கவீஷா டில்ஹாரியின் சகலதுறை பிரகாசிப்புடன் விமானப்படை A அணிக்கு வெற்றி

Women’s Inter-Club Division I 50-over Cricket Tournament 2022

186

இலங்கை கிரிக்கெட்  சபையின் ஏற்பாட்டில் இன்று (19) நடைபெற்ற மகளிருக்கான டிவிஷன் 1 உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் கவீஷா டில்ஹாரியின் சகலதுறை பிரகாசிப்பின் உதவியுடன் விமானப்படை A அணி  27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

விமானப்படை A அணி வெற்றியினை இன்றைய தினம் பதிவுசெய்ததுடன், கடற்படை அணி மற்றும் விமானப்படை B அணிகளும் தங்களுடைய வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.

>>கொல்கத்தா அணிக்கு எதிராக ஹெட்ரிக் சாதனை படைத்த சஹால்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டு கழகம் (B)

கோல்ட்ஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக அவர்களுடைய சொந்த மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் லங்கா மெண்டிஸ், சாதனி தெடுவங்குமார ஆகியோரின் அபார பந்துவீச்சு மற்றும் மால்கி மாதராவின் அரைச்சதத்துடன் விமானப்படை B அணி தங்களுடைய முதலாவது வெற்றியை பதிவுசெய்தது.

கோல்ட்ஸ் அணி சார்பாக கசுனி நத்யங்கா அதிகபட்சமாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் லங்கா மெண்டிஸ், சாதனி தெடுவங்குமார ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணிசார்பில் மால்கி மாதரா 68 ஓட்டங்களையும், ஹிருஷி பீரிஸ் 40 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

சுருக்கம்

  • கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 146/10 (46.0), கசுனி நத்யங்கா 68, சாதனி தெடுவங்குமார 11/3, லங்கா மெண்டிஸ் 24/3
  • விமானப்படை விளையாட்டு கழகம் (B) – 147/4 (42.3), மால்கி மாதரா 68, உதார சேதனி பண்டார 13/1
  • முடிவு – விமானப்படை மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

இராணுவ விளையாட்டு கழகம் (B) எதிர் கடற்படை விளையாட்டு கழகம்

வெலிசறை கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், கடற்படை அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ அணி வெறும் 39 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நிலையில், கடற்படை அணி 10 ஓவர்களில் விக்கெட்டிழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது. இந்த போட்டியானது மழைக்காரணமாக 22 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

  • இராணுவ விளையாட்டு கழகம் (B) – 39/9 (22), ஆயிஸா சந்தமாலி 18, இனோகா ரணவீர 4/3, உமேஷா திமிஷானி 11/2
  • கடற்படை விளையாட்டு கழகம் – 41/0 (10), ஹாஸினி பெரேரா 22*, பிரசாதினி வீரகொடி 19*
  • முடிவு – கடற்படை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

விமானப்படை விளையாட்டு கழகம் (A) எதிர் சீனிகம கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியானது அணிக்கு தலா 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சீனிகம அணியை எதிர்த்தாடிய விமானப்படை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

சுருக்கம்

  • விமானப்படை விளையாட்டு கழகம் (A) – 94/8 (20), சாமரி பொல்கம்பொல 23, ஓசதி ரணசிங்க 21, கவீஷா டில்ஹாரி 18/3, சச்சினி நிசன்சலா 15/2
  • சீனிகம கிரிக்கெட் கழகம் – 67/8 (20) – சச்சினி நிசன்சலா 24, கவீஷா டில்ஹாரி 22, மல்ஷா செஹானி 7/3, தாருகா செஹானி 10/2
  • முடிவு – விமானப்படை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

இதேவேளை இன்று நடைபெறவிருந்த மற்றுமொரு போட்டியான சிலாபம் மேரியன்ஸ் மற்றும் இராணுவ விளையாட்டு கழக (A) அணிகளுக்கு இடையிலான போட்டிாயனது மழைக்காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<