அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் தூதுச் செய்தியை எடுத்துவரும் மதிப்புக்குரிய இங்கிலாந்து மகாராணியின் தீபம் இலங்கையை நேற்று (12) வந்தடைந்துள்ளது.
மகாராணியின் இந்த தீபம் உருவாக்கப்பட்டதற்கான பிரதான காரணம் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் தொடர்பான தூதுச் செய்தியை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்தின் அடிப்படையிலாகும்.
பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாள் முடிவுகள்
கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைப் பிரிவு ஆகியன ….
இந்த தீபத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த பொதுநலவாய அமைப்பின் அதிகாரிகளிடமிருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதனைப் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து தீபம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய போட்டிகளின் தூது செய்தியை உலகம் பூராகவும் எடுத்துச் செல்லும் இந்த தீபத்தின் பயணம் இந்த வருடத்தின் மார்ச் மாதம் 17ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகியிருந்தது.
இங்கிலாந்தின் பங்கிங்ஹாம் அரச மாளிகையில் இருந்து உலகம் பூராகவும் பயணிக்க தொடங்கிய இந்த தீபம் மதிப்புக்குரிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களினால் வரையப்பட்ட “பொதுநலவாய நாடுகள் மற்றும் அதன் போட்டியாளர்களுக்குரிய தூதுச் செய்திகளை” உள்ளடக்கியிருக்கின்றது.
அதோடு இம்முறை எடுத்துச் செல்லப்படும் இந்த தீபமே பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் வரலாற்றில் அதிக நாட்களுக்கும், நீண்ட தூரத்திற்கும் பயணிக்கின்ற சாதனையை பதிவு செய்கின்றது. மொத்தமாக 388 நாட்கள் பயணிக்கும் இந்த தீபம் 230,000 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து செல்கின்றது.
தீபமானது ஆபிரிக்க, அமெரிக்க, கரீபியன், ஐரோப்பிய, ஆசிய மற்றும் அவுஸ்திரேலிய துணைக்கண்ட நாடுகள் அனைத்திற்கும் பயணம் மேற்கொள்ளும். தற்போது பங்களாதேஷிலிருந்து இலங்கைக்கு வந்திருக்கும் தீபம் இலங்கையை அடுத்து மலேசியாவுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி பயணமாகின்றது. மலேசியாவை அடுத்து புரூணை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லுகின்ற தீபம் ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக் கொள்கின்றது.
திரிமான்ன, கபுகெதரவின் தேர்வை நியாயப்படுத்தும் லெப்ரோய்
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவர் கிரேம் லெப்ரோய் தனது வெளிப்படையான …..
தொடர்ந்து அவுஸ்திரேலிய துணைக்கண்ட நாடுகளில் வலம் வரவுள்ள தீபம் எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது அடுத்த வருடத்திற்கான பொதுநலவாய விளையாட்டு போட்டிகளை நடாத்தும் அவுஸ்திரேலியாவிற்கு செல்கின்றது. அவுஸ்திரேலிய சென்ற பின்னர் 100 நாட்களுக்கு அந்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் தீபத்தின் பயணம் பொதுலவாய போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுடன் நிறைவடையும்.
இம்முறை பொதுநலவாய போட்டிகளை நடாத்தும் அவுஸ்திரேலியாவினால் ஒவ்வொரு போட்டிகளுக்காகவும் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த தீபம், மெகடேமியா (Macadamia) மரத்தினாலும் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கையும் மூலப்பொருட்களாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மூலப்பொருட்கள் போட்டிகள் நடைபெறவிருக்கும் கோல்ட் கோஸ்ட் நகரத்தின் கடற்படரப்பை அண்டிய பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டு குறிப்பிட்ட கடல் நகரத்தின் பூர்வீகத்தினையும் புனித தன்மையும் காட்டும்படி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Interview with 17 years experienced 100 meter runner Mohamed Safran
Uploaded by ThePapare.com on 2017-09-11.