T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார

1021
Image Courtesy - Cricinfo

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல் 11 வரை ஹொங் கொங்கில் நடைபெறவுள்ள T-20 பிலிட்ஸ் போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார்.

தான் எட்டிய சாதனைகள் குறித்த மகிழ்ச்சியுடன் விடைபெறும் சங்கக்கார

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து..

டெஸ்ட் அரங்கில் 12,400 ஓட்டங்களையும், ஒரு நாள் அரங்கில் 14,200 ஓட்டங்களையும் குவித்துள்ள 40 வயதான சங்கக்கார, இத்தொடரில் கலந்துகொண்டு ஹொங் கொங் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவும், அந்நாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பாக கடந்த வருடமும் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடியிருந்த சங்கக்கார, அவ்வணியின் தலைவராகச் செயற்பட்ட அன்சுமன் ராத்துக்கு ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தார். இதன் காரணமாக அந்நாட்டு உள்ளூர் போட்டிகளில் கடந்த வருடம் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் அவர் மாறினார். எனினும், அவர் இம்முறை போட்டித் தொடரில் சிட்டி கைடெக் அணிக்காக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹொங் கொங் T-20 போட்டித் தொடரில் மீண்டும் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை தொடர்பில் சங்கக்கார அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், கடந்த வருடமும் இப்போட்டித் தொடரில் விளையாடக் கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனவே இம்முறைப் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடுவதற்கு ஆவலுடன் உள்ளேன் என்றார்.  

ஹொங் கொங்கில் கிடைக்கின்ற கிரிக்கெட் அனுபவத்தை தாம் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்த சங்கக்கார, திறமைமிக்க உள்ளூர் வீரர்களுடனும், உற்காசமளிக்கின்ற ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள்

விளையாட்டு உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு சாதனைகள்..

சங்கக்காரவின் மீள் வருகை குறித்து கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்கோட் மெகேனி கருத்து வெளியிடுகையில், இம்முறை போட்டித் தொடரிலும் சங்கக்காரவை அணியுடன் இணைத்துகொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய திறமை மற்றும் அனுபவம் என்பன இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக அமையும். எனவே அவரை ஒப்பந்தம் செய்யக் கிடைத்தமை எமது அணிக்கு சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொடுப்பதுடன், ஹொங் கொங் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

இதுவரை 56 T-20 போட்டிகளில் விளையாடி 1,382 ஓட்டங்களைக் குவித்துள்ள சங்கக்கார 2014ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 உலகக் கிண்ணப் போட்டியுடன் வர்வதேச T-20 அரங்கிற்கு விடைகொடுத்தார். அதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற T-20 லீக் தொடர்களில் விளையாடி வருகின்ற அவர், இறுதியாக கடந்த வருடம் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணி பங்குபற்றியிருந்த 4 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றியைப் பதிவு செய்து கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டது. எனவே இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள கொவுலுன் கென்டன்ஸ், சிட்டி கைடெக், ஹுங் ஹொன்ங் மற்றும் அய்லன்ட் யுனைடெட் ஆகிய அணிகளுக்கு சவலாளித்து சம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான..

அத்துடன், இம்முறை போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சீக்குகே பிரசன்ன கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காகவும், திலகரத்ன டில்ஷான் சிட்டி கைடெக் அணிக்காகவும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இம்முறைப் போட்டித் தொடரிலும் பல முன்னாள் நட்சத்திர வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொவுலுன் கென்டன்ஸ் அணி – சஹீட் அப்ரிடி, மார்லன் சாமுவேல்ஸ், டுவைன் ஸ்மித்

ஹுங் ஹொன்ங் அணி – மொஹமட் ஹபீஸ், டெரன் சமி, ஜொஹான் போதா, ஜேம்ஸ் பிரான்கிளின்

கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணி குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஜெஸ்ஸி ரைடர், சொஹைல் தன்வீர்

அய்லன்ட் யுனைடெட் அணி – மிஸ்பா உல் ஹக், இயென் பெல், சாமுவேல் பத்ரி, சயீட் அஜ்மல்  

சிட்டி கைடெக் அணி – திலகரத்ன டில்ஷான், கிறிஸ் ஜோர்டன்