அஜந்த மெண்டிஸின் சாதனை பட்டியலில் இணைந்த முஷ்தபிசூர்

56

பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக வளம் வரும் முஷ்தபிசூர் ரஹ்மான், T20I  போட்டிகளில் வேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் அஜந்த மெண்டிஸ், ரஷீட் கான் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோரினை அடுத்து, நான்காவது இடத்தினை பிடித்துள்ளார்.

பாக். வீரர்களுக்கு பிரியாணி, பர்கர் சாப்பிடத் தடை

உள்நாட்டு தொடரில் விளையாடும் பாகிஸ்தான்…………..

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில், நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய முஷ்தபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதன்படி நேற்றைய போட்டியில் தனது முதலாவது விக்கெட்டினை கைப்பற்றிய போது, T20I  போட்டிகளில் தன்னுடைய 50வது விக்கெட்டினை இவர் பதிவு செய்தார். அதன் மூலம் போட்டிகளின் அடிப்படையில், T20I  போட்டிகளில் வேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டார்.

மொத்தமாக இதுவரை 33 T20I போட்டிகளில் விளையாடியுள்ள முஷ்தபிசூர் ரஹ்மான், ஒரு 5 விக்கெட் மற்றும் ஒரு 4 விக்கெட் பிரதிகளுடன் 531 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

T20I போட்டிகளை பொருத்தவரையில், வேகமாக 50 விக்கெட்டுகளை கடந்தவர்கள் பட்டியலின் முதல் இடத்தை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஜந்த மெண்டிஸ் தக்கவைத்திருக்கிறார். இவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தினை தென்னாபிரிக்க அணியின் இம்ரான் தாஹீர் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் ஆகியோர் பிடித்துள்ளனர்.

ஜிம்பாப்வேயை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பங்களாதேஷ்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முத்தரப்பு……………

இலங்கை அணியின் மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளராக வலம் வந்த அஜந்த மெண்டிஸ், 26 T20I  போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததுடன், இம்ரான் தாஹீர் மற்றும் ரஷீட் கான் ஆகியோர் 31 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<