IPL தொடரில் இருந்து விலகும் நிலையில் நடராஜன்

Indian Premier League - 2021

106
BCCI

தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன் முழங்கால் உபாதை காரணமாக தற்போது நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன், முதல் 2 போட்டிகளில் களமிறங்கினாலும், அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் விளையாடவில்லை

IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

இந்த நிலையில், முழங்கால் உபாதை காரணமாக IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகுவதாக ஹைதராபாத் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

இதுதொடர்பாக Cricinfo இணையம் வெளியிட்டுள்ள தகவலில், அவுஸ்திரேலிய சுற்றுப்பணத்திற்கு பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் நடராஜன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். நடராஜனின் உடல்நிலையை கிரிக்கெட் அகடமி மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நடராஜன் உடல்நிலை குறித்த முழு அறிக்கை எங்களுக்கு கிடைக்கவில்லை. காயம் சற்று பெரிதாக இருந்தால் அவரை ஹைதராபாத் அணியிலிருந்து விடுவிக்க அணி நிர்வாகத்திடம் பிசிசிஐ முறையிடும்

நடராஜன் மீண்டும் தேசிய கிரிக்கெட் அகடமியில் தனது உடல்தகுதியை நிரூபிக்க வேண்டியிருக்கும் என்று கிரிக்கெட் அகடமி நிர்வாகி தெரிவித்துள்ளார் என Cricinfo இணையம் தெரிவித்துள்ளது.

IPL தொடரிலிருந்து லியாம் லிவிங்ஸ்டன் திடீர் விலகல்

இதனிடையே, நடராஜன் உடல்நிலை குறித்து அந்த அணியின் தலைவர் டேவிட் வோர்னர் கூறுகையில்,

“முழங்கால் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளிலும் நடராஜன் விளையாட மாட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்தால் அவர் 7 நாட்களுக்கு உட்காரத்தான் வேண்டும். பிறகு சுய தனிமைப்படுத்தலுக்கு திரும்ப வேண்டும்

இப்போதைக்கு அவரது உடல் தகுதியை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். உடற்கூற்று மருத்துவர்கள் அவர் முழங்காலை நன்றாக ஆய்வு செய்கின்றனர், ஆனால், ஒரு கட்டத்தில் அவர் ஸ்கேன் செய்து கொள்ளத்தான் வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

எனவே, நடராஜன் உபாதை காரணமாக விலகுவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மட்டுமல்லாது அவருக்கும் பின்னடைவாகவே அமையவுள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் யோர்க்கர் பந்துவீச்சில் கலக்கி இந்திய அணியிலும் இடம்பிடித்த நடராஜனுக்கு இந்த பருவம் மிகுந்த ஏமாற்றமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது

அதுமாத்திரமின்றி, எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலக கிண்ணப் போட்டியில் நடராஜனுக்கு தன்னை நிரூபிக்க சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது.

T20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

இதில், இந்திய T20 அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரை அடுத்து 3ஆவது வேகப் பந்துவீச்சாளராக இடம்பிடிக்க அருமையான வாய்ப்பு நடராஜனுக்கு காணப்பட்டது.

ஏனெனில், அவுஸ்திரேலிய தொடரில் அறிமுகமானதிலிருந்து T20 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய மண்ணில் நடராஜன் அற்புதமாக ஜொலித்திருந்தார்.

ஆனாலும், தற்போதைய நிலையில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரை விடுத்து, சென்னை அணியின் தீபக் சஹார், விராட் கோஹ்லியின் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடும் மொஹமட் சிராஜ் ஆகியோர் அற்புதமாக தமது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆகவே, இவர்களை பின்தள்ளி இந்திய உலக கிண்ண அணியில் இடம்பிடிக்க முடியுமாக இருந்தால், நடராஜன் IPL போட்டிகளில் ஜொலிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஒன்று காணப்பட்டது. 

அப்படியான இக்கட்டான நிலைமைக்கு மத்தியில் நடராஜனுக்கு ஏற்பட்ட முழங்கால் உபாதை என்பது மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…