காயமடைந்துள்ள நெய்மார் உலகக் கிண்ணத்தில் ஆடுவதில் நெருக்கடி

323

பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து அணியின் முன்கள வீரர் நெய்மார் JR இற்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மூன்று மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரேசிஸ் கால்பந்து அணியின் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரபல பார்சிலோனா கழகத்தில் இருந்து வெளியேறி கடந்த ஓகஸ்ட் மாதம் PSG அணியில் 222 மில்லியன் யூரோவுக்கு (271 டொலர்கள்) ஒப்பந்தம் செய்து கொண்ட 26 வயதுடைய நெய்மார் உலகில் விலை உயர்ந்த வீரராக பதிவானார். அவர் தனது முன்பாதத்தில் ஏற்பட்டிருக்கும் எலும்பு முறிவு மற்றும் கணுக்கால் தசைப்பிடிப்புக்கு இந்த வாரம் சத்திரசிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.

பார்சிலோனாவில் இருந்து விலகியது பணத்துக்காக அல்ல – நெய்மர்

பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG)…

இந்த காயத்தில் இருந்து சுகம்பெற நெய்மாருக்கு மூன்று மாதங்கள் தேவைப்படும் என பிரேசில் அணியின் மருத்துவர் ரொட்ரிகோ லாஸ்மார் குறிப்பிட்டுள்ளார்.  

கடைசி சத்திரசிகிச்சை (பிரேசிலின்) பெலோ ஹொரிசொன்டேவிலுள்ள மாடெர் டெய் மருத்துவமனையில் சனிக்கிழமை (03) காலை நடைபெறும் என்று லாஸ்மார், ‘கிளோபோதொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.    

காயத்தில் இருந்து சுகம்பெறும் காலம் இரண்டரை மாதம் தொடக்கம் மூன்று மாதங்களாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், அது சத்திர சிகிச்சைக்கு பின்னர் அவர் மீண்டு வருவதை பொறுத்தது. செயல்முறைக்கு பின்னர் எமக்கு விபரம் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

நெய்மார் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள, உலகக் கிண்ணத்தை நடத்தும் ரஷ்யாவுக்கு எதிரான நட்புறவு போட்டி மற்றும் நடப்புச் சம்பியன் ஜெர்மனிக்கு எதிரான போட்டிகளில் பிரேசில் அணிக்கு ஆடமாட்டார். எனினும் எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்ப்பதாகவும் லாஸ்மார் குறிப்பிட்டார்.

ஐந்து முறை உலக சம்பியனான பிரேசில், உலகக் கிண்ணத்தில் தனது முதல் போட்டியில் ஜூன் 17 ஆம் திகதி சுவிட்சர்லாந்தை எதிர்கொள்ளவிருப்பதோடு தொடர்ந்து கொஸ்டா ரிக்கா மற்றும் செர்பிய அணிகளை சந்திக்கும்.  

அவர் மீண்டு வருவதற்கு எமக்கு நேரம் இருக்கிறது. அதற்காக கூடிய விரைவில் செயற்படுவது தொடருக்கு நல்ல நிலையில் போதுமானவரை தயாராக அவருக்கு அவகாசத்தை ஏற்படுத்தும் என்று லாஸ்மார் சுட்டிக்காட்டினார்.     

சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறும் இங்கிலாந்து ஜாம்பவான் ரூனி

இங்கிலாந்து தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல்கள்..

நெய்மார் குழப்பத்துடனும் கவலையுடனும் இருக்கிறார் என்பது உண்மையே. கூடிய விரைவில் சுகம் பெறுவதற்கு தம்மை தியாகம் செய்வதை தவிர தனக்கு வேறு தேர்வு இல்லை என்பதை அவர் புரிந்து வைத்துள்ளார் என்று பிரேசில் அணி மருத்துவர் காயமுற்ற முன்னணி வீரரின் நிலைமையை விபரித்தார்.

நெய்மார் காயமடைந்திருப்பதை PSG அணி கடந்த புதன்கிழமை (28) உறுதி செய்தது. இதனால் ஸ்பானிய சம்பியனான ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் தொடரின் கடைசி 16 அணிகள் போட்டியில் நெய்மாருக்கு ஆட முடியாமல் போனது.

கடந்த மாதம் நடைபெற்ற ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் பிரான்ஸின் PSG அணி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.   

மருத்துவ சோதனைக்கு பின் வீரரின் உடன்பாட்டுடன் சத்திரசிகிச்சை மேற்கொள்வதே சிறந்தது என தீர்மானிக்கப்பட்டதுஎன்று அந்த கழகம் குறிப்பிட்டது. ‘வார இறுதியில் பிரேசிலில் அவர் சத்திரசிகிச்சை செய்து கொள்வார்என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காயத்தால் தனது மகன் ஆறு முதல் எட்டு வாரங்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகும் என்று நெய்மாரின் தந்தை ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவருக்கு உலகக் கிண்ணத்திற்கு தயாராக அதிக காலம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இந்த பருவத்தின் பிரான்ஸ் லீக் வன் போட்டியில் நெய்மார் 28 கோல்களை புகுத்தியதோடு கோல் பெற 16 தடவைகள் உதவி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.