தடங்கல்களை தாண்டி வந்த ஒரு கால்பந்து வீரரின் கதை

260

லிபஸ் செச்சோவாவுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவர் பீட்டர் செச். 1982 மே மாதம் 20ஆம் திகதி செக் குடியரசின் ப்ளேஸ் நகரில் பிறந்த பீட்டர் செச் முதிச்சி அடையாத மண்டை ஓடு ஒன்றுடன் பிறந்தவர்.  

மத்தியஸ்தரை அவமதித்த நெய்மாருக்கு 3 ஐரோப்பிய போட்டிகளில் தடை

சம்பியன்ஸ் லீக் தொடரில் மென்செஸ்டர் யுனைடெட்….

11 ஆண்டுகள் செல்சி அணியின் வெற்றியின் பின்னணியில் பெரும்புள்ளியாக இருந்தவரும் தற்போது ஆர்சனல் அணியின் கோல் காப்பாளருமான பீட்டர் செச் கடும் உபாதையில் இருந்து சுகம் பெற்று கால்பந்து அரங்கில் திறமையை வெளிப்படுத்த முடியுமான ஒரே வீரராக ஆடையாளம் காணப்படுபவார்.  

சிறு வயது

சிறு வயது தொடக்கம் ஐஸ் ஹொக்கி விளையாட்டுக்கு அதிகம் ஆர்வம் காட்டிய செச் பாடசாலை காலத்தில் ஐஸ் ஹொக்கி விளையாட்டில் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். எனினும், விளையாட்டு உபகரணங்களுக்கு அதிகம் செலவிடுவதற்கு தமது பெற்றோருக்கு முடியாது என்பதால் அதில் இருந்து விலகி கால்பந்து விளையாட்டை தேர்வு செய்வதற்கு அவர் தீர்மானித்தார்.

முன்கள வீரராக பாடசலை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி இருக்கும் பீட்டர் செச் 10 வயதாகும்போது போட்டி ஒன்றுக்கு இடையில் ஏற்பட்ட உபாதை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால் ஓர் ஆண்டு காலம் வரை தமது சக வீரர்கள் விளையாடுவதை பார்த்திருக்க வேண்டிய ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டது. காயம் சுகமடைந்த பின்னர் பெற்றோர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் மீண்டும் கால்பந்து ஆடுவதற்கு அவர் தீர்மானித்ததோடு முதிர்ச்சி அடையாக மண்டையோடு மற்றும் காலில் காயம் தொடர்பில் எப்போதும் அவதானமாக இருந்த அவரது பெற்றோரிடம் கோல்காப்பாளராக மீண்டும் ஆடுவதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்.  

புரிந்துகொள்ளப்படாத ‘ஓப்-சைட்’ குறித்து அறிவோம்

அண்மையில் நிறைவுற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து…..

‘அது மிகவும் துரதிஷ்டமான நிகழ்வு. அதிக சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு வேண்டி இருந்தது. பெற்றோர்கள் கூட நிர்க்கதியானர். இந்த உபாதை காரணமாக எனது தாய் வேலையில் இருந்து கூட விலகி எனக்கு பனிவிடை செய்வதற்கு தீர்மானித்தார். காயம் ஏற்படும் ஆபத்துக் குறைவாக இருப்பது பற்றி சுட்டிக்காட்டி கோல்காப்பாளராக விளையாடுவதற்கு அனுமதி தரும்படி எனது பெற்றோர்கள் முன் கேட்டுக்கொண்டேன்.

எவ்வாறாயினும் அதன்மூலம் எனக்கு அதிர்ஷ்டம் கிட்டியது என்று நான் நம்புகிறேன். அவ்வாறான நிகழ்வொன்று இடம்பெறாமல் இருந்திருந்தால் எனது தலையெழுத்து பெரும்பாலும் மாறியிருக்கக் கூடும்’ என்று பீட்டர் செச் குறிப்பிடுகிறார்.

கோல்காப்பாளராக நிலையான இடம் ஒன்றை பிடித்ததை அடுத்து செச்சுக்கு 1999 ஆம் ஆண்டில் முதல்தர போட்டிகளுக்காக FK Chmel Blšany அணியை பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்புக் கிடைத்தது. 1999 ஒக்டோபர் மாதம் முதல் போட்டியில் விளையாடிய செச் அந்தப் போட்டியில் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தபோதும், ஒரு முதிர்ச்சி அடைந்த கோல்காப்பாளரின் அடையாளங்கள் அவரிடம் இருந்து வெளிப்பட்டது. அதன் பிரதிபலனாக 2001 ஆம் ஆண்டு Sparta Prague FC அணியுடன் ஒப்பந்தம் ஒன்றுக்கு வருவதற்கு அவரால் முடிந்தது.           

திரும்புமுனையின் ஆரம்பம்

2000/01 பருவத்தின் நவம்பர் மாதம் செச்சின் திருப்பத்திற்கான அடையாளங்களை காணலாம். கோல்காப்பாளராக எதிரணியினருக்கு அதிக காலம் கோல் பெற விடாத சாதனையை தம் வசமாக்குவாற்கு அவரால் முடியுமானது.

அதுவரை இந்த சானையை வைத்திருந்த அந்நாட்டின் தேசிய அணிக்காக ஆடி இருந்த வீரரான தியோடர் ரெய்மான் அவார். 1950 ஆம் ஆண்டு முதல்தர கால்பந்து விளையாட்டு வரலாற்றில் எதிரணியினருக்கு கோல் ஒன்றை பெற எடுத்துக் கொண்ட அதிக காலமான 855 நிமிடம் என்ற காலத்தை, 903 நிமிடங்கள் என அதிகரிப்பதற்கு செச்சினால் முடிந்தது. அதனை போட்டியாக எடுத்துக் கொண்டால் 10 போட்டிகளாகும். தொடர்ச்சியாக 10 போட்டிகளில் கோல் அரணாக இருந்தது பற்றி வெளிநாட்டு கழகங்கள் கூட அதிக அவதானம் செலுத்தின.      

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பக்கீர் அலி பதில்

பஹ்ரெய்னில் அண்மையில் நிறைவுக்கு வந்த 23 வயதுக்குட்பட்ட……

‘சாதனை ஒன்று பற்றி எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஒரே இலக்காக இருந்தது விளையாடுகின்ற எல்லா போட்டிகளிலும் உச்ச திறமையை வெளிப்படுத்துவதாகும். சாதனை ஒன்றை முறிப்பதற்கு முடியுமானது பற்றி மகிழ்ச்சி. அதேபோன்று அணியின் அனைவருக்கும் அவர்களின் அனைத்து அர்ப்பணிப்புகளுக்காக நன்றி கூறிக்கொள்கிறேன்’ என்று சாதனை படைத்த போட்டி முடிவில் செச் குறிப்பிட்டிருந்தார்.     

தேசிய அளவில் சர்வதேச திறமையை வெளிப்படுத்துவதற்கு முடிந்த நிலையில், அப்போது 19 வயதாக இருந்த பீட்டர் செச் 2002 ஆம் ஆண்டில் ஆர்சனல் கழகத்துடன் இணைவதற்கு தமது விருப்பத்தை வெளியிட்டபோதும் அதற்காக விசா வழங்குவது நிராகரிக்கப்பட்டது.

‘நான் ஆர்சனல் அதிகாரிகளுக்கு செய்த கோரிக்கையை அவர்கள் நிராகரித்தார்கள். எவ்வாறாயினும் விசா பெற்று இங்கிலாந்து வந்தால் சந்தர்ப்பம் தர முடியும் என அவர்கள் கூறினார்கள். ஆனால் வேலை அனுமதிக்காக விசா அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு என்னால் முடியாமல்போனதால் எதிர்பார்ப்புகள் சிதைத்தன’ என்கிறார் செச்.   

எவ்வாறாயினும் அதன் உச்ச பயனை பெற பிரான்சின் ஸ்டேட் ரெனயிஸ் கால்பந்து அணியால் முடிந்தது. 2002/03 பருவகாலத்தில் உச்ச திறமையை வெளிப்படுத்த செச்சினால் பல தடவைகளும் போட்டியின் நாயகனாகி விருதுகளை வெள்ள முடிந்தது.

இதற்கிடையே செக் குடியரசு தேசிய அணியில் இருந்து அழைப்பு ஒன்று கிடைத்து. செச் தனது முதல் போட்டியில் ஹங்கேரி அணிக்கு எதிராக ஆடினார். அந்தப் போட்டியில் அவரின் அணி வெற்றி பெற்றது. எவ்வாறாயினும் அவர் 124 போட்டிகளில் தனது தாய் நாட்டுக்காக விளையாடி இருக்கிறார்.   

2006 ஆம் ஆண்டு முடிவு வரை ஸ்டேட் ரெனயிஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த பிட்டர் செச்சுக்கு இங்கிலாந்தின் செல்சி அணியில் இருந்து 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அழைப்பு வந்தபோது அதனை அவர் கூட எதிர்பார்க்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எதிர்பார்ப்பு நிறைவேறுவது நெருங்கியிருந்தபோதும், எதிர்பாராத விதமாக ரெனயிஸ் விளையாட்டுக் கழகம் அவரை விடுவிக்க விரும்பவில்லை. 2004/05 போட்டிகளுக்கு அவர் தமது அணிக்கு தேவையாக இருப்பதாக இதற்கு காரணமாக கூறப்பட்டது.      

Match Replay – Colombo FC v Chennaiyin FC | 1st Leg | Playoff Stage | AFC Cup 2019

Colombo FC (Sri Lanka) takes on Chennaiyin FC (India) in the 1st Leg…….

‘நாம் கோரிக்கையை நிராகரித்தோம். அது பற்றி நாம் அவர்களை அறிவுறுத்தினோம். இந்தப் போட்டித் தொடர் முடிவுறும் வரை செச் இங்கு இருப்பார்’ என்று அணியின் பேச்சாளர் ஒருவர் பிரான்ஸ் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக செக் குடியரசு ஊடகங்கள் கூட இது பற்றி பரபரப்புடன் செய்திகளை வெளியிட்டதோடு அனைத்து அச்சு ஊடகங்களும், செச் ப்ரீமியர் லீக்கிற்கு செல்ல ஆர்வமாக உள்ளார் என்றே செய்தி வெளியிட்டிருந்தன.  

இந்தக் காலத்தில் 22 வயதாக இருந்த இந்த நட்சத்திர கோல்காப்பாளர் தொடர்பில் கால்பந்து உலகில் புகழ்பெற்றிருந்த பல கழகங்களும் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தன. எனினும், வெளிநாட்டு வீரர் ஒருவருக்காக வைக்கப்படும் அதிக விலையுடன் இங்கிலாந்தின் செல்சி அதிகாரிகள் மூலம் மீண்டும் ஒருமுறை ரெனயிஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தபோது பீட்டர் செச்சை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.

‘இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றி சோர்வுக்கு உள்ளானேன். 2004/05 இங்கிலாந்து பருவகாலம் எனக்குக் கிடைக்காமல் போனால் மேலும பல ஆண்டுகள், இல்லையென்றால் எதிர்பார்ப்பை முழுமையாக கைவிட வேண்டி இருக்கும். ஏனென்றால், எல்லா அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்வது குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு என்பதாலாகும். அதனால் அதிகம் கவலை அடைந்தேன்.

ஒருநாள் லண்டனில் இருந்து எனது முகாமையாளர் பவெல் சிகா என்னை தொலைபேசியில் அழைத்து சந்தர்ப்பம் கிடைத்தல் செல்சி அணியுடன் இணையும் விருப்பத்தை கேட்டார். எனினும் தீர்க்கமான காரணி ரெனயிஸ் அணியின் அதிகாரிகள் என்று அவருக்கு ஞாபகப்படுத்தினேன். அந்த தொலைபேசி உரையாடல் முடிவில் என்னை விடுவிப்பதற்கு விருப்பம் வெளியிட்டது பற்றி பவெல் எனக்குக் கூறினார்’ என்று அப்போது செச் பிரான்ஸில் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.    

2004 ஆம் ஆண்டில் செல்சி அணியுடன் இணைந்த பீட்டர் செச், அந்நாட்டு ஊடகங்களினால் கோல்காப்பாளர் ஒருவருக்காக விளையாட்டுக் கழகம் ஒன்று ப்ரீமியர் லீக் வரலாற்றில் வழங்கிய அதிக தொகை என்று செய்தி வெளியிட்டது மற்றும் மேலும் பல காரணிகளை கருத்தில் கொண்டு அந்நாட்டு கால்பந்து ஊழல் விசாரணைப் பிரிவு மூலம் அவர் தொடர்பில் விசாரணை ஒன்று கூட நடத்தப்பட்டது. எனினும் இறுதியில் விசாரணை அறிக்கையை வெளியிட்டு, சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆதராங்கள் இல்லை என்பதால் விசாரணைகளை முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.    

Photos: Colombo FC v Chennaiyin FC | 1st Leg | Playoff Stage | AFC Cup 2019

ThePapare.com | Dinushki Ranasinghe | 06/03/2019 Editing and….

மன்செஸ்டர் யுனைடெட் அணியுடன் தனது முதல் போட்டியில் பங்கேற்ற செச் தனது பொறுப்பை சிறப்பாக செய்தார். அதில் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்து வெற்றிகரமாக ஆரம்பத்தை பெற்ற செச் அதன் பின் அணியில் நிரந்தர கோல்காப்பாளராக மாறினார். தமது உச்ச திறமைக்கு இடையில் செச் அதுவரை ப்ரீமியர் லீக் வரலாற்றில் கோல்காப்பாளர் ஒருவர் மூலம் வைக்கப்பட்ட சாதனையை முறியடித்து 1025 நிமிடங்கள் தமது கோல் எல்லையை பாதுகாத்த சாதனையும் நிலைநாட்டினார். 2004/05 பருவம் முடிவில் அவர் வெளிக்காட்டிய அபார திறமைக்காக அவர் உலகின் மிகச் சிறந்த கோல்காப்பாளராக முடிசூடப்பட்டார்.

காயங்களுடனான போராட்டம்

2006 ஆம் ஆண்டு தோள்பட்டையில் காயம் காரணமாக சத்திரசிகிச்சைக்கு முகம்கொடுத்த செச் இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் செல்சி குழாத்துடன் இணைந்தார். 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பீட்டர் செச் என்ற இந்த தனித்துவமான வீரர், தனது விளையாட்டு வாழ்வில் துரதிஷ்டமான இரண்டு உபாதைகளுக்கு முகம்கொடுத்தது அதன் பின்னராகும்.

இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்து ப்ரீமீயர் லீக் அனுபவத்தை மாத்திரம் பெற்ற 24 வயதான செச், 2006 ஒக்டோபர் 14 ஆம் திகதி ரீடிங் அணியுடன் இடம்பெற்ற போட்டியின்போது உதை ஒன்று தலையில் பட்டதன் காரணமாக உயிராபத்துக் கொண்ட காயத்திற்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்பட்டது.   

‘அந்த நிகழ்வு பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. பிறப்பிலேயே எனது மண்டையோடு அதிக பலமானது அல்ல. அதன் காரணமாக அந்த நிகழ்வு எனக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. மண்டையோடு உடைந்திருந்தது. சிறு அளவான பகுதி மூளையில் உந்துதலை ஏற்படுத்தியதால் மூளையில் மிகவும் ஆபத்தான சத்திரசிகிச்சை ஒன்று கூட மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமான சத்திரசிகிச்சைக்குப் பின் இரும்பு தட்டு ஒன்று பொருத்தப்பட்டு மீண்டும் வழக்கமான நிலைக்குக் கொண்டுவரப்பட்டது’ என்று செச் குறிப்பிட்டிருந்தார்.   

இரண்டு வாரங்களின் பின் வீட்டுக்குத் திரும்பிய பீட்டர் செச்சுக்காக 3 மாதங்களுக்கு நெருக்கமான காலம் விளையாடுவதில் இருந்து விலகி இருப்பதற்கு ஏற்பட்டது. 2007 ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் செல்சி அணியுடன் இணைந்த பீட்டர் செச்சுக்காக நியூசிலாந்தின் ரக்பி வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட அடிடாஸ் இலட்சணையுடனான சிறப்பு தலைக்கவசம் ஒன்று செல்சி அதிகாரிகளால் கொண்டுவரப்பட்டது.

உலகக் கிண்ண தகுதிகாண் முதல் சுற்றில் மகாவு – இலங்கை மோதல்

கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணப் போட்டி…..

செக் குடியரசு தேசிய அணிக்காக அனுசரணை வழங்குகின்ற PUMA நிறுவனம் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டதோடு பின்னர் அவர்கள் மூலம் செச்சிற்காக சிறப்பு தலைக்கவசம் ஒன்று பெற்றுக்கொடுத்தபின் இந்த பிரச்சினை தீர்ந்தது.

2008 ஆம் ஆண்டு இரண்டாவது பயங்கர காயத்திற்கு அவர் முகம்கொடுத்ததோடு தமது சக வீரர் ஒருவருடன் மோதி அந்த காயம் ஏற்பட்டது. அவரது முகவாய் கட்டை பகுதியில் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு முகம்கொடுத்து 50 தையல்கள் போடப்பட்டது. அதன் பின் செச் செல்சி அணிக்காக முகவாய்க் கட்டை மறைக்கப்படும் வகையில் சிறப்பு கவசம் ஒன்று வரவழைக்கப்பட்டது.

வெற்றிகளின் முன்னோடி

பீட்டர் செச் மூலம் 11 ஆண்டு காலத்திற்குள் செல்சி பல சம்பியன் பட்டங்களை வென்றது. 04 பி்ரீமியர் லீக் பட்டங்கள், ஒரு UEFA ஐரோப்பிய லீக், 05 எப்.ஏ. கிண்ணங்கள், ஒரு UEFA சம்பியன்ஸ் லீக் கிண்ணம், 03 லீக் சம்பியன் மற்றும் 03 Shield FA Community பட்டம் ஆகியன இந்த வரிசையில் அடங்கும்.

Insert Image – 6

2015 ஆம் ஆண்டில் ஆர்சனல் அணியுடன் இணைந்த பீட்டர் செச் தற்போது தனது ஓய்வை அறிவித்திருப்பதோடு இந்த பருவகாலத்தில் அவருக்கு இன்னும் ஒருசில போட்டிகள் தான் எஞ்சியிருக்கின்றன.   

2003 ஆம் ஆண்டு திருமணம் முடித்த செச் இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார். அன்று தொடக்கம் இன்று வரை இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரில் பல சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் அற்புதமான கதாபாத்திரமாக அவர் உள்ளார்.

தனது கால்பந்து வாழ்வில் கோல்காப்பாளராக 1128 போட்டிகளில் விளையாடியிருக்கும் பீட்டர் செச்சின் எதிர்காலத்திற்கு இலங்கை கால்பந்து ரசிகர்கள் சார்பில் ThePapare.com இன் வாழ்த்துகள்.

பீட்டர் செச் வென்ற விருதுகள்

  • 2004 – Best Goalkeeper of French League
  • 2005 – IFFHS World’s Best Goalkeeper
  • 2005, 2010, 2014, 2016 – Premier League Golden Glove
  • 2007 – Premier League Player of the Month
  • 2005, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2015, 2016 – Czech Footballer of the Year
  • 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2016, 2017 – Czech Golden Ball
  • 2005, 2007 – UEFA Club Football Awards Best Goalkeeper
  • 2005, 2007, 2008 – UEFA Club Football Awards

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<