“நோ போல்” சர்ச்சையுடன் மும்பை அணிக்கு முதல் வெற்றி

861
Image Courtesy - IPLT20.COM

ஐ.பி.எல்.  தொடரில் நேற்று (28) பெங்களூரில் நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் லசித் மாலிங்கவின் அபார பந்து வீச்சின் மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மாலிங்கவுடன் மும்பை அணியில் இணைந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடிவரும் மும்பை…….

இந்தப் போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றிருந்த போதும், இறுதி ஓவரின் இறுதிப்பந்தில் லசித் மாலிங்க வீசிய “நோ போல்” (No Ball) பந்தினை நடுவர்கள் கவனிக்க தவறியதன் காரணமாகவே போட்டியின் திசை மாறிவிட்டது என சமுகவலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று பெங்களூர் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. இதில், ரோஹித் சர்மா 48 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 38 ஓட்டங்களையும் பெற்றதுடன், ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 32 ஓட்டங்களை விளாசினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி ஒரு கட்டத்தில் வெற்றிபெறும் நிலையில் இருந்தாலும், பும்ராவின் அபார பந்து வீச்சால் சற்று நெருக்கடிக்கு உள்ளானது. இறுதி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் மாலிங்க பந்து வீசினார்.

இந்த ஓவரின் முதல் பந்தினை சிவம் டுபே சிக்ஸருக்கு அனுப்பிய போதும், அடுத்த நான்கு பந்துகளையும் மாலிங்க சிறப்பாக வீசினார். இறுதிப்பந்தில் 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், பெங்களூர் அணியால் ஒரு ஓட்டத்தையும் பெற முடியவில்லை. பின்னர் போட்டி நிறைவடைந்து வீரர்கள் அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர்.  இதனை தொடர்ந்து, காட்டப்பட்ட மறு ஒளிபரப்பில் இறுதிப்பந்து நோ போல் என தெரியவந்தது.

பேசுபொருளாக மாறியுள்ள அஸ்வினின் தலைமைத்துவம்

ஐ.பி.எல். தொடரில் இம்முறை ஆரம்பத்திலிருந்து அதிகமாக……

எவ்வாறாயினும், கள நடுவர்கள் அதனை கவனிக்காத நிலையில், மும்பை அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது. எனினும், போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, “நாம் உள்ளூர் போட்டியில் விளையாடவில்லை. ஐ.பி.எல். தொடரில் விளையாடுகின்றோம். நடுவர்கள் கவனமாக இறுதிப்பந்தை பார்த்திருக்க வேண்டும். அதுவொரு நோ போல் பந்து. குறித்த பந்தை சரியாக அவதானித்திருந்தால் போட்டியின் திசை மாறியிருக்கும். நடுவர்கள் அவதானமாக இருக்கவேண்டும்” என கூறியிருந்தார்.

போட்டி சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் – 187/7 (20), ரோஹித் சர்மா 48 (33), சூர்யகுமார் யாதவ் 38 (24), ஹர்திக் பாண்டியா 32 (14), யுஸ்வேந்திர சஹால் 32/4

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 181/5 (20), ஏபி டி வில்லியர்ஸ் 70* (41), விராட் கோஹ்லி 46 (32), ஜஸ்பிரிட் பும்ரா 20/3

முடிவு – மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<