தம்புள்ள ஓரா அணியுடன் இணையும் முன்னாள் ஆஸி. வேகப்புயல்!

Lanka Premier League 2023

312

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் தம்புள்ள ஓரா அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோன் டைட் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான LPL தொடர் ஜூலை மாதம் 30ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், முதன்முறையாக வீரர்கள் ஏலம் இன்று புதன்கிழமை (14) நடைபெறவுள்ளது.

இரட்டைச் சதத்தோடு ஏறாவூர் அறபா அணிக்காக சகலதுறைகளிலும் பிரகாசித்த சம்ஹான்

இவ்வாறான நிலையில் தம்புள்ள ஓரா அணி தங்களுடைய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ஷோன் டைட்டை நியமித்துள்ளது. ஷோன் டைட் 2005ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக பந்துவீசக்கூடிய சுட்டிக்காட்டத்தக்க பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷோன் டைட், மணிக்கு 155 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் தொடர்ச்சியாக பந்துவீசக்கூடியவராக அவருடைய காலப்பகுதியில் இருந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சர்வதேசத்தில் நடைபெறும் லீக் தொடர்களில் அணிகளின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். அதுமாத்திரமின்றி இவர் பாகிஸ்தான் தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இம்முறை LPL தொடரானது ஜூலை 30ம் திகதி முதல் ஆகஸ்ட் 20ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மற்றும் கண்டி பல்லேகலை மைதானங்களில் நடைபெறவுள்ளன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<