முதல்தர கிரிக்கெட்டில் 86 ஓட்டங்களுக்கு 17 விக்கெட்: கைல் அப்போட் புதிய மைல்கல்

82
©HAMPSHIRE TWITTER

இங்கிலாந்தின் கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஹெம்ப்ஷையார் அணிக்காக விளையாடிவரும் தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான கைல் அப்போட் இரண்டு இன்னிங்சிஸ்களிலும் சேர்த்து 17 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கைல் அப்போட், அவ்வணிக்காக 2013 முதல் 2017 வரை 11 டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 21 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அஜந்த மெண்டிஸின் சாதனை பட்டியலில் இணைந்த முஷ்தபிசூர்

பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக ……

இந்த நிலையில், கவுன்ட்டி போட்டிகளில் விளையாடும் நோக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்றார். இதனையடுத்துகோல்பாக்ஒப்பந்தத்தின்படி இங்கிலாந்தில் குடியேறி, கவுன்ட்டி அணியான ஹெம்ப்ஷையார் அணிக்காக விளையாடி வருகிறார்.

இதுஇவ்வாறிருக்க, தற்போது நடைபெற்று வருகின்ற டிவிஷன்-01 கவுன்ட்டி சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஹெம்ப்ஷையார் அணி சமர்செட் அணியை எதிர்த்து விளையாடிய போட்டியில் கைல் அப்போட் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்

முதல் இன்னிங்சில் அவர் 40 ஓட்டங்களைக் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தொடர்ந்து 2ஆவது இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசி 46 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

இதன்படி, இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 17 விக்கெட்டுக்களை கைப்பற்றி முதல்தர கிரிக்கெட்டில் புதிய சாதனை நிலைநாட்டினார்

முன்னதாக 1956இல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லெக்கர் அவுஸ்திரேலியா அணிக்கெதிராக 19 விக்கெட்டுக்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்து வருகிறது. அதன்பின் முதல்தர கிரிக்கெட்டில் தற்போதுதான் ஒரு பந்துவீச்சாளர் அதிகமாக 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அகில தனன்ஜயவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில …….

அத்துடன், கவுன்ட்டி சம்பியன்ஷிப்பில் கைல் அப்போட் தனது 4ஆவது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுமதியையும் பெற்றுக்கொண்டார்

மேலும், ஹெம்ப்ஷையார் அணிக்காக இதுவரை விளையாடிய பந்துவீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்ட வீரராகவும் இவர் இடம்பிடித்தார்.

©HAMPSHIRE TWITTER

குறித்த போட்டியில் ஹெம்ப்ஷையார் அணி 196 மற்றும் 226 ஓட்டங்களை முதலிரண்டு இன்னிங்ஸ்களில் பெற்றுக் கொண்டது. எனினும், கைல் அப்போட்டின் அபார பந்துவீச்சினால் முதல் இன்னிங்சில் 142 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 144 ஓட்டங்களையும் பெற்ற சமர்செட் அணி 136 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை தொடரில் இன்னுமொரு போட்டி மாத்திரம் எஞ்சியுள்ள நிலையில், முதல்தடவையாக சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகின்ற சமர்செட் அணி ஹெம்ப்ஷையார் அணிக்கெதிராக சந்தித்த இந்த தோல்வியானது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<