Home Tamil ஒருநாள் சமரிலும் வெற்றியீட்டிய றோயல் கல்லூரி

ஒருநாள் சமரிலும் வெற்றியீட்டிய றோயல் கல்லூரி

83
Royal College vs S .Thomas' College

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸ புனித தோமியர் கல்லூரி அணிகள் இடையில் 46ஆவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் சமரில், கொழும்பு றோயல் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>> லசித் குரூஸ்புள்ளே சதமடிக்க; சகலதுறையிலும் பிரகாசித்த லஹிரு சமரகோன்

இந்த ஆண்டுக்கான 144ஆவது நீலங்கள் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியிலும் வெற்றி பெற்ற றோயல் கல்லூரி அணி ஒருநாள் சமரின் கிண்ணத்தையும் கைப்பற்றிக் கொள்கின்றது.

தோமியர், றோயல் அணிகள் இடையிலான ஒருநாள் பெரும் போட்டி இன்று (24) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தோமியர் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததோடு 48.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

தோமியர் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த சேனாதி புலான்குலாம அரைச்சதம் விளாசி 6 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் றோயல் கல்லூரிக்காக தாஸிஸ் மன்ச்சநாயக்க, சந்தேஷ் ராமநாயக்க மற்றும் புலான் வீரத்துங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 166 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய றோயல் அணி போட்டியின் வெற்றி இலக்கை 37 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களுடன் அடைந்தது.

>> நீலங்களின் சமர் புதிய சம்பியனான கொழும்பு றோயல் கல்லூரி

றோயல் அணியின் துடுப்பாட்டத்தில் ரேஹான் பீரிஸ் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை எடுத்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார். மறுமுனையில் உவிந்து குணசேகரவும் 50 ஓட்டங்களுடன் தனது தரப்பு வெற்றிக்கு பங்களிப்புச் செய்தார்.

தோமியர் அணியின் பந்துவீச்சில் ஆகாஷ் பெர்னாண்டோ மற்றும் அஷேன் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

Result


Royal College
166/3 (37)

S. Thomas’ College
165/10 (48.2)

Batsmen R B 4s 6s SR
Senadhi Bulankulama c Sanvidu Senartharachchi b Sandesh Ramanayaka 66 133 6 0 49.62
Thishen Ehaliyagoda c Ovina Ambanpola b Anush Polonnowita 5 7 1 0 71.43
Dineth Gunawardena run out (Bulan Weerathunga) 9 19 1 0 47.37
Romesh Mendis b Bulan Weerathunga 2 4 0 0 50.00
Mahith Perera c Ramiru Perera b Ranuka Malaviarachchi 28 37 2 0 75.68
Akash Fernando c Nethwin Dharmarathne b Ramiru Perera 12 23 1 0 52.17
Senesh Hettiarachchi c Sanvidu Senartharachchi b Sandesh Ramanayaka 8 12 1 0 66.67
Nathan Caldera c Anush Polonnowita b Bulan Weerathunga 12 26 0 0 46.15
Charuka Peiris c & b Dasis Manchanayake 6 14 0 0 42.86
Kavindu Dais b Dasis Manchanayake 4 8 0 0 50.00
Ashen Perera not out 0 7 0 0 0.00


Extras 13 (b 3 , lb 0 , nb 0, w 10, pen 0)
Total 165/10 (48.2 Overs, RR: 3.41)
Bowling O M R W Econ
Bulan Weerathunga 8 1 24 2 3.00
Anush Polonnowita 10 2 23 1 2.30
Sandesh Ramanayaka 8 0 34 2 4.25
Dasis Manchanayake 9.2 1 25 2 2.72
Ranuka Malaviarachchi 4 0 15 1 3.75
Ramiru Perera 9 0 41 1 4.56


Batsmen R B 4s 6s SR
Ovina Ambanpola run out (Akash Fernando) 6 19 1 0 31.58
Rehan Peris not out 69 107 7 1 64.49
Anush Polonnowita b Akash Fernando 0 1 0 0 0.00
Uvindu Weerasekara c Nathan Caldera b Ashen Perera 50 68 4 2 73.53
Dasis Manchanayake not out 26 28 2 0 92.86


Extras 15 (b 1 , lb 0 , nb 1, w 13, pen 0)
Total 166/3 (37 Overs, RR: 4.49)
Bowling O M R W Econ
Akash Fernando 5 0 27 1 5.40
Ashen Perera 10 0 30 1 3.00
Nathan Caldera 7 1 27 0 3.86
Kavindu Dais 2 0 12 0 6.00
Charuka Peiris 3 0 21 0 7.00
Dineth Gunawardena 9 0 34 0 3.78
Senadhi Bulankulama 1 0 14 0 14.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<