2021இல் அதிக டெஸ்ட் ஓட்டங்கள்: திரிமான்னவுக்கு இரண்டாமிடம்

Bangladesh tour of Sri Lanka 2021

151

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்ன இவ்வருடத்தில் அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

துடுப்பாட்ட வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.

இந்த நிலையில், குறித்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன இரட்டைச் சதமடித்து அசத்த, தனன்ஜய டி சில்வா சதத்தையும், லஹிரு திரிமான்ன அரைச் சதத்தையும் பதிவு செய்ய இலங்கை அணி, முதலாவது இன்னிங்ஸுக்காக 8 விக்கெட்களை இழந்து 648 ஓட்டங்களை பெற்ற பின்னர் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

திமுத், திரிமான்னவின் அரைச்சதங்களுடன் முன்னேறும் இலங்கை

இதனிடையே, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகிய இருவரும் சிறந்த பிரகாசிப்புடன் நிதானமாக துடுப்பெடுத்தாடி முதல் விக்கெட்டுக்காக 114 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்

இதன்படி, அடுத்தடுத்த இரண்டு இன்னிங்ஸ்களில் முதல் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஆரம்ப ஜோடியாக இவர்கள் புதிய சாதனை படைத்தனர்.

இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்ப விக்கெட்டுக்காக 101 ஓட்டங்களை இவர்கள் பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக 2004இல் சனத் ஜயசூரியா, மார்வன் அத்தபத்து ஜோடி ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த இரண்டு இன்னிங்ஸ்களில் ஆரம்ப விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தைப் பெற்றுக்கொண்டார்கள்

Video – பயிற்சியாளராக புதுஅவதாரம் எடுத்த Kumar Dharmasena..! | Sports Roundup – Epi 158

இந்த நிலையில், நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் லஹிரு திரிமான்ன 58 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில்  ஆட்டமிழந்தார்.  

இதன்படி, இவ்வருடம் நடைபெற்ற இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடர்களில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி மீண்டும் போர்முக்கு திரும்பிய லஹிரு திரிமான்ன, இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 517 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் நான்கு அரைச் சதங்களுடம் உள்ளடங்கும்

இதன்படி, இவ்வருடத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தை லஹிரு திரிமான்ன பெற்றுக்கொண்டார்.

திமுத்தின் கன்னி இரட்டைச்சதத்துடன் இமாலய ஓட்டங்களை எட்டிய இலங்கை

இதில் முதலிடத்தை 794 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ள இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் பெற்றுக்கொள்ள, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை முறையே இந்தியாவின் ரிஷப் பாண்ட் (515 ஓட்டங்கள்), ரோஹித் சர்மா (474 ஓட்டங்கள்) ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த திமுத் கருணாரத்ன, அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 6ஆவது இடத்தையும் (440 ஓட்டங்கள்), நிரோஷன் டிக்வெல்ல 9ஆவது இடத்தையும் (362 ஓட்டங்கள்) பெற்றுக்கொண்டுள்ளனர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<