சுகததாச உள்ளக நீச்சல் அரங்கில் நடைபெற்ற 2௦16ஆம் ஆண்டுக்கான தேசிய நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளின் முடிவில், ஆடவர் சிரேஷ்ட பிரிவில் KWA (Killer Whale Aquatics) கழகம் தேசிய நீச்சல் சம்பியன் பட்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டது. அதே நேரம் நடப்பு சம்பியனான விசாகா வித்தியாலயத்தை வென்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் வித்தியாலயம், மகளிர் பிரிவிற்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.  

மீண்டும் சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்ட KWA (Killer Whale Aquatics) கழகம் இம்முறை ஆடவர் பிரிவில் 423 என்ற அதிகூடிய புள்ளிகளை பெற்றுக் கொண்டது. இலங்கை கடற்படை 298.5 புள்ளைகளை பெற்று ஆடவர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

மகளிர் பிரிவில் 23௦ புள்ளிகளை பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் வித்தியாலயம் முதலிடத்தையும், 89 புள்ளிகளால் பின்னிலை பெற்றிருந்த கண்டி மாஹாமாய கல்லூரி 141 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

தேசிய மற்றும் தேசிய இளையோர் நீர்சார் சம்பியன்ஷிப் போட்டிகள் : இரண்டாம் நாள் முடிவுகள்

2016ஆம் ஆண்டுக்கான தேசிய மற்றும் இளையோர் நீர்சார் சம்பியன்ஷிப் போட்டிகள் நவம்பர் மாதம் 26ஆம் திகதி சுகததாச உள்ளக நீச்சல் தடாக அரங்கில் ஆரம்பமாயின.

தேசிய நீச்சல் போட்டிகளின் சீரேஷ்ட பிரவில் முதலாவது நாளில் இருந்தே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் வித்தியாலயம் மற்றும் KWA (Killer Whale Aquatics) கழகம்  புள்ளிகள் அடிப்டையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.   தெற்காசிய நீச்சல் போட்டிகளில் பல தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்ட மெத்திவ் அபேசிங்க காயம் காரணமாக குறித்த போட்டிகளில் பங்குபற்றவில்லை. அவருக்கு பதிலாக அவருடைய சகோதரர் கைல் அபேசிங்க போட்டியிட்டு ஆடவர்களுக்கான சிரேஷ்ட பிரிவு போட்டிகளில் சிறந்த நீச்சல் வீரராக தெரிவானார்.  

தெற்காசிய சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு இதுவரை ஏழு தங்கம்

முதன் முதலாக நடைபெறும் தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில் ரமுடி சமரகோன் இலங்கை சார்பாக முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இலங்கைக்கு மேலும் 7 தங்கப் பதக்கம்

தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்சிப் போட்டிகளின் நேற்றைய நாள் போட்டிகளில் இலங்கை அணியினர் மேலும் ஏழு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கைல் அபேசிங்க, ரீலே மற்றும் தனிநபர் நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று 8 தங்கப் பதக்கங்கள் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றி நீச்சல் போட்டி வரலாற்று புத்தகத்தில் புதிய அத்தியாயம் ஒன்றினை ஏற்படுத்தினார். 16 வயதேயான கைல் அபேசிங்க பெற்றுக்கொண்ட எட்டு தங்க பதக்கங்களில் 5 பதக்கங்கள் தனிநபர் பிரிவின் 2௦௦ மீட்டர் மேடலி, 1௦௦ மீட்டர் ப்ரீஸ்டைல், 2௦௦ மீட்டர் ப்ரீஸ்டைல், 400 மீட்டர் ப்ரீஸ்டைல் மற்றும் 5௦ மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டி நிகழ்ச்சிகளில் ஆகும்.

KWA (Killer Whale Aquatics) கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இஷானி சேனாநாயக்க மகளிர் பிரிவில் அனைத்து வகையான (5 வகை) போட்டி நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்று சிறந்த நீச்சல் போட்டி வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார். அவர் 400 மீட்டர் ப்ரீஸ்டைல், 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக், 100 மீட்டர் ப்ரீஸ்டைல், 200 மீட்டர் ப்ரீஸ்டைல் மற்றும் 800 மீட்டர் ப்ரீஸ்டைல் போன்ற போட்டிகளில் முதல் இடத்தினைப் பெற்றார்.

சிரேஷ்ட பிரிவின் மகளிர் சம்பியனாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் வித்தியாலயம் தெரிவாகியுள்ளமை வரலாற்றில் முதல் முறை என்பது சிறப்பம்சமாகும்.

ரீலே நீச்சல் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் வித்தியாலயம், குறித்த போட்டிகளில் தாம் அடைந்த வெற்றிகளின் மூலம் மொத்தமாக அதிக புள்ளிகளைப் பெற்றமையே சம்பியன் பட்டத்தைப் பெறுவதற்கு முக்கிய காரணியாக இருந்தது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் வித்தியாலயத்தின் 16 வயதேயான வீராங்கனை வினோலி களுவாராச்சி 2 தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ரீலேயில் பெற்றுக் கொடுத்த வெற்றி என்பனவற்றின்மூலம் அவ்வணியின் முக்கிய போட்டியாளராக திகழ்ந்தார்.

400 மீட்டர் மேடலி ரீலே, 800 மீட்டர் ப்ரீஸ்டைல் ரீலே, 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரீலே, 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரீலே மற்றும் 200 மீட்டர் மேடலி ரீலே போன்ற மகளிர் நீச்சல் போட்டிகளில் முழு ஆதிக்கத்தையும் செலுத்திய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் வித்தியாலயம், அவை அணைத்திலும் தங்கம் வென்றது.

தேசிய கனிஷ்ட வெற்றியாளர்களாக விசாகா மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரிகள்  

விசாகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரிகள் தேசிய கனிஷ்ட பிரிவு நீச்சல் போட்டிகளில் வெற்றியாளர்களாகத் தெரிவாகின. விசாகா வித்தியாலயம் மகளிர் பிரிவில் 16௦ புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றதோடு, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே மாஹாமாய மகளிர் கல்லூரியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.

ஆடவர் பிரிவில், கொழும்பு புனித ஜோசப் கல்லூரி 158 புள்ளிகளுடன் முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை 150.5 புள்ளிகளுடன் கொழும்பு ஆனந்த கல்லூரியும் பெற்றுக்கொண்டன.

15 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் மூன்று தங்க பதக்கங்கள் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுக்கொண்ட அவே மரியாள் மகளிர் பாடசாலையை சேர்ந்த சேனலி வீரவன்ச சிறந்த நீச்சல் வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆடவர் பிரிவில், புனித ஜோசப் கல்லூரியின் ஷவிந்த டி சில்வா சிறந்த நீச்சல் போட்டி வீரராக தெரிவு செயப்பட்டார். அவர் 5௦ மீட்டர் பெக்ஸ்ட்ரோக் போட்டியில் தங்க பதக்கத்தையும், தனிநபர் பிரிவில் 2௦௦ மீட்டர் மேடலி மற்றும் 1௦௦ மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுக் கொண்டார்.

ஆடவர் சிரேஷ்ட பிரிவு நீச்சல் போட்டிகளின் இறுதி நிலை

அணி புள்ளி
1 KWA (Killer Whale Aquatics) 423
2 இலங்கை கடற்படை 298.5
3 கொழும்பு புனித ஜோசப் கல்லூரி 77
4 திருத்துவ கல்லூரி கண்டி 56
5 லைசியம் சர்வதேச பாடசாலை வத்தளை 45

மகளிர் சிரேஷ்ட பிரிவு நீச்சல் போட்டிகளின் இறுதி நிலை

அணி புள்ளி
1 ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  மகளிர் வித். 230
2 மாமய மகளிர் பாடசாலை கண்டி 141
3 மிவ்சியஸ் மகளிர் பாடசாலை 122
4 இலங்கை கடற்படை 112
5 விசாக்கா வித்தியாலயம் 109

ஆடவர் கனிஷ்ட பிரிவு நீச்சல் போட்டிகளின் இறுதி நிலை

அணி புள்ளி
1 புனித ஜோசப் கல்லூரி 158
2 ஆனந்தகல்லூரி 150.5
3 ரோயல் கல்லூரி 76
4 கேட்வே கல்லூரி கொழும்பு 65.5
5 புனித பேதுரு கல்லூரி 65

மகளிர் கனிஷ்ட பிரிவு நீச்சல் போட்டிகளின் இறுதி நிலை

அணி புள்ளி
1 விசாக்கா வித்தியாலயம் 160
2 மாமய மகளிர் பாடசாலை கண்டி 91
3 சிறிமாவோ பண்டாரநாயக்க 74
4 சர்வதேச லைசியம் பாடசாலை வத்தள 74
5 திருக்குடும்ப கன்னியர் மடம் 52