பின் தலையில் பந்து பட்டு காயமடைந்தார் கவ்ஷல் சில்வா

1559
Kaushal Silva

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கவ்சல் சில்வா நேற்று கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது பின் தலையில் பந்து பட்டு காயம் அடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றறுள்ளது. இதன் பின் அவசரமாக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கவ்ஷல் சில்வாவிற்கு “கெட் ஸ்கேன்” (CAT Scan) பரிசோதனை செய்யபட்டது. அதன் பின் கண்டியில் இருந்து விஷேட ஹெலி மூலம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப கட்ட “கெட் ஸ்கேன்” (CAT Scan) பரிசோதனையின் படி கவ்ஷல் சில்வா ஆபத்தற்ற நிலையில் உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

நேற்றைய பயிற்சியின் போது அவர் ஷோர்ட் லெக் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது தினேஷ் சந்திமால் அடித்த பந்து கவ்ஷல் சில்வாவின் பின் தலையில் பட்டு காயம் அடைந்துள்ளார். அவர் பந்து தன் தலையில் படுவதில் இருந்து தன்னை காக்க முயன்றாலும் அது பலனளிக்கவில்லை.

அவுஸ்திரேலியா அணி வீரர் பிலிப் ஹியூஸின் மரணத்தின் பின் விஷேடமாக உருவாக்கப்பட்ட ஹெல்மட்டையே கவ்ஷல் சில்வா அணிந்திருந்தார் ஆனாலும் சந்திமல் அடித்த பந்து ஹெல்மட்டின் கீழ் விளிம்பினூடே கவ்ஷல் சில்வாவின் பின் தலையைப் பதம் பார்த்துள்ளது என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சகவீரர்கள் கூறுகையில் “அவர் பிலிப் ஹியூஸின் மரணத்தின் பின் விஷேடமாக உருவாக்கப்பட்ட ஹெல்மட்டை அணியாமல் இருந்தால் காயம் இன்னும் கணிசமாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்கள்.

 இங்கிலாந்துக்கு எதிராக 20 பேர் கொண்ட உத்தேச இலங்கை டெஸ்ட் குழாம் 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு பயிற்சி பெரும் வகையில் கண்டி பல்லேகலே மைதானத்தில் இடம்பெற்ற 2 நாள் பயிற்சிப் போட்டியின் போதே கவ்ஷல் சில்வா இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு ஆளாகியுள்ளார்.