Home Tamil திமுத், திரிமான்னவின் அரைச்சதங்களுடன் முன்னேறும் இலங்கை

திமுத், திரிமான்னவின் அரைச்சதங்களுடன் முன்னேறும் இலங்கை

Bangladesh tour of Sri Lanka 2021

147
Bangladesh tour Sri Lanka 2021

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி, மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பமாகிய மூன்றாவது நாள் ஆட்டநேரத்தில், 474 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

>> சதமடித்து பங்களாதேஷ் அணிக்கு பலம் கொடுத்த மொமினுல், நஜ்முல்

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ

பங்களாதேஷ் அணி

தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், எப்டொட் ஹுசைன்

முஷ்பிகூர் ரஹீம் 43 ஓட்டங்களுடனும், லிடன் டாஸ் 25 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்ததுடன், அரைச்சதங்களை வேகமாக பதிவுசெய்தனர். இதில், லிடன் டாஸ் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, முஷ்பிகூர் ரஹீம் விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் 68 ஓட்டங்களை பெற்றார். இதற்கிடையில், மெஹிதி ஹாசன் மற்றும் தாஜூல் இஸ்லாம் ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேற, 541 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பங்களாதேஷ் அணி ஆட்டத்தை இடைநிறுத்தியது.

மதியபோசன இடைவேளைக்கு 30 நிமிடங்கள் இருக்கும் நிலையில், பங்களாதேஷ் அணி, இலங்கை அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.  அதன்படி களமிறங்கிய இலங்கை அணி மதியபோசன இடைவேளையின் போது விக்கெட்டிழப்பின்றி 11 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மதியபோசன இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோரின் சிறந்த பிரகாசிப்புடன் நிதானமாக துடுப்பெடுத்தாடியது. 

லஹிரு திரிமான்ன தன்னுடைய அரைச்சதத்தை பதிவுசெய்ய, மறுபக்கம் திமுத்க கருணாரத்ன நிதானமான பங்களிப்பை வழங்கினார். தேநீர் இடைவேளை இறுதிவரை இருவரும் விக்கெட்டுக்களை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாடிய போதும், துரதிஷ்டவசமாக தேநீர் இடைவேளை வழங்குவதற்கான இறுதிப்பந்தில் 58 ஓட்டங்களை பெற்றிருந்த லஹிரு திரிமான்ன ஆட்டமிழந்தார். 

தேநீர் இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் தகர்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தை தொடர ஓசத பெர்னாண்டோ களமிறங்கினார்.

ஓசத பெர்னாண்டோ களமிறங்கியதுடன், திமுத் கருணாரத்ன தன்னுடைய அரைச்சதத்தை பதிவுசெய்தார். எனினும், துரதிஷ்டவசமாக சிறந்த ஆரம்பத்தை பெற்ற ஓசத பெர்னாண்டோ 20 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய தனன்ஜய டி சில்வா, திமுத் கருணாரத்னவுடன் இணைந்து இலங்கை அணிக்காக மற்றுமொரு சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தார். இன்றைய ஆட்டநேர இறுதிவரை இவர்கள் இருவரும் துடுப்பெடுத்தாடியதுடன், திமுத் கருணாரத்ன 85 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 26 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் தாஜூல் இஸ்லாம், மெஹிடி ஹாசன் மற்றும் டஸ்கின் அஹ்மட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 541 ஓட்டங்களை குவித்துள்ளதுடன். இலங்கை அணி குறித்த ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு 312 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<