Home Tamil முதல்நாளில் பலம் பெற்றிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

முதல்நாளில் பலம் பெற்றிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

189

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் அசத்தி சிறப்பான நிலையில் காணப்படுகின்றது.

>> Watch – “இங்கிலாந்து அணியை வீழ்த்துவதற்கான சாதகத்தன்மை அதிகம்” – டிக்வெல்ல

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறுகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (14) காலி நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.  

இப்போட்டிக்கான இலங்கை குழாத்தில் இருந்து அணித்தலைவர் திமுத் கருணாரத்ன துரதிஷ்டவசமான விரல் உபாதை ஒன்றின் காரணமாக வெளியேறினார். அதோடு, வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மால், ஒசத பெர்னாந்து ஆகியோர் போதிய உடற்தகுதி இல்லாத காரணத்தினால் இப்போட்டியில் இணைக்கப்படவில்லை. மறுமுனையில், திமுத் இல்லாத இலங்கை அணி இப்போட்டியில் தினேஷ் சந்திமால் மூலம் வழிநடாத்தப்பட்டிருந்தது.

இலங்கை குழாம் – லஹிரு திரிமான்ன, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, அசித்த பெர்னாந்து

இங்கிலாந்து குழாம் – ஷேக் கிராவ்லி, டோம் சிப்லி, ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், டேன் லோரன்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், டோம் பெஸ், ஸ்டுவார்ட் புரோட், மார்க் வூட், ஜேக் லீச்

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களாக லஹிரு திரிமான்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் களம் வந்தனர். 

எனினும், போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே லஹிரு திரிமான்ன வெறும் 4 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலகுவான பிடியெடுப்பு ஒன்றை வழங்கி ஆட்டமிழந்தார். அவரினைத் தொடர்ந்து புதிய வீரராக வந்த குசல் மெண்டிஸ் ஓட்டங்கள் எதனையும் பெறாது நான்காவது முறையாக ஏமாற்றினார். பின்னர், ஏனைய ஆரம்பத் துடுப்பாட்டவீரரான குசல் ஜனித் பெரேராவின் விக்கெட்டும் 20 ஓட்டங்களை பெற்ற நிலையில் பறிபோனது. 

கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்துக்காக மஹேல – சங்காவின் ஒத்துழைப்பு

தொடர்ந்து ஜோடி சேர்ந்த அஞ்செலோ மெதிவ்ஸ், மற்றும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் ஒரு இணைப்பாட்டத்தினை உருவாக்கினர். முதல்நாளின் மதிய போசண இடைவேளையினை அடுத்து சில நிமிடங்கள் வரை தொடர்ந்த இந்த இணைப்பாட்டத்திற்காக 56 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தது. பின்னர், இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டாக அஞ்செலோ மெதிவ்ஸ் 27 ஓட்டங்களுடனும், ஐந்தாம் விக்கெட்டாக தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களுடனும் வெளியேறினர். 

இதனை அடுத்து சரிவினைச் சந்தித்த இலங்கை அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 135 ஓட்டங்களை மாத்திரம் தமது முதல் இன்னிங்ஸில் எடுத்தது. இது காலி சர்வதேச மைதானத்தில் அணியொன்று முதல் இன்னிங்ஸிற்காகப் பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகவும் பதிவானது. 

இலங்கை அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்டத்தில் தசுன் ஷானக்க 23 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்திருந்தார். 

மறுமுனையில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல்பந்துவீச்சாளரான டொம் பெஸ் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து டெஸ்ட் போட்டிகளில் தான் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற சிறந்த பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்தார். அதேவேளை, ஸ்டுவார்ட் ப்ரோட் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து – இலங்கை டெஸ்ட்: தொலைக்காட்சி வர்ணனையாளர்கள், போட்டி அதிகாரிகள் விபரம்

இலங்கை அணியின் மோசமான முதல் இன்னிங்ஸை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை போட்டியின் தேநீர் இடைவேளையை அடுத்து ஆரம்பித்த இங்கிலாந்து அணி லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சுக்கு தடுமாற்றம் ஒன்றினைக் காட்டியது. இந்நிலையில், ஜொன்னி பெயர்ஸ்டோ அணித்தலைவர் ஜோ ரூட் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தோடு தமது தரப்பினை கட்டியெழுப்பினர். 

இதனால்,  போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது இங்கிலாந்து கிரிக்கெட் அணி 40.5 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. 

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 50ஆவது அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்த ஜோ ரூட் 66 ஓட்டங்களுடனும், ஜொன்னி பெயர்ஸ்டோ 47 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Result


Sri Lanka
135/10 (46.1) & 359/10 (136.5)

England
421/10 (117.1) & 76/3 (24.2)

Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne c Jonathan Bairstow b Stuart Broad 4 22 0 0 18.18
Kusal Perera c Joe Root b Dominic Bess 20 28 2 0 71.43
Kusal Mendis c Jos Buttler b Stuart Broad 0 2 0 0 0.00
Angelo Mathews c Joe Root b Stuart Broad 27 54 1 1 50.00
Dinesh Chandimal c Sam Curran b Jack Leach 28 71 1 0 39.44
Niroshan Dickwella c Dominic Sibley b Dominic Bess 12 21 1 0 57.14
Dasun Shanaka c Jos Buttler b Dominic Bess 23 48 3 0 47.92
Wanindu Hasaranga b Dominic Bess 19 22 2 0 86.36
Dilruwan Perera b Dominic Bess 0 2 0 0 0.00
Lasith Embuldeniya run out (Jack Leach) 0 1 0 0 0.00
Asitha Fernando not out 0 7 0 0 0.00


Extras 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0)
Total 135/10 (46.1 Overs, RR: 2.92)
Fall of Wickets 1-16 (6.3) Lahiru Thirimanne, 2-16 (6.5) Kusal Mendis, 3-25 (10.2) Kusal Perera, 4-81 (28.6) Angelo Mathews, 5-81 (29.2) Dinesh Chandimal, 6-105 (38.1) Niroshan Dickwella, 7-126 (42.5) Dasun Shanaka, 8-126 (42.5) Dilruwan Perera, 9-130 (43.5) Lasith Embuldeniya, 10-135 (46.1) Wanindu Hasaranga,

Bowling O M R W Econ
Stuart Broad 9 3 20 3 2.22
Sam Curran 4 2 8 0 2.00
Mark Wood 6 1 21 0 3.50
Dominic Bess 10.1 3 30 5 2.97
Jack Leach 17 2 55 1 3.24
Batsmen R B 4s 6s SR
Zak Crawley c Wanindu Hasaranga b Lasith Embuldeniya 9 26 1 0 34.62
Dominic Sibley c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 4 15 0 0 26.67
Jonathan Bairstow c Kusal Mendis b Lasith Embuldeniya 47 93 2 0 50.54
Joe Root c Lasith Embuldeniya b Dilruwan Perera 228 321 18 1 71.03
Dan Lawrence c Kusal Mendis b Dilruwan Perera 73 150 6 1 48.67
Jos Buttler c Niroshan Dickwella b Asitha Fernando 30 57 3 0 52.63
Sam Curran b Asitha Fernando 0 1 0 0 0.00
Dominic Bess run out (Minod Bhanuka) 0 4 0 0 0.00
Jack Leach lbw b Dilruwan Perera 4 20 1 0 20.00
Mark Wood c Niroshan Dickwella b Dilruwan Perera 2 9 0 0 22.22
Stuart Broad not out 11 13 2 0 84.62


Extras 13 (b 7 , lb 0 , nb 6, w 0, pen 0)
Total 421/10 (117.1 Overs, RR: 3.59)
Fall of Wickets 1-10 (4.2) Dominic Sibley, 2-17 (8.4) Zak Crawley, 3-131 (42.2) Jonathan Bairstow,

Bowling O M R W Econ
Lasith Embuldeniya 45 4 176 3 3.91
Asitha Fernando 14 1 44 2 3.14
Wanindu Hasaranga 15 1 63 0 4.20
Dilruwan Perera 36.1 2 109 4 3.02
Dasun Shanaka 7 1 22 0 3.14
Batsmen R B 4s 6s SR
Kusal Perera c Jack Leach b Sam Curran 62 109 5 1 56.88
Lahiru Thirimanne c Jos Buttler b Sam Curran 111 251 12 0 44.22
Kusal Mendis c Jos Buttler b Jack Leach 15 65 1 0 23.08
Lasith Embuldeniya c Dominic Sibley b Dominic Bess 0 11 0 0 0.00
Angelo Mathews c & b Jack Leach 71 219 4 0 32.42
Dinesh Chandimal c Joe Root b Dominic Bess 20 28 3 0 71.43
Niroshan Dickwella c Jos Buttler b Dominic Bess 29 74 1 0 39.19
Dasun Shanaka b Jack Leach 4 5 0 0 80.00
Wanindu Hasaranga c Joe Root b Jack Leach 12 18 2 0 66.67
Dilruwan Perera st Jos Buttler b Jack Leach 24 38 5 0 63.16
Asitha Fernando not out 0 6 0 0 0.00


Extras 11 (b 7 , lb 1 , nb 3, w 0, pen 0)
Total 359/10 (136.5 Overs, RR: 2.62)
Bowling O M R W Econ
Stuart Broad 17 11 14 0 0.82
Sam Curran 11 1 37 2 3.36
Dominic Bess 33 4 100 3 3.03
Mark Wood 21 5 49 0 2.33
Jack Leach 41.5 6 122 5 2.94
Joe Root 11 1 19 0 1.73
Dan Lawrence 2 0 10 0 5.00


Batsmen R B 4s 6s SR
Zak Crawley c Kusal Mendis b Lasith Embuldeniya 8 21 1 0 38.10
Dominic Sibley b Lasith Embuldeniya 2 5 0 0 40.00
Jonathan Bairstow not out 35 62 2 0 56.45
Joe Root run out (Niroshan Dickwella) 1 3 0 0 33.33
Dan Lawrence not out 21 52 0 0 40.38


Extras 9 (b 0 , lb 9 , nb 0, w 0, pen 0)
Total 76/3 (24.2 Overs, RR: 3.12)
Bowling O M R W Econ
Lasith Embuldeniya 12 3 29 2 2.42
Dilruwan Perera 11.2 2 34 0 3.04
Wanindu Hasaranga 1 0 4 0 4.00



போட்டியின் சுருக்கம் 

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் கிரிக்கெட்ச செய்திகளைப் படிக்க <<