இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கான தேர்வு இந்த வாரம்

301

நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் ஆரம்ப குழாமுக்கான தேர்வுகளை இலங்கை வலைப்பந்து சம்மேளனம் (SLNF) இந்த வாரம் நடாத்தவுள்ளது.

தேசிய வலைப்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக திலகா ஜினதாச

இலங்கையை சர்வதேச மட்டத்தில் இரண்டு வகைப் போட்டிகளில் பிரதிநிதித்துவம்…….

குறித்த தேர்வு எதிர்வரும் 20ஆம் திகதி பண்டாரகம உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது. எனினும், அதற்கு முன்னர் தேர்வில் பங்குகொள்ள தகுதி பெறுவதற்காக வீராங்களைகள் தம்மைப் பதிவு செய்யவும், மருத்துவ தேர்வில் சித்தி பெறவும் வேண்டும்.

இது குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவித்த இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் செயலாளர் திருமதி ஜயன்தி சோமசேகரம் ”வீராங்களைகள் ஜனவரி 16ஆம் திகதி தனுஜா திஸ்ஸானாயக்கவை (SLNF இன் உப செயலாளர் – 076 320 1169) தொடர்புகொண்டு தம்மைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் ஜனவரி 18ஆம் திகதி டொரிண்டன் மைதானத்தில் இடம்பெறும் மருத்துவ சோதனைக்கு அவர்கள் அழைக்கப்படுவர். அவ்வாறு மருத்துவ சோதனையில் சித்தி பெறுபவர்கள் தேசிய அணித் தெரிவில் பங்கு கொள்ள தகுதி பெறுவர்” என்றார்.

இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள திலகா ஜினதாஸ தற்பொழுது நாட்டிற்கு வந்துள்ளார். அவர் தனது ஆரம்ப கட்டமாக வீராங்கனைகளின் உடற்தகுதியிலேயே அதிக ஆர்வம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகாமைத்துவத்தில் மாற்றங்கள் தேவை – திலக்கா ஜினதாச

இலங்கைத் தீவானது, திறமைமிக்க விளையாட்டு வீரர்களை அதிகம்……..