சீரற்ற காலநிலை, சர்ச்சைகளுக்கு மத்தியில் அரங்கேறி வரும் உலகக் கிண்ணம்

90

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் மிக்க தொடராக இடம்பெற்ற இம்முறை உலகக் கிண்ணத்தில் வருணபகவான் அடிக்கடி புகுந்து சுவாரஷ்யத்தை குறைத்து விடுகின்றமை கிரிக்கெட் உலகின் அனைத்து தரப்பினருக்கும் பெரும் தலையிடியாக உள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டிருக்கிறன. மேலும் சில ஆட்டங்களில் மழை தாக்கத்திற்கு இடையே முடிவு கிடைத்திருக்கிறன. இங்கிலாந்தில் உள்ள வானிலையை பொறுத்தவரை உலகக் கிண்ணத் தொடர் முழுவதுமே மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வீரர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் எரிச்சலுக்குள்ளாகி இருக்கிறார்கள்.

உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்…

இதே சீதோஷ் நிலை தொடர்ந்தால், லீக் சுற்று முடிவில் சில அணிகள் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அரையிறுதி, இறுதிப் போட்டிகளிலும் இதே நிலை நீடித்தால் என்ன செய்வார்கள்? என்ற குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.

முன்னணி அணிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் மழை

தற்போது இங்கிலாந்தில் கடும் மழை பெய்து வருகிறது. இங்கிலாந்து முழுக்க மிக மிக மோசமாக மழை பெய்து வருவதால் உலகக் கிண்ணத் தொடரில் அதிகமான ஆட்டங்கள் மோசமாக தடைப்பட்டு இருக்கிறன. இதுவரை மொத்தம் நான்கு போட்டிகள் உலகக் கிண்ணத்தில் கைவிடப்பட்டன. அதன்படி, இலங்கைபங்களாதேஷ், இலங்கைபாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துஇந்தியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டதுடன், இதில் இலங்கை அணி விளையாடவிருந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனான இரண்டு போட்டிகளும் மழை காரணமாக முழுமையாகக் கைவிடப்பட்டன.

எனவே, இவ்வாறு மழையால் போட்டிகள் ரத்து செய்யப்படும்போது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்படுகிறது. ஆனால், முன்னணி அணிகளுக்கு இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது,

டோனியின் கையுறை சர்ச்சை

Image Courtesy – Getty image

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற லீக் ஆட்டத்தின் போது இந்திய விக்கெட் காப்பாளர் டோனி இராணுவ முத்திரை பதித்த கையுறையை (கிளோவ்ஸ்) பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இத்தகைய முத்திரையுடன் கூடிய கையுறையை பயன்படுத்துவது விதிமுறைகளுக்கு எதிரானது என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (.சி.சி.) கண்டனம் தெரிவித்தது.

எனினும், குறித்த கையுறையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் சபை விடுத்த வேண்டுகோளை .சி.சி நிராகரித்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனிப்பட்ட குறியீடுகளையோ, விளம்பரங்களையோ பயன்படுத்த அனுமதி கிடையாது, இது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் .சி.சி தெளிவுப்படுத்தியது.

இந்த நிலையில் .சி.சி.யின் விளக்கத்தை இந்திய கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்ள, கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி புதிய கையுறையுடன் விளையாடினார்.

பந்தை தன்மையை மாற்றினாரா சம்பா?  

Image Courtesy – Getty image

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் அடம் சம்பா, பந்தின் தன்மையை மாற்றியதாக சர்ச்சை எழுந்தது.  

குறித்த போட்டியில் 6 ஓவர்களில் 50 ஓட்டங்களை வாரி வழங்கிய அவர், எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. எனினும், சம்பாவின் ஒருசில நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

Photos : CWC19 – Sri Lanka training session ahead of Australia match

ThePapare.com | 13/06/2019 Editing and re-using images without permission of ThePapare.com…

ஒரு ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாக அவர் தன்னுடைய காற்சட்டை பையில் கையை விட்டு ஏதோ ஒன்றை எடுத்து பந்து மீது வைப்பது போன்று வீடியோ காட்சிகள் வெளியாகியன. இவ்வாறு அவர் தொடர்ந்து செய்வதை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில், போட்டியின் பிறகு குறித்த சம்பவம் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது. பந்தின் தன்மையை மாற்றுவதற்காக உப்பு காகிதத்தைக் கொண்டு பந்தின் தன்மையை சம்பா மாற்றினாரா? என்று பல கேள்விகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது, அடம் சம்பா தனது காற்சட்டைப் பையில் கையை சூடாக வைப்பதற்கானஹேண்ட் வோர்மர்என்ற பொருளை வைத்துக் கொண்டு பந்து வீசுவார்” என கூறினார்.

சேஷார்ட்டுக்கு எதிராக சதி செய்ததா ஆப்கான்?

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த விக்கெட் காப்பாளரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான மொஹமட் ஷேசார்ட், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டங்களில் விளையாடினார்.

நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற லீக் ஆட்டத்திற்கு முன்பாக உடல் தகுதியுடன் இல்லை என்று அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இடது முழங்காலில் காயம் அடைந்துள்ள அவர் தொடரில் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.  

இந்த நிலையில் மொஹமட் ஷேசார்ட், நான் விளையாடும் அளவுக்கு உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். ஆனால், உடல் தகுதியுடன் இல்லை என்று அறிவித்தது ஏன்? என்பது இன்னும் எனக்கு புரியவில்லை. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையில் உள்ள சிலர் எனக்கு எதிராக சதிவேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.  

இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை செய்தி அதிகாரி அசத்துல்லா கான் கருத்து வெளியிடுகையில், மொஹமட் ஷேசார்ட் சொல்வது முற்றிலும் தவறானது. அவரது மருத்துவ அறிக்கை .சி.சி.யிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டார். உடல் தகுதி இல்லாத வீரரை விளையாட வைக்க முடியாது. இனிமேல் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட முடியாதே என்ற விரக்தியில் அவர் பேசுவதாக நினைக்கிறேன். உடல் தகுதி விடயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

சங்கக்காரவின் சாதனையை முறியடித்த கிரிஸ் கெயில்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார்…

பந்து பட்டும் கீழே விழாத பெய்ல்ஸ்

Image Courtesy – Getty image

இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வோர்னர் ஒரு ஓட்டத்தை எடுத்திருந்த போது இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா வீசிய பந்து ஸ்டம்பைத் தாக்கியது. ஆனால், ஸ்டம்பின் மீது இருந்த பெய்ல்ஸ் விழவில்லை. இதனால், அதிஷ்டவசமாக டேவிட் வோர்னர் ஆட்டமிக்கவில்லை. நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இதுபோல் பல தடவைகள் பெய்ல்ஸ் விழாமல் இருந்த சந்தர்ப்பங்கள் பதிவாகின.  

இது குறித்து இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி கருத்து தெரிவிக்கையில், சர்வதேச ஒரு நாள் போட்டியில் இதுபோல் நடப்பதை நான் எதிர்பார்க்கவில்லை. தொழில்நுட்பம் சிறப்பானது தான். வேகப் பந்துவீச்சாளர் வீசிய பந்து ஸ்டம்பை தாக்கியும் பெய்ல்ஸ் விழாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது மாதிரி நடப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஸ்டம்பில் என்ன கோளாறு இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுபோன்று நடப்பதை எந்த அணியும் விரும்பாது. கடந்த காலங்களில் இதுபோல் அதிகம் நடந்ததை நான் பார்த்ததில்லை” என்று கூறினார்.

இதுதொடர்பில் .சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2015 உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து எல்..டி பெய்ல்ஸை பயன்படுத்தி வருகிறோம். எனவே கடந்த 4 வருடங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகள் உள்ளடங்கலாக 1000 போட்டிகளில் இந்த பெய்ல்ஸை தான் பயன்படுத்தினோம். எனவே, இந்த விடயத்தில் எந்தவித மாற்றமும் செய்ய மாட்டோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை எதிர்கொள்வதில் அச்சமடையும் விராத் கோஹ்லி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக எதிர்வரும்…

.சி.சியை விமர்சித்த வர்ணனையாளர்

Image Courtesy – Getty image

மேற்கிந்திய தீவுகள்அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நடுவர்கள் ஏராளமான தவறான முடிவுகளை வழங்கியிருந்தனர். குறிப்பாக அவுஸ்திரேலியாவுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதால் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை சந்திக்க நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நடுவர்கள் முடிவு குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் கார்லோஸ் பிராத்வைட் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதேபோல, போட்டியின்போது வர்ணனை செய்து கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரான மைக்கல் ஹோல்டிங் நடுவர்களின் முடிவு கொடூரமானது என்று தெரிவித்திருந்தார். இதனால் .சி.சி வர்ணனையாளர்கள் நேரடி ஒளிபரப்பின் போது நடுவர்கள் குறித்து விமர்சனம் செய்யும்போது கவனமாக பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதுகுறித்து மைக்கல் ஹோல்டிங்கிற்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் அனுப்பவும் .சி.சி நடவடிக்கை எடுத்தது.

எனது வெற்றிக்கு மனைவி தான் காரணம்: வோர்னர் பெருமிதம்

பாகிஸ்தானுடனான போட்டியில் சதமடித்து…

இதனால் கடுங்கோபம் அடைந்த அவர், கால்பந்து போட்டியாக இருந்திருந்தால் நடுவர் வீட்டுக்கு போய் இருப்பார். கிரிக்கெட்டில் நான் வீட்டிற்கு செல்ல வேண்டுமா? என்று காட்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மைக்கல் ஹோல்டிங் கூறுகையில், அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் நடுவர்கள் செய்த தவறுகளை பிஃபாவின் நடுவர்கள் செய்திருந்தால், அவர்கள் வீட்டிற்கு சென்றிருப்பார்க்ள. அவர்கள் இன்னொரு உலகக் கிண்ணத்துக்கான போட்டியில் நடுவராக செயல்பட முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராக, கிரிக்கெட் உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நடுவர்கள் தவறுகள் செய்தாலும், அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளதா? ஐசிசி கூறிய வேண்டுகோளில் எனக்கு உடன்பாடில்லை. இதனால் நான் அடுத்த போட்டிக்கு செல்வதற்குப் பதிலாக சொந்த நாடு திரும்ப வேண்டுமா? என்பதை தெரியப்படுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<