Home Tamil இரண்டாவது முறையாகவும் LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ்

இரண்டாவது முறையாகவும் LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ்

1713
 

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2021 ஆம் ஆண்டு தொடரின்  இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி, தொடரின் சம்பியனாகவும் இரண்டாவது முறையாக நாமம் சூடியிருக்கின்றது.

இதே நேரம் இப்போட்டியில் தோல்வியடைந்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இரண்டாவது முறையாக LPL சம்பியன் பட்டத்தினை நழுவவிட்டிருக்கின்றது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வியாழக்கிழமை (23) ஆரம்பமாகிய இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றிருந்தார்.

இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை கோல் கிளேடியேட்டர்ஸ் அணி முதல் குவாலிபையர் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியினை வீழ்த்தி பெற்றிருக்க, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியினை தழுவியிருந்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் போட்டியில் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி வீரர்களை வீழ்த்தி இறுதிப் போட்டி வாய்ப்பினை தக்கவைத்திருந்தது.

தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக களம் வந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் குவித்து ஜப்னா கிங்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக மாறியிருந்தார்.

எனினும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வீரர்கள் சில களத்தடுப்பு தவறுகளை மேற்கொள்ள  வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கிய ஜப்னா கிங்ஸ் அணியின் மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ அதிரடி அரைச்சதம் ஒன்றினை விளாசினார்.

அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் கொஹ்லர்-கெட்மோர் ஜப்னா கிங்ஸ் அணிக்கு அரைச்சதம் ஒன்றுடன் உதவ, சொஹைப் மலிக் மற்றும் அணித்தலைவர் திசர பெரேரா ஆகியோரின் இறுதி நேர அதிரடியோடு ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

>>சன்ரைசர்ஸ் அணியில் முரளியுடன் இணையும் லாரா, ஸ்டெய்ன்

ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கொஹ்லர்-கெட்மோர் 41 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேவேளை சொஹைப் மலிக் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 11 பந்துகளில் 23 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, திசர பெரேரா 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 9 பந்துகளில் 17 ஓட்டங்களை எடுத்தார்.

மறுமுனையில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் ஆமிர், நுவன் துஷார மற்றும் சமிட் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 202 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கழமிறங்கிய தனுஷ்க குணத்திலக்க அட்டகாசமான ஆரம்பத்தினை வழங்கினார்.

இதனையடுத்து தனது தரப்பின் ஓட்டங்களை மிக விரைவாக அதிகரிக்க உதவியிருந்த தனுஷ்க குணத்திலக்க வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக மாறும் போது   அரைச்சதத்துடன் 21 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ்க குணத்திலக்கவின் பின்னர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி சற்று தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும், மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் சிறந்த முறையில் ஓட்டங்கள் பெற்று கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை வெற்றியின் பக்கம் கொண்டு செல்ல முயற்சித்திருந்தார்.

இந்தநிலையில் போட்டியின் 11 ஆவது ஓவரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி அதன் அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஷவின் விக்கெட்டினை அவர் 14 ஓட்டங்களை பெற்ற நிலையில் பறிகொடுத்தது. அவரின் விக்கெட்டின் பின்னர் ஜப்னா கிங்ஸ் அணிக்கு சவாலான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய குசல் மெண்டிஸ் தனது விக்கெட்டினை ரன் அவுட் மூலம் பறிகொடுத்தார்.

குசல் மெண்டிஸின் விக்கெட்டை அடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இறுதியில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 178 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வயைத் தழுவியது.

கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் 28 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மறுமுனையில் ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்ற, மகீஷ் திக்ஷன, ஜெய்டன் சீல்ஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் ஒரு விக்கெட் வீதம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்


Result


Galle Gladiators
178/9 (20)

Jaffna Kings
201/3 (20)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Danushka Gunathilaka b Nuwan Thushara 63 41 8 2 153.66
Rahmanullah Gurbaz c Kusal Mendis b Samit Patel 35 18 3 3 194.44
Tom Kohler-Cadmore not out 57 41 2 3 139.02
Shoaib Malik c Pulina Tharanga b Mohammad Amir 23 11 1 2 209.09
Thisara Perera not out 17 9 1 2 188.89


Extras 6 (b 1 , lb 2 , nb 0, w 3, pen 0)
Total 201/3 (20 Overs, RR: 10.05)
Fall of Wickets 1-56 (5.2) Rahmanullah Gurbaz, 2-119 (12.4) Avishka Fernando, 3-181 (18.2) Shoaib Malik,

Bowling O M R W Econ
Mohammad Amir 4 0 39 1 9.75
Nuwan Thushara 4 0 33 1 8.25
Dhananjaya Lakshan 2 0 29 0 14.50
Isuru Udana 3 0 38 0 12.67
Samit Patel 4 0 32 1 8.00
Pulina Tharanga 3 0 27 0 9.00


Batsmen R B 4s 6s SR
Kusal Mendis run out () 39 28 3 1 139.29
Danushka Gunathilaka c Thisara Perera b Wanindu Hasaranga 54 21 7 3 257.14
Ben Dunk c & b 0 1 0 0 0.00
Mohammad Hafeez run out (Wanindu Hasaranga) 10 6 2 0 166.67
Bhanuka Rajapakse c Wanindu Hasaranga b Mahesh Theekshana 14 16 2 0 87.50
Samit Patel c Jayden Seales b Suranga Lakmal 22 20 0 1 110.00
Dhananjaya Lakshan c Wanindu Hasaranga b Chathuranga de Sliva 2 3 0 0 66.67
Pulina Tharanga b 4 6 0 0 66.67
Isuru Udana c Shoaib Malik b Jayden Seales 9 11 1 0 81.82
Mohammad Amir not out 6 6 1 0 100.00
Nuwan Thushara not out 5 2 1 0 250.00


Extras 13 (b 1 , lb 10 , nb 0, w 2, pen 0)
Total 178/9 (20 Overs, RR: 8.9)
Fall of Wickets 1-63 (4.2) Danushka Gunathilaka, 2-63 (4.3) Ben Dunk, 3-84 (6.2) Mohammad Hafeez, 4-113 (10.4) Bhanuka Rajapakse, 5-129 (13.1) Kusal Mendis, 6-133 (13.6) Dhananjaya Lakshan, 7-143 (15.5) Pulina Tharanga, 8-158 (17.6) Samit Patel, 9-168 (18.5) Isuru Udana,

Bowling O M R W Econ
Mahesh Theekshana 4 0 51 1 12.75
Jayden Seales 3 0 36 1 12.00
Suranga Lakmal 3 0 23 1 7.67
Wanindu Hasaranga 4 0 30 2 7.50
Shoaib Malik 3 0 12 0 4.00
Chathuranga de Sliva 3 0 15 2 5.00




முடிவு – ஜப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<