சிங்கர் நிறுவனம் 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – III பாடசாலைகளுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (8) நிறைவுக்கு வந்த போட்டியொன்றில், ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரி அணி மடவளை மதீனா கல்லூரி அணியினரை 6 விக்கெட்டுகளால் தோற்கடித்திருக்கின்றது.
நேற்று (7) அவிசாவளையில் ஆரம்பமான இந்தப் போட்டியில் தமது கடைசிப் போட்டியில் ஆனந்த மைத்திரிய கல்லூரியிடம் வெறும் ஒரு ஓட்டத்தினால் தோல்வியினை தழுவியிருந்த மடவளை மதீனா கல்லூரி அணி நல்லதொரு முடிவை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியிருந்தது.
SSC கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த சச்சித்ர சேனநாயக்க
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ராஜசிங்க மத்திய கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மடவளை மதீனா கல்லூரி அணியினருக்கு வழங்கினர்.
இதன்படி போட்டியில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மடவளை மதீனா கல்லூரி அணி எதிர்பார்த்த ஆரம்பத்தை பெற முடியாமல், 37 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 115 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.
மடவளை அணியின் துடுப்பாட்டத்தில் முன்ஷிப் பெளசர் மாத்திரம் 48 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் தர ஏனைய அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் ஏமாற்றம் தந்திருந்தனர்.
இதேநேரம் ராஜசிங்க மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சில் சக்தி உதார 41 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பான பந்துவீச்சினை பதிவு செய்திருந்தார்.
இதன் பின்னர் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ராஜசிங்க மத்திய கல்லூரி அணி, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 201 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
ராஜசிங்க மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக சாமிக்க தனன்ஞய அரைச்சதம் ஒன்றுடன் 58 ஓட்டங்களை பெற, ருக்ஷான் திலுக்ஷவும் 38 ஓட்டங்களுடன் பெறுமதி சேர்த்திருந்தார்.
மடவளை மதீனா கல்லூரி அணியின் பந்துவீச்சில் அஜ்மல் ஜவான் மற்றும் யாசிர் றிபான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
தொடர்ந்து 86 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மடவளை மதீனா கல்லூரி அணி இம்முறை அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 124 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.
மடவளை மதீனா கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக தரீப் ரில்வான் 27 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, ராஜசிங்க மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சில் தனுக்க டில்சான் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
Mohamed Shiraz before leaving for South Africa on maiden National tour
23-year-old fast bowler Mohammed Shiraz spoke to ThePapare.com on being picked to tour South Africa and his expectations.
மடவளை மதீனா கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட இலகுவான 39 ஓட்டங்களை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ராஜசிங்க மத்திய கல்லூரி அணி குறித்த வெற்றி இலக்கை 12.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 40 ஓட்டங்களுடன் அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
மடவளை மதீனா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 115 (37) – முன்ஷிப் பெளசர் 48, சக்தி உதார 41/6, தினுக்க லக்ஷான் 21/1
ராஜசிங்க மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 201 (48.4) – சாமிக்க தனன்ஞய 58, ருக்ஷான் திலுக்ஷ 38, அஜ்மல் ஜவான் 26/4, யாசிர் றிபான் 29/4, சாஹூல் பெளசர் 24/2
மடவளை மதீனா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 124 (48.2) – தரீப் றில்வான் 27, தனுக்க லக்ஷான் 28/5, இசுரு உதேஷ் 32/3
ராஜசிங்க மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 40/4 (12.4) – சாஹூல் பெளசர் 19/2, யாசிர் றிபான் 12/2
முடிவு – ராஜசிங்க மத்திய கல்லூரி 6 விக்கெட்டுக்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க