முவர்ஸ் கழகத்துக்காக அரைச் சதமடித்து அசத்திய மொஹமட் சமாஸ்

Major Clubs Limited Over Tournament 2022

59

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் நேற்று (19) 10 போட்டிகள் நடைபெற்றன.

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயற்பட்டு வருகின்ற முவர்ஸ் விளையாட்டுக் கழகம், இராணுவ விளையாட்டுக் கழகம் மற்றும் Ace Capital கழகம் ஆகியன தமது தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை பெற்றுக் கொண்டன.

இந்த நிலையில், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகத்தின் சஹன் கோசல சதமடித்து அசத்தியிருந்தார்.

பந்துவீச்சை பொறுத்தமட்டில் கோல்ட்ஸ் கழகத்தின் அகில தனன்ஜய, இராணுவ விளையாட்டுக் கழகத்தின் சுமிந்த லக்ஷான், விமானப்படை விளையாட்டுக் கழகத்தின் கயான் சிறிசோம, முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சானுக டில்ஷான் மற்றும் களுத்துறை நகர கழகத்தின் இஷங்க சிறிவர்தன ஆகியோர் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

இதனிடையே, பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் முவர்ஸ் விளையாட்டுக் கழக வீரர் மொஹமட் சமாஸ் அரைச் சதமடித்து கைகொடுத்திருந்தார். இம்முறை போட்டித் தொடரில் அவர் பதிவு செய்த 3ஆவது அரைச் சதம் இதுவாகும்.

அதேபோன்று, காலி கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகத்துக்காக விளையாடி வரும் ரத்னராஜ் தேனுரதன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது இவ்வாறிருக்க, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் 29 ஓட்டங்களால் கொழும்பு கிரிக்கெட் கழகம் வெற்றியீட்டியது. இதில் கொழும்பு கழகத்துக்காக விளையாடிய வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இம்முறை முதல்தர ஒருநாள் தொடரில் வனிந்துவின் முதலாவது போட்டி இதுவாகும்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 176 (42.4) – ஷேரான் பொன்சேகா 39, முதித லக்ஷான் 38, சந்துன் மெண்டிஸ் 3/43

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 147 (37.4) – தவீஷ கஹந்துவாரச்சி 36, இஷித விஜேசுந்தர 25, அகில தனன்ஜய 5/27, சமோத் பட்டகே 2/36

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 29 ஓட்டங்களால் வெற்றி

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 225 (49.3) – சுமிந்த லக்ஷான் 43, திசர பெரேரா 30, மிஹிரங்க சில்வா 3/30, ரவிந்து செம்புகுட்டிகே 2/32

காலி கிரிக்கெட் கழகம் – 132 (36.2) – ரவிந்து செம்புகுட்டிகே 43, சதுர லக்ஷான் 29, சுமிந்த லக்ஷான் 5/29, ரத்னராஜ் தேனுரதன் 2/18

முடிவு – இராணுவ விளையாட்டுக் கழகம் 93 ஓட்டங்களால் வெற்றி

களுத்துறை நகர கழகம் எதிர் NCC கழகம்

களுத்துறை நகர கழகம் – 178/9 (50) – விஷார பெர்னாண்டோ 52, தரிந்து சிறிவர்தன 51, சஹன் ஆரச்சிகே 3/31, அசேல் சிகேரா 2/24

NCC கழகம் – 118 (30.5) – நிபுன் ரன்சிக 27, அசேல் சிகேரா 23, இஷங்க சிறிவர்தன 6/19, கனிஷ்க மதுவந்த 2/39

முடிவு – களுத்துறை நகர கழகம் 60 ஓட்டங்களால் வெற்றி

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 270/7 (50) – சஹன் கோசல 132*, மாலிங்க மலிகஸ்பே 51, தனுஷ்க சந்தருவன் 2/25, டில்ஷான் முனவீர 2/33

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 272/5 (48) – திமுத் சந்தருவன் 88*, உமேஷ் லக்ஷான் 78*, சச்சித்ர சேனாநாயக்க 2/38, லஹிரு ஜயகொடி 2/30

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி

BRC கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

BRC கழகம் – 139 (27.4) – லஹிரு சமரகோன் 37, திலகரட்ன சம்பத் 31, கயான் சிறிசோம 5/59, மொவின் சுபசிங்க 3/34

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 141/6 (41.3) – சஹில் டயஸ் 64*, ஆதித்ய சிறிவர்தன 35, துவிந்து திலகரட்ன 3/22, கெவின் கொத்திகொட 2/20

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 244/9 (50) – லசித் அபேரட்ன 61, சமிந்து விஜேசிங்க 60, கௌரவ் ஜாதர் 3/34, புலின தரங்க 2/50

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 215 (48) – ரவீன் யசஸ் 67, புலின தரங்க 40, வனிந்து ஹஸரங்க 3/34, மாலிந்த புஷ்பகுமார 3/34

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 29 ஓட்டங்களால் வெற்றி

Ace Capital கழகம் எதிர் செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம்

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 194 (45.4) – லொஹான் டி சொய்ஸா 48*, சச்சித ஜயதிலக 44, நிம்சர அத்தரகல்ல 4/65, சானக தேவிந்த 3/38

Ace Capital கழகம் – 195/3 (22.3) – தனுக தாபரே 80, லசித் க்ரூஸ்புள்ளே 44, சரித் ராஜபக்ஷ 2/36, தரிந்து ரத்நாயக 1/87

முடிவு – Ace Capital கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி

SSC கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

SSC கழகம் – 229 (49.3) – நிபுன் தனன்ஜய 53, கவிந்து நதீஷான் 46, மாதவ வர்ணபுர 4/39, யாஷ்பால் சிங் 3/34

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 194/9 (47) – யாஷ்பால் சிங்; 67, அஷான் பெர்னாண்டோ 49, லக்ஷித மானசிங்க 3/28, நிபுன் தனன்ஜய 2/9

முடிவு – SSC கழகம் 25 ஓட்டங்களால் வெற்றி

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 221/7 (50) – மொஹமட் சமாஸ் 58*, தினுக டில்ஷான் 45, சாருக ஜயதிலக 3/30, நதீர பாலசூரிய 2/21

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 119 (33.3) – கிடான்ஷ் கேரா 37, சரித் சுதாரக 20, சானுக டில்ஷான் 5/20, இம்தியாஸ் சல்ஸா 2/8

முடிவு – முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 102 ஓட்டங்களால் வெற்றி

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 204 (48.5) – சாலிந்து பத்திரன 51, ரஷ்மிக மதுஷங்க 44, நிமேஷ் விமுக்தி 4/32, பவன் சந்தேஷ் 3/32

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 208/5 (29.3) – லக்ஷான் ரொட்றிகோ 83, நிமேஷ் விமுக்தி 74, அயேஷ் ஹர்ஷன 4/44

முடிவு – பாணந்துறை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<