விளையாட்டில் உலகை வென்ற சீனா கிரிக்கெட்டில் தடுமாறுகின்றது

290

சர்வதேச அரங்கில் பல்வேறு விளையாட்டுக்களிலும் சாதித்திருக்கும் ஒரு நாடு சீனா. எனினும், கிரிக்கெட் விளையாட்டை நோக்கும் போது சீனாவின் நிலை மிகவும் பரிதாபகரமாக காணப்படுகின்றது.

பாகிஸ்தானின் வெற்றியை பறித்த உஸ்மான் கவாஜாவின் துடுப்பாட்டம்

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் …

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அடுத்த T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்காக, B குழுவைச் சேர்ந்த ஆசியப் பிராந்திய அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்து மலேஷியாவில் நடாத்தி வரும் தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் ஆசியாவில் உள்ள ஏழு நாடுகளின் தேசிய கிரிக்கெட் அணிகள் பங்கெடுத்து வருகின்றன.

இத்தகுதிகாண் தொடரில் ஏழு நாடுகளில் ஒன்றாக சீனாவின் தேசிய கிரிக்கெட் அணியும் பங்கெடுத்து வருகின்றது. எனினும் அவ்வணி தொடரில் சிறப்பான ஓட்ட எண்ணிக்கை ஒன்றை பதிவு செய்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றது.

இந்த தொடரில் தமது ஆரம்ப போட்டியில், தாய்லாந்து அணியினை எதிர்கொண்ட சீன கிரிக்கெட் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 9 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 35 ஓட்டங்களை மட்டுமே குவிந்திருந்தனர். இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்கான 36 ஓட்டங்களை தாய்லாந்து அணி வெறும் 2.4 ஓவர்களில் அடைந்தது.  

மற்றுமொரு போட்டியில் பூட்டானை எதிர்கொண்ட சீன வீரர்கள் 45 ஓட்டங்களையே மொத்தமாக குவித்ததுடன், குறிப்பிட்ட போட்டியின் வெற்றி இலக்கினை பூட்டான் 3.5 ஓவர்களில் அடைந்தது.

பாதுகாப்பு பிரச்சினைக்கு பின்னர் பங்களாதேஷ் செல்லவுள்ள அலெக்ஸ் ஹேல்ஸ்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப …

தொடர்ந்து சீனா, மியன்மார் அணிக்கெதிராக 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இதேநேரம் நேபாளம், சிங்கப்பூர் ஆகியவற்றின் நாடுகளுக்கு எதிராக 26 ஓட்டங்களை மட்டுமே மொத்தமாக பெற்றுக் கொண்டு மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தது. சீனா இப்படியாக தொடரில் பெற்ற மொத்த ஓட்டங்கள் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பெறும் தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை விட குறைவாகவே இருக்கின்றது.

1850களின் பிற்பகுதியில் சீனாவில் கிரிக்கெட் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 150 வருடங்கள் கடந்த போதிலும் கிரிக்கெட் விளையாட்டில் கத்துக்குட்டி அணிகளான பூட்டான், மியன்மார், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு எதிராக சீன அணி மோசமான பதிவுகளை காட்டியிருப்பது அந்நாட்டின் கிரிக்கெட் விளையாட்டு பாதாள குழிக்குள் செல்வதையே சுட்டிக் காட்டுகின்றது.  

எனினும், உலகின் அனைத்து துறைகளிலும் திறமை காட்டும் சீனர்கள் கிரிக்கெட் விளையாட்டிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டினால் உலகின் எந்த அணிக்கும் சவால்விடுக்க கூடிய ஒரு கிரிக்கெட் அணியாக உருவாகுவார்கள் என்பதில் ஐயமில்லை.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க..