சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் பார்சிலோனா, ஏஜெக்ஸ் அணிகள்

133

ஐரோப்பாவின் மிகப் பெரிய கால்பந்து தொடரான சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுச் சுற்றுக்கு ஸ்பெய்னின் பார்சிலோனா மற்றும் நெதர்லாந்தின் ஏஜெக்ஸ் கழகங்கள் முன்னேறியுள்ளன.

காலிறுதிச் சுற்று ஆட்டங்களில் முறையே மென்செஸ்டர் யுனைடட் மற்றும் ஜுவண்டஸ் கழகங்கள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

பார்சிலோனாவுக்கு இலகு வெற்றி: ஜுவண்டஸ் – ஏஜெக்ஸ் மோதல் சமநிலையில்

ஐரோப்பியாவில் மிகவும் பிரபலமான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிச் சுற்றின் முதல் கட்ட…

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிச் சுற்றின் இரண்டாவது கட்ட (லெக்) ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடட் மற்றும் பார்சிலோனா கழகங்கள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.


ஏற்கனவே நடைபெற்ற முதலாவது கட்ட ஆட்டத்தில் 1 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இந்தப் போட்டியை பார்சிலோனா கழகம் தனது சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது.

இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் மென்செஸ்டர் யுனைடட் கழகம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. எனினும் போட்டியின் 16 ஆவது நிமிடத்தில் தனது அபார திறமை மூலம் லியொனல் மெஸ்ஸி கோலொன்றைப் போட, 1 0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 20 ஆவது நிமிடத்தில் லியொனல் மெஸ்ஸி அடித்த பந்தை பிடிப்பதில் மென்செஸ்டர் யுனைடட் கழகத்தின் கோல் காப்பாளர் விட்ட தவறினால் பார்சிலோனா கழகம் மற்றுமொரு கோலையும் பெற்றுக்கொண்டது.

இதன்பிரகாரம் போட்டியின் முதல் பாதியில் 2 0 என்ற கோல்கள் கணக்கில் பார்சிலோனா கழகம் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பார்சிலோனா கழகம் சார்பில் 61 ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோல் பெறப்பட்டது.

உலகக் கிண்ண தகுதிகாண் முதல் சுற்றில் மகாவு – இலங்கை மோதல்

கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணப் போட்டி மற்றும் 2023 AFC ஆசிய கிண்ணத்திற்கான முதல் சுற்று தகுதிகாண்…

கோல் போடுவதற்கு மென்செஸ்டர் யுனைடட் கழக வீரர்கள் எடுத்த முயற்சிகள் இறுதி வரை பலன் அளிக்காமல் போக 3 0 என்ற கோல்கள் கணக்கில் பார்சிலோனா கழகம் போட்டியில் வெற்றியீட்டியது.

இரண்டு கட்ட ஆட்டங்களினதும் முடிவுகளின் பிரகாரம் 4 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்ற பார்சிலோனா அணி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் இந்த பருவகாலத்திற்கான அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மற்றுமொரு காலிறுதிச் சுற்றில் விளையாடும் லிவர்பூல் மற்றும் எப்.சி போட்டோ கழகங்களுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் அரையிறுதிச் சுற்றில் பார்சிலோனா விளையாடவுள்ளது.

இந்த பருவகாலப் போட்டிகளில் பார்சிலோனா கழகம் சார்பில் 42 போட்டிகளில் விளையாடியுள்ள லியொனல் மெஸ்ஸி 45 கோல்களைப் போட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிச் சுற்றில் முதல் முறையாக லியொனல் மெஸ்ஸி கோலொன்றைப் போட்டுள்ளார். இந்த வெற்றிமூலம் 2014 –  2015 ஆம் ஆண்டு பருவகாலத்திற்கு பின்னர் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு பார்சிலோனா கழகம் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இங்கிலாந்தின் கழகங்களுக்கு எதிராக சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 24 கோல்களை மெஸ்ஸி போட்டுள்ளதுடன், இம்முறை சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரில் அதிக கோல்களைப் போட்ட அணியாகவும் பார்சிலோனா கழகம் பதிவாகியுள்ளது.

சொந்த மைதானத்தில் இந்தப் போட்டியை பார்சிலோனா விளையாடியிருந்த நிலையில், இரசிகர்கள் மீண்டும் மீண்டும் மெஸ்ஸியின் பெயரை உச்சரித்து கரகோஷம் செய்திருந்தது போட்டியைில் மெஸ்ஸி மீதான எதிர்பார்ப்பிற்கு சான்றாக இருந்தது.


ஏனைய அணிகளை விட காலிறுதிச் சுற்றில் ஏழு தடவைகள் மென்செஸ்டர் யுனைடட் கழகம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மெஸ்ஸியின் திறமையை பாராட்டிய மென்செஸ்டர் யுனைடட் கழகத்தின் பயிற்றுவிப்பாளர், அவரின் ஆட்டம் உயர் தரமிக்கதாக அமைந்திருந்தாக கூறியுள்ளார்.  


மெஸ்ஸியின் ஆட்டம் வேறு தரத்தில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இறுதி தசாப்தத்தில் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்ரியானோ ரொனால்டோ ஆகியோர் சிறந்த வீரர்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜுவண்டஸ் எதிர் ஏஜெக்ஸ்

இதேவேளை, சொந்த மண்ணில் வைத்து இத்தாலியின் ஜுவண்டஸ் கழகத்தை வீழ்த்திய நெர்லாந்தின் ஏஜெக்ஸ் கழகம் சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுவண்டஸ் முன்னணி வீரர் கிறிஸ்ரியானோ ரொனால்டோ போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் கோணர் கிக் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பந்தை தலையால் முட்டி கோல் ஒன்றைப் போட்டார்.


எனினும் தொடர்ந்தும் போராடிய ஏஜெக்ஸ் கழகம் போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டு, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியது.


போட்டியின் இரண்டாவது பாதியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏஜெக்ஸ் கழகத்தின் தலைவர் கோணர் கிக் மூலம் கிடைத்த பந்தை தலையால் முட்டி அணிக்கான இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

பார்சிலோனாவுக்கு இலகு வெற்றி: ஜுவண்டஸ் – ஏஜெக்ஸ் மோதல் சமநிலையில்

ஐரோப்பியாவில் மிகவும் பிரபலமான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிச் சுற்றின் முதல் கட்ட…

தொடர்ந்தும் போட்டியில் வெற்றிபெறுவதற்கு ஜுவண்டஸ் கழகம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போக, விதிமுறைக்கு முரணாக விளையாடியதாக கிறிஸ்ரியானோ ரொனால்டோவிற்கு நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தார்.


போட்டியின் இறுதியில் 2 1 என்ற கோல் கணக்கில் ஏஜெக்ஸ் கழகம் வெற்றிபெற்றது.


ஏற்கனவே முதல் கட்ட ஆட்டம் 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவுபெற்ற நிலையில், இரண்டு ஆட்டங்களின் பிரகாரம் 3 2 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்ற ஏஜெக்ஸ் கழகம் சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.


மற்றுமொரு காலிறுதிச் சுற்றில் பலப்பரீட்சை நடத்தும் மென்செஸ்டர் சிட்டி மற்றும் டொட்டன்ஹம் ஹொஸ்பர் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் அரையிறுதிச் சுற்றில் ஏஜெக்ஸ் கழகம் விளையாடவுள்ளது.

1996 – 1997 ஆம் ஆண்டு பருவகாலத்திற்கு பின்னர் முதல் முறையாக சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஏஜெக்ஸ் கழகம் முன்னேறியுள்ளது.


அத்துடன் சம்பியன்ஸ் லீக் தொடரில் எதிரணியின் மைதானத்தில் வைத்து அந்த அணியை தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஏஜெக்ஸ் கழகம் வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<