ராகம கழகத்துக்காக சதமடித்து அசத்திய ஜனித் லியனகே

Major Clubs Limited Over Tournament 2022

130

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் இன்று (12) 10 போட்டிகளில் நடைபெற்றன.

இதில் செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் NCC கழகம் அதிர்ச்சி தோல்வியை சந்திக்க, கடற்படை விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் காலி கிரிக்கெட் கழகம் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த நிலையில், விமானப்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் ராகம் கிரிக்கெட் கழகத்தின் ஜனித் லியனகேவும், லங்கன் கழகத்துக்கு எதிரான போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் கிடான்ஸ் கெஹேராவும் சதங்களைக் குவித்து அசத்தியிருந்தனர்.

ராகம கிரிக்கெட் கழகத்தின் தலைவராக செயற்படுகின்ற 27 வயதான ஜனித் லியனகே, லிஸ்ட் A போட்டிகளில் பதிவு செய்த 2 ஆவது சதம் இதுவாகும். அதுமாத்திரமின்றி குறித்த போட்டியில் பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்ட அவர், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பந்துவீச்சை பொறுத்தமட்டில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் அஷான் பிரியன்ஜன் 22 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரளவைத்தார்.

அதேபோன்று, BRC கழகத்துக்கு எதிரான போட்டியில் இராணுவ கிரிக்கெட் கழகத்தின் ரஷ்மிக சிறிவர்தன 5 விக்கெட் குவியலை பதிவு செய்தார்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

ராகம் கிரிக்கெட் கழகம் – 246/6 (50) – ஜனித் லியனகே 102, கல்ஹார சேனாரட்ன 52, லஹிரு தவடகே 39, லசந்த ருக்மால் 2/43, கயான் சிறிசோம 2/49

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 230/8 (50) – மொவின் சுபசிங்க 66, ரஜித ரத்நாயக்க 47, சிதிஜ சமோத் 34, ஜனித் லியனகே 3/46, கல்ஹார சேனாரட்ன 1/23

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 16 ஓட்டங்களால் வெற்றி

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் BRC கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 304/8 (50) – லக்ஷான் எதிரிசிங்க 75, மகேஷ் குமார 65, திசர பெரேரா 43, அசேல குணரட்ன 36, லஹிரு சமரகோன் 2/45, சச்சிந்த பீரிஸ் 2/66

BRC கழகம் – 150 (28.1) – கெவின் கொத்திகொட 30, திலகரட்ன சம்பத் 28, ரஷ்மிக சிறிவர்தன 5/43, லக்ஷான் எதிரிசிங்க 2/1

முடிவு – இராணுவ விளையாட்டுக் கழகம் 154 ஓட்டங்களால் வெற்றி

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 132 (27.4) – ஜீவக ஷேசான் 37, டிலஸ்ரி  லொகுபண்டார 29, மிசானுர் ரஹ்மான் 25, அஷான் பிரியன்ஜன் 6/22

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 136/3 (23.5) – நிமேஷ குணசிங்க 62, பவன்த வீரசிங்க 38, பவன் பதிராஜ 33*, சந்தருவன் சின்தக 2/26

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 298/7 (50) – கிடான்ஸ் கெஹேரா 167, சாமர சில்வா 61*, சமன் குமார 42, ரஜீவ வீரசிங்க 3/37

லங்கன் கிரிக்கெட் கழகம் – 145 (42.1) – துஷிர மதயக்க 34, பூர்ண வண்ணிதிலக 29, ரந்துரு கங்கனாத் 3/16, நுவன் பிரதீப் 2/18, சதுரங்க குமார 2/20

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 153 ஓட்டங்களால் வெற்றி

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 251/8 (50) – மதுர மதுஷங்க 76, சஹன் கோசல 61, பூர்ண சாருக 31*, சதுர லக்ஷான் 2/39, மிஹிரங்க சில்வா 2/41, ரஜித் ப்ரியன் 2/56

காலி கிரிக்கெட் கழகம் – 222 (48) – வினுர துல்சர 73, ரவிந்து செம்புகுட்டிகே 36, திலங்க அவுவார்த் 2/37

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 29 ஓட்டங்களால் வெற்றி

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் Ace Capital கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 178 (43.4) – நவோத் பரணவிதான 45, ரவிந்து பெர்னாண்டோ 35, இசுரு உதான 28, நிம்சர அதரகல்ல 3/32, லசித் க்ரூஸ்புள்ளே 2/26, சானக தேவிந்த 2/30

Ace Capital கழகம் – 46 (13.1) – துலீக திஸ்ஸகுட்டிகே 13, பிரமோத் ஹெட்டிவத்த 12, திலும் சுதீர 4/12, டில்ருவன் பெரேரா 3/8, ஷிரான் பெர்னாண்டோ 3/22

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 132 ஓட்டங்களால் வெற்றி

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 155 (49.5) – லஹிரு ஜயரட்ன 58, முதித பிரேமதாச 29, அவிந்து தீக்ஷன 4/29, ஷெஹான் சில்வா 2/15

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 157/6 (40.5) – கௌரவ் ஜாதர் 38, கவிந்து இரோஷ் 37, புலின தரங்க 31, லஹிரு ஜயரட்ன 2/17, சகிந்து விஜேரட்ன 2/34

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி

நுகேகொட விளையாட்டுக் கழகம் எதிர் கண்டி சுங்க கிரிக்கெட் கழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 212/8 (50) – அரவிந்த பிரேமரட்ன 429, ராகுல் குணசேகர 35, அபிஷேக் லியனாரச்சி 34, அயேஷ் ஹர்ஷன 3/36, மிதுன் ஜயவிக்ரம 2/34

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 105 (36.2) – சலிந்து பதிரன 23, தரிந்து ருக்ஷான் 22, அரவிந்த பிரேமரட்ன 3/20, ஹன்ச டி சில்வா 2/20

முடிவு – நுகேகொட விளையாட்டுக் கழகம் 107 ஓட்டங்களால் வெற்றி

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC கழகம்

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 178/8 (50) – ஷஸ்ரிக புஸ்ஸேகொல்ல 33, சச்சித ஜயதிலக 32, சச்சிந்து கொலம்பகே 4/27, அசேல் சிகேரா 2/37

NCC கழகம் – 106 (26.2) – அசேல் சிகேரா 31, கவின் பண்டார 19, ஷஸ்ரிக புஸ்ஸேகொல்ல 3/24, தரிந்து ரத்நாயக்க 3/34, லொஹான் டி சொய்ஸா 2/12

முடிவு – செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் 72 ஓட்டங்களால் வெற்றி

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 194 (46.4) – கிஹான் எல்பெர்ட் 36, தவீஷ கஹந்துவாரச்சி 36, மொஹமட் வகாஸ் 34, யஷ்பால் சிங் 3/30, மாதவ வர்ணபுர 3/43, சானக கோமசாரு 2/22

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 196/8 (48.5) – யஷ்பால் சிங் 40, அஷான் பெர்னாண்டோ 29, சாமிக பெர்னாண்டோ 3/21, அகாஷ் சேனாரட்ன 2/34

முடிவு – ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<