஷான் சன்ஜுலவின் சதம் மற்றும் நுவனிது பெர்னாண்டோவின் அரைச் சதத்தின் உதவியுடன் SSC கழகம் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக (5 விக்கெட்டுகளால்) வெற்றியினையும் பதிவு செய்திருந்தது.

இதுதவிர செபஸ்டியனைட்ஸ் கழகத்தின் அக்ஷ்தீப் நாத் (137), லங்கன் கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் சதம் விளாசியிருந்தார்.

அதேநேரம் தேசிய அணி வீரர்களில் ஒருவரான அஷான் பிரியன்ஜன் (80) கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காகவும், நிஷான் மதுஷ்க (75) மற்றும் இஷான் ஜயரட்ன (56) ஆகிய இருவரும் ராகம கிரிக்கெட் கழகத்துக்காகவும் அரைச் சதங்களைப் பதிவு செய்தனர்.

பந்துவீச்சினை நோக்கும் போது ஏஸ் கெபிடல் கழகத்தின் நிம்சர அத்தரகல்ல, சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சந்துன் மெண்டிஸ், விமானப்படை விளையாட்டுக் கழகத்தின் கயான் சிறிசோம ஆகியோர் தலா 5 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் SSC கழகம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 249/8 (49) – ரன்துனு கங்கனாத் 60, கீடான்ஷ் கேஹ்ரா 57, சஷிக டில்ஷான் 3/64, தசுன் ஷானக 1/13

SSc கழகம் – 232/5 (37.4) – க்ரிஷான் சன்ஜுல 128, நுவனிந்து பெர்னாண்டோ 65, லஹிரு தியன்த 3/53, சரித் சுதாரக 1/53

முடிவு – எஸ்எஸ்சி கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 233/10 (50) – சிதார கிம்ஹான் 86, நவிந்து விதானகே 45, சதுரங்க சில்வா 3/32, தமிந்து விக்ரமஆரச்சி 2/38

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 146/10 (32) – சாஹிர் மன்சூர் 35, மலிந்து மதுரங்க 22, சந்துன் மெண்டிஸ் 5/34, உதித் மதுஷான் 2/23

முடிவு – சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 82 ஓட்டங்களால் வெற்றி

களுத்துறை நகர கழகம் எதிர் Ace Capital கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கழகம் – 69/10 (23.2) – டி. வீரசிங்க 22, கனிஷ்க மதுவன்த 9, நிம்சர அத்தரகல்ல 5/27, சானக தேவிந்த 4/23

Ace Capital கிரிக்கெட் கழகம் – 73/3 (13.1) – தனுக தாபரே 27, ஷெஹான் பெர்னாண்டோ 17, இன்ஷக சிறிவர்தன 1/30, தரிந்து சிறிவர்தன 1/9

முடிவு – Ace Capital கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 179/10 (46.3) – அஷான் பெர்னாண்டோ 42, மாதவ வர்ணபுர 30, பிரவீன் ஜயவிக்ரம 2/29, மிலான் ரத்நாயக 2/33

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 180/8 (47.4) – ரிசிர வீரசூரிய 35, பபசர வதுகே 32,  மலிந்த பெரேரா 2/29, சானக கொமசாரு 2/34

முடிவு – முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றி

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 72/10 (32.2) – சங்கீத் குரே 21, ஹஷான் துமிந்து 21, திலும் சுதீர 4/13, டில்ருவன் பெரேரா 3/9, சந்தூஷ் குணதிலக்க 2/15

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 73/5 (20.3) – நவோத் பரணவிதான 27, சந்தூஷ் குணதிலக்க 18, மொஹமட் சிராஸ் 3/14, அகில தனன்ஜய 2/42

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 201/10 (50) – ஹஷான் விமுக்தி 50, மொவின் சுபசிங்க 25, சதுர லக்ஷான் 4/26, ரவிஷ்க விஜேசிறி 2/40

காலி கிரிக்கெட் கழகம் – 140/10 (33.3) – ஹரீன் புத்தில 38, தரிந்து அமரசிங்க 37, கயான் சிறிசோம 5/36, மொவின் சுபசிங்க 3/36

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 61 ஓட்டங்களால் வெற்றி

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 117/10 (39.5) – மெதுஷான் திலின 30, சாலிந்து பத்திரன 24, கேஷர நுவன்த 4/16, கௌரவ் ஜாதர் 2/29

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 118/1 (28) – ஆகாஷ் ஆனந்த் 52, கசுன் விதுர 51, சமித ரங்க 1/14, அருள் பிரகாஷ் 0/4

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுகளால் வெற்றி

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 225/10 (44.3) – மிசானுர் ரஹ்மான் 68, திமுத் சந்தருவன் 66, துவிந்து திலகரட்ன 3/32, சச்சின்த பீரிஸ் 3/33

BRC கழகம் – 203/6 (40) – துஷான் ஹேமன்த 45, கெவின் கொத்திகொட 42, பசிந்து உஷேட்டிகே 3/38, டில்ஷான் முனவீர 2/32

முடிவு – BRC கழகம் 13 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 228/8 (50) – நிஷான் மதுஷ்க 75, இஷான் ஜயரட்ன 56, யொஹான் மத்தெகே 2/46, லஹிரு ஜயரட்ன 2/47

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 98/6 (31) – தனுஷ்க தர்மசிறி 52, ஜனித் லியனகே 2/13, கல்ஹார சேனாரட்ன 2/16

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 64 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)  

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 285/8 (50) – அக்ஷ்தீப் நாத் 137, மானல்கர் டி சில்வா 42, யசிரு ரொட்றிகோ 4/45, ரஜீவ வீரசிங்க 2/50

லங்கன் கிரிக்கெட் கழகம் – 215/7 (38.3) – ரவிந்து ரத்நாயக 76, யசிரு ரொட்றிகோ 41, சச்சித ஜயதிலக 2/20

முடிவு – செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் 19 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)

நுகேகொட விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 147/10 (45.3) – பாக்ய திஸாநாயக்க 35, நயன பெர்னாண்டோ 25, ரொமேஷ் சுரங்க 4/26, சச்சித்ர சேனாநாயக 2/23

கடற்படை விளையாட்டுக் கழகம் – 148/9 (38.1) – மதுர மதுஷங்க 37, லஹிரு ஜயகொடி 23, சஹன் நாணயக்கார 4/30

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் ஒரு விக்கெட்டால் வெற்றி

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 199/10 (46.1) – ரொஹான் விஜேநாயக 41, லக்ஷான் ரொட்றிகோ 32, பவன் டி சில்வா 30, நுவன் துஷார 2/38, லக்ஷான் சந்தகென் 2/39

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 172/6 (36) – அஷான் பிரியன்ஜன் 80, மினோத் பானுக 34, நிமேஷ் விமுக்தி 4/54

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 25 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<