புரிந்துகொள்ளப்படாத ‘ஓப்-சைட்’ குறித்து அறிவோம்

1636

அண்மையில் நிறைவுற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் மற்றும் ரிளெனன் விளையாட்டுக் கழகத்திற்கு இடையில் நடைபெற்ற 13 ஆவது வாரத்திற்கான மோதலில் கோல் விட்டுக்கொடுத்த சுப்பர் சன் அணி அந்த கோல் ஓப்-சைட் (Off-Side) எனக் கூறி மைதானத்தை விட்டு வெளியேறியதால் அந்த ஆட்டம் கைவிடப்பட்டது.  

இந்த நிகழ்வு போட்டியின் 69ஆவது நிமிடத்தில் இடம்பெற்றது. சுப்பர் சன் கோல் கம்பத்தை நோக்கி நீண்ட தூரத்தில் இருந்து ரினௌன் வீரர் திமுது பிரியதர்ஷன பந்தை செலுத்தியபோது திலிப் பீரிஸ் ஓப்சைட் நிலையில் பதுங்கி இருந்தார். தற்காப்பு எல்லைக்கு பின்னால், டிலான் மதுஷங்க பந்து செல்லும் பாதையை நோக்கி ஓடிவந்து, ஓப்சைட் பொறியை முறியடித்தார்.

சுப்பர் சன் அணி தகுதி இழக்கப்பட்டு, தரமிறக்கப்பட்டது

ரினௌன் விளையாட்டு கழகத்திற்கு எதிரான போட்டியில் ஆட்டம் முடிவதற்கு முன்…

தொடர்ந்தும் ஓப்சைட் நிலையில் இருந்த திலிப் பீரிஸுக்கு நெருக்கமாக பந்து கடத்தப்பட்டது. அந்த இடத்திற்கு சென்ற டிலான் மதுஷங்க பந்தை பெற்று சுப்பர் சன் கோலை நோக்கி செலுத்தினார்.

டிலானிடம் இருந்து வந்த பந்தை சுப்பர் சன் பின்கள வீரர் சிறப்பாக தடுத்தபோதும், அந்தப் பந்து ஓப்சைட் நிலையில் இருந்த திலிப் பீரிஸிடம் திரும்பிச் சென்றது. அவர் ரினௌன் அணிக்காக மூன்றாவது கோலை புகுத்தினார்.

திலிப் பீரிஸ் போட்டியில் இடையூறு செய்யவில்லை என்று கருதிய உதவி நடுவர் மற்றும் பிரதான நடுவர் அந்த கோலை அனுமதித்தனர். எனினும், சுப்பர் சன் வீரர்கள் அது ஓப் சைட் கோல் எனக் கோரி போட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த விடயத்தில் அணி முகாமை தலையிட்டதோடு நிலைமை மோசமடைய இலங்கை கால்பந்து சம்மேளன (FFSL) அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் போட்டி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கினர்.  

FFSL போட்டியை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கும்போது, போட்டியை தொடர தாம் விரும்பவில்லை என்று சுப்பர் சன் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நேரம் கடந்ததை அடுத்து கடைசியில் போட்டி கைவிடப்பட்டது. பின்னர் இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, சுப்பர் சன் அணி தொடரில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டது.

இலங்கை கால்பந்து வரலாற்றில் அண்மைக் காலத்தில் போட்டி ஒன்று திடீரென்று நிறுத்தப்படுவது இது முதல் முறைய ல்ல. கடந்த காலங்களில் பாடசாலை போட்டிகளில் கூட இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. போட்டி பற்றி போதிய அறிவு அல்லது விழிப்புணர்வின்மையே இந்தப் பிரச்சினைக்கு மூல காரணமாக உள்ளது.   

உள்ளூர் கால்பந்து அரங்கில் பல ரசிகர்களுக்கும் ஓப்சைட் விதி (விதி 11) பற்றி தெரியாதுள்ளமை இவ்வாறான பிரிச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளன சபையே (IFAB) கால்பந்து விளையாட்டின் விதிகளை உருவாக்கும் ஆட்சிக் குழுவாகும். இது இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம், வேல்ஸ் கால்பந்து சம்மேளனம், ஸ்கொடிஷ் கால்பந்து சம்மேளனம், வட அயர்லாந்து கால்பந்து சம்மேளனம் மற்றும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆகிய ஸ்தாபக சபைகளை ஒன்றிணைத்ததாகும்.

IFAB இனால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த விதியின் விரிவான விளக்கம் வருமாறு,  

வீரர் ஒருவர் ஓப்சைட் நிலையில் இருப்பதென்பது:

பந்து மற்றும் கடைசிஇரண்டாவது எதிரணி வீரரை விட தலை, உடல் அல்லது காலின் எந்த ஒரு பகுதி எதிரணியின் கோல் எல்லைக்கு அருகில் மற்றும் தலை, உடல் அல்லது காலின் எந்த ஒரு பகுதி எதிரணியின் அரைப் பகுதியில் (அரைப் பகுதி கோடு தவிர்த்து) இருப்பதாகும். கோல்காப்பாளர்கள் உட்பட அனைத்து  வீரர்களினதும் கைகள் மற்றும் கால்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.  

  • இரண்டாவது எதிரணி வீரர் அல்லது
  • கடைசி இரண்டு எதிரணி வீரர்களுடன்

இணையான நிலையில் இருந்தால் அந்த வீரர் ஓப்சைட் நிலையிலில்லை.

வீரர் ஒருவர் ஓப்சைட் நிலையில் இருக்கும்போது சக வீரர் மூலம் பந்து ஆடப்பட்டு அல்லது தொடப்பட்ட நிலையில் ஆட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வீரர்கள் மாத்திரமே தண்டனைக்கு உட்படுவர்.

ஓப்சைட் இருக்க முடியாத தருணங்கள்

  • மைதானத்தில் தனது சொந்த அரைப்பகுதியில் இருக்கும் வீரர்கள் ஓப்சைட் இருக்க முடியாது.
  • கோல் கிக், கோனர் கின் அல்லது த்ரோ இன் சந்தர்ப்பங்களில் ஓப்சைட் இருப்பது சாத்தியமில்லை.
  • எதிரணி வீரர் ஒருவர் பந்தை திட்டமிட்டு விளையாடினால், முன்கள வீரர் ஓப்கைச் இருக்க முடியாது.
  • வீரர் ஒருவர் எதிரணியின் கோல் எல்லைக்கு பின்னால் இருந்தால் ஓப்சைட் நோக்கத்திற்காக கோல் எல்லையில் இருப்பதாக கருதப்படும். ஆட்டத்தில் அனுமதி இன்றி மைதானத்தை விட்டு வெளியேறுவது அல்லது உள் நுழைவது குற்றமாகும். ஆனால் அது ஆட்டத்தின் இயற்கையான நகர்வாக இருந்தால் அவ்வாறு கருதப்படமாட்டாது.  
  • பந்து விளையாடப்படும்போது வீரர் ஒருவர் அதற்கு பின்னால் இருந்தால் அவன் அல்லது அவள் ஓப்சை இருக்க முடியாது.
  • பந்துக்கு அல்லது கடைசி இரண்டாவது பின்கள வீரருடன் முன்கள வீரர் ஒருவர் சரியாக ஒரே கோட்டில் இருந்தால் ஓப்சைட் ஆக கருதப்பட மாட்டாது.
  • ஒரு வீரர் பந்தை ஆடிக்கொண்டிருக்கும் வீரராக இல்லாமல் இருந்தால், அந்த வீரர் ஓப்சை நிலையில் இருந்தாலும் அது ஒரு ஓப்சைட் குற்றமாக இருக்காது.புதிய மாற்றம்

ஓப்சைட் நிலையில் இருந்து வீரர் ஒருவர் ஓன்சைட் நிலைக்கு திரும்பினால், ஏனைய எந்த ஒரு ஓன்சைட் வீரரிடமும் பந்து படும் முன்னர் அந்தப் பந்தை குறித்த வீரர் ஆடினால் ஓப் சைட் ஆகக் கருதப்படும்.  

இது உள்ளூர் கால்பந்து ரசிகர்கள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சிலருக்குக் கூட குழப்பத்தைத் தருவதாக உள்ளது.

தகுதியிழப்புக்கு எதிராக சுப்பர் சன் மேன்முறையீடு

சுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு…

வீரர் ஒருவர் ஓப்சைட் நிலையில் இருக்க முடியும் என்ற நிலையில் போட்டியின் போக்கில் இடையூறை குறைப்பதற்காகவே இந்த புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. பந்து அந்த வீரர் அல்லது வீராங்கனையின் திசையில் வாந்தாலும் அந்த வீரர் அல்லது வீராங்கனை அதில் ஈடுபடும் வரை தண்டனை வழங்கப்படாது. தற்காப்பு அணிக்கு தொடர்ந்து ஆடவும் பந்தை கைப்பற்றவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இதற்கு ஸ்பெயின் மற்றும் இத்தாலி லீக் அதேபோன்று இங்கிலாந்து எப்.. கிண்ணத்தில் நடுவரால் தமது முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு VAR (வீடியோ உதவி நடுவர்) முறை பயன்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும் ஓப்சைட் நிலைக்கு தனியே VAR பரிசீலனையை பெற முடியாது.

VAR உதவியை பெற முடியுமான மூன்று சந்தர்ப்பங்கள்

  • கோல் பெறப்படும்போது
  • பெனால்டி வழங்குவது அல்லது மேல்முறையீடு
  • தவறை அடையாளம்காண  

கோல் ஒன்று பெறப்பட்ட நிலையில் நடுவர் அல்லது VAR குழு ஓப்சைட் என்று சந்தேகப்பட்டால் நடுக் கோட்டிற்கு நெருக்கமாக வைக்கப்பட்டிருக்கும் திரையில் பிரதான நடுவரால் சோதிக்க முடியும். அதுவும் உதவாத பட்சத்தில் சில சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய லீக்குகளில் VAR குழுவினால் அன்றி பிரதான நடுவரினால் முடிவு எடுக்கப்படும்.

உள்ளூர் கால்பந்தில் VAR முறை தற்போதைய நிலையில் சாத்தியமில்லை. போட்டியில் 90 நிமிடங்களின் ஒவ்வொரு தருணத்திலும் கழக நிர்வாகத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் ஓப்சைட் கேட்பதால் உதவி நடுவர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுகிறது.முடியுமான சந்தர்ப்பங்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் போட்டி அதிகாரிகளின் தரம் மற்றும் நிலையை மேம்படுத்த இலங்கை கால்பந்து சம்மேளனமும் சிறந்த பங்காற்றி வருகிறது.  

விளையாட்டின் விதிகள் பற்றி ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது FFSL இன் பொறுப்பல்ல. என்றாலும் வீரர்கள், அணி முகாமை மற்றும் போட்டி மத்தியஸ்தர்களை அறிவூட்டுவது FFSL இன் ஒரே பொறுப்பாகும். அதனை சரியாக செய்தால் இவ்வாறான நிலைமைகளை எம்மால் தவிர்க்க முடியும்.

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<