CR&FC மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு கால்பந்து லிக்கினால் ஏற்பாடு செய்யப்படும் 2016ஆம் ஆண்டுக்கான வெள்ளி கிண்ண சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஹேனமுல்ல யுனைடட் அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்து கிருலப்பனை யுனைடட் அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. 

போட்டி ஆரம்பித்தவுடன், மின்னல் வேகத்துடன் விளையாடிய ஹேனமுல்ல யுனைடட் அணி எதிரணியின் கோலை நோக்கி பலமுறை பந்தை தாக்ககிருலப்பனை யுனைடட் அணியின் பின்கள வீரர்கள் பந்து தடுப்பை மேற்கொண்டனர்.

 எனினும்கிருலப்பனை யுனைடட் அணியினர் ஆரம்பத்தில் ஹேனமுல்ல யுனைடட் அணியின் மின்னல் வேக தாக்குதலை கட்டுப்படுத்துவதற்துக்கு கடினமாக போராடினர்.

போட்டியின் ஆரம்பத்தில், நீண்ட நேரத்துக்கு கிருலப்பனை யுனைடட் அணியால் நிலைத்து நிற்க முடியவில்லைபத்தாவது நிமிடத்தில், கிருலப்பனை அணியின் பின்கள வீரர்களைத் தாண்டி லாவகமாக பந்தை கொண்டு சென்ற நீல் க்ரிடோப்பால், CR&FC அரங்கு பக்கமாக இருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஹேனமுல்ல யுனைடட் அணிக்கான முதல் கோலை அடித்தார்.

அதனைத் தொடர்ந்து, கிருலப்பனை யுனைடட் அணி தடுப்பு அணுகு முறையை மாற்றி கோல் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. அதன் பயனாக, அவ்வணியின் ரவின் மதுஷன்க போட்டியின் 18ஆவது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார். திடீரென்று போட்டியில் ஏற்பட்ட மாற்றத்தினால் ஹேனமுல்ல யுனைடட் அணி பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

இந்நிலையில் தொடர்ந்து சிறந்த முறையில் செயற்பட்டுக்கொண்டிருந்த கிருலப்பனை யுனைடட் அணியினருக்கு முன்னிலை பெறுவதற்கான கோல், போட்டியின் 30ஆவது நிமிடத்தில் பெறப்பட்டது. அவ்வணியின் ஆதில் ரூமி எதிரணியின் கோல் காப்பாளரை தாண்டிச் சென்று சிறந்த முறையில் தனது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

அதன் பின்னர் இரு அணியினராலும் முதல் பாதியில் மேலதிகமாக எந்தவித கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

 முதல் பாதி:  கிருலப்பனை யுனைடட் 02 – 01 ஹேனமுல்ல யுனைடட்

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் வெற்றியின் அவசியத்தை உணர்ந்து நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தின. குறிப்பாக கிருலப்பனை யுனைடட் அணி வீரர்கள் இரண்டாவது பாதியை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நோக்கில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அதே சமயத்தில் ரவின் மதுஷங்க மற்றும் சாரிக் அஹமத் ஆகியோர் கோல் பெறுவதற்காக கிடைக்கப் பெற்ற வாய்ப்புகளை விணாடித்தனர். அதனால் கோல் எண்ணிக்கையில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை.

போட்டி முடிவுறும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், ஹேனமுல்ல அணி வீரர் முஹம்மத் சப்ரான் கோல் பெறுவதற்காக கிடைக்கப்பெற்ற அருமையான ஒரு வாய்ப்பை தவறவிட்டார். எனவே, அவ்வணிக்கு போட்டியை சமப்படுத்த இருந்த இறுதி வாய்ப்பு வீணாகியது.

எனினும் போட்டியின் இறுதி நிமிடத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட கிருலப்பனை யுனைடட் அணி வீரர் கவிந்து விக்ரமாரச்சி, கோலுக்கு 20 மீட்டர் தூரத்தில் இருந்து தனது அணிக்கான முன்றாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த கோலின் மூலம் கிருலப்பனை யுனைடட் அணியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டி நிறைவடைவதற்கான விசில் ஊதப்பட்டது.  

 முழு நேரம்:  கிருலப்பனை யுனைடட் 03 – 01 ஹேனமுல்ல யுனைடட்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – ரவின் மதுஷங்க (கிருலப்பனை யுனைடட் அணி)

கோல் பெற்றவர்கள்

ஹேனமுல்ல யுனைடட் அணி – நீல் க்ரிடோப்பால் (10’)

கிருலப்பனை யுனைடட் அணி – ரவின் மதுஷங்க (18’), ஆதில் ரூமி (30’), கவிந்து விக்ரமாரச்சி (94’)

மஞ்சள் அட்டை வழங்கப்பட்டவர்கள்

திமிர சில்வா (கிருலப்பனை யுனைடட் அணி)

மொஹொமட் சப்ரான் (ஹேனமுல்ல யுனைடட் அணி)